பெர்ரிசயனைடு
பெர்ரிசயனைடு (Ferricyanide) என்பது ஓர் அயனியாகும் [Fe(CN)6]3− என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் இந்த அயனி அடையாளப்படுத்தப்படுகிறது. அரிய இந்த அயனி அறுசயனோபெர்ரேட்டு என்ற பெயராலும் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் முறையான பெயரிடல் முறையில் அறுசயனிடோபெர்ரேட்டு(III) என்பது இதன் பெயராகும். பெர்ரிசயனைடு அயனியின் மிகவும் பொதுவான உப்பு பொட்டாசியம் பெர்ரிசியனைடு ஆகும். இவ்வுப்பு கரிம வேதியியலில் ஓர் ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படும் ஒரு சிவப்பு நிறப்படிகப் பொருளாகும்.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(3+) அறுசயனைடு
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
அறுசயனிடோபெர்ரேட்டு(III) | |
வேறு பெயர்கள்
பெர்ரிக் அறுசயனைடு; அறுசயனிடோபெர்ரேட்டு(3−); அறுசயனோபெர்ரேட்டு(III)
| |
இனங்காட்டிகள் | |
13408-62-3 | |
ChEBI | CHEBI:5020 |
ChemSpider | 388349 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C00324 |
பப்கெம் | 439210 |
| |
பண்புகள் | |
[Fe(CN)6]3− | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | அறுசயனோநிக்கலேட்டு(III) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பண்புகள்
தொகு[Fe(CN)6]3− அயனி என்பது ஆறு சயனைடு ஈந்தணைவிகள் எண்முக வடிவத்தில் பிணைக்கப்பட்ட Fe3+ மையத்தைக் கொண்டுள்ளது. அணைவில் Oh சமச்சீர் உள்ளது. இரும்பு குறைந்த சுழல் மற்றும் தொடர்புடைய பெர்ரோசயனைடு அயனியாக [Fe(CN)6]4− எளிதில் குறைக்கப்படுகிறது. இது ஒரு பெர்ரசு அயனி (Fe2+) வழிப்பெறுதியாகும். இந்த ஏற்றவொடுக்க இணை மீளக்கூடியதாகும் இது Fe-C பிணைப்புகளை உருவாக்கவோ அல்லது உடைக்கவோ செய்வதில்லை:
- [Fe(CN)6]3− + e− ⇌ [Fe(CN)6]4−
இந்த ஏற்றவொடுக்க இணை மின் வேதியியலில் ஒரு தரநிலையாகும்.
பொட்டாசியம் சயனைடு போன்ற முதன்மை குழு சயனைடுகளுடன் ஒப்பிடும்போது, சயனைடு அயனிக்கும் (CN− ) Fe3+ அயனிக்கும் இடையே உள்ள வலுவான பிணைப்பு காரணமாக பெர்ரிசயனைடுகள் மிகவும் குறைவான நச்சுத்தன்மை கொண்டவையாகத் திகழ்கின்றன. இவை கனிம அமிலங்களுடன் வினைபுரிந்து, அதிக நச்சுத்தன்மை வாய்ந்த ஐதரசன் சயனைடு வாயுவை வெளியிடுகின்றன.
பயன்கள்
தொகுஇரும்பு(II) உப்புகளுடன் பெர்ரிசியனைடு சேர்த்து சூடுபடுத்தப்படும்போது பாரம்பரிய நிறமான புருசியன் நீலம் என்ற நீல அச்சுப்படிகளில் பயன்படுத்தப்படும் நிறமி கிடைக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Gail, E.; Gos, S.; Kulzer, R.; Lorösch, J.; Rubo, A.; Sauer, M.; Kellens, R.; Reddy, J.; Steier, N. (2005), "Cyano Compounds, Inorganic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a08_159.pub3