பெற்றோரின் பெற்றோர்
பெற்றோரின் பெற்றோர் (Grandparent) அல்லது பாட்டன் பாட்டி என்ப்படுவோர், நமது தாய், தந்தையரின் பெற்றோர்கள் ஆவர். பெற்றோரின் தந்தையை பாட்டன் எனவும் பெற்றோரின் தாயை பாட்டி எனவும் அழைப்பர். அதேவேளை பெற்றோரின் பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் பிள்ளைகளை பேரன் (ஆண் பிள்ளை), பேர்த்தி(பெண் பிள்ளை) எனவும் அழைப்பதுண்டு.[1][2][3]

மேற்கத்தேய கலாச்சாரம் தவிர்ந்த வேறு கலாச்சாரங்களில் பெற்றோரின் பெற்றோர்கள்
தொகுகிழக்காசிய கலாச்சாரங்களில் பெற்றோரின் பெற்றோர் இளையோருக்கு நல்ல முன்மாதிரியாகவும், சமூகத்தில் உயர்ந்தவர்களாகவும் முக்கிய அங்கத்தவர்களாகவும், மதிக்கப்பட்டனர். மேற்கத்தேய கலாச்சாரம் தவிர்ந்த வேறு கலாச்சாரங்களில் பெற்றோரின் பெற்றோர்களுக்கு தத்தமது குடும்ப விடயங்களில் அதிகாரம் செலுத்தக்கூடிய தன்மை காணப்பட்டது, குறிப்பாக சிறுவர்களின் போக்கைப் பற்றியும் அச்சிறுவர்களைக் கண்காணிக்கவும், அவர்களின் போக்கைப்பற்றி மதிப்பிடவும் அவர்களால் முடிந்தது. இவ்வாறானதொரு கலாச்சார முறை மேற்கத்தேய கலாச்சாரத்தில் காணப்படாமையால், அதன் விளைவாக கருக் குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Zhavoronkov, Alex (2013-07-02). "13 Reasons Why We Will Live Longer Than Our Parents". Huffington Post (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2018-08-23.
- ↑ Wong, Kate. "The Mysterious Downfall of the Neandertals". Scientific American. Retrieved 2013-03-24.
- ↑ Caspari, R. (2012). "The Evolution of Grandparents". Scientific American 22 (2): 38–43. doi:10.1038/scientificamericanhuman1112-38. பப்மெட்:21827124.