பெர்ரோ-பெர்ரி-ஆர்ன்பிளெண்டு
கால்சியம்- ஆம்பிபோல் கனிமம்
பெர்ரோ-பெர்ரி-ஆர்ன்பிளெண்டு (Ferro-ferri-hornblende) ☐Ca2(Fe2+4Fe3+)(Si7Al)O22(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.
பெர்ரோ-பெர்ரி-ஆர்ன்பிளெண்டு Ferro-ferri-hornblende | |
---|---|
பொதுவானாவை | |
வகை | இனோசிலிக்கேட்டு ஆம்பிபோல் மீக்குழு |
வேதி வாய்பாடு | ☐Ca2(Fe2+4Fe3+)(Si7Al)O22(OH)2 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
மேற்கோள்கள் | [1][2] |
பெர்ரோ-பெர்ரி-ஆர்ன்பிளெண்டு கனிமம் அத்தியாவசிய காலியிடத்தைக் கொண்டுள்ளது (☐). இது இத்தாலியின் பியத்மாந்து மண்டலத்தில் உள்ள டொரினோ நகரத்தின் கேனவேசு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.[1]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெர்ரோ-பெர்ரி-ஆர்ன்பிளெண்டு கனிமத்தை Ffhbl[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Oberti, R., Boiocchi, M., Hawthorne, F.C., Ball, N.A., Pagano, R., and Pagano, A., 2015. Ferro-ferri-hornblende, IMA 2015-054. CNMNC Newsletter No. 27, October 2015, 1227; Mineralogical Magazine 79, 1229–1236
- ↑ "Ferro-ferri-hornblende: Ferro-ferri-hornblende mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.