பெலாசுசிக் மதில் சுவர்

ஏதென்ஸின் அக்ரோபோலிசில் உள்ள பண்டைய சுவர்

பெலாசுசிக் சுவர் அல்லது பெலாஸ்ஜியன் கோட்டை அல்லது என்னேபிலோன் (Pelasgic wall or Pelasgian fortress or Enneapylon கிரேக்கம் : Εννεαπύλον; ஒன்பது-வாயில்) என்பது ஏதென்சின் அக்ரோபோலிசில் உள்ள பாறையின் உச்சியை சமன் செய்து, பெலாஸ்ஜியர்களால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் ஒரு நினைவுச்சின்னமாகும். துசிடிடீசு [1] மற்றும் அரிஸ்டாஃபனீஸ் [2] இதை " பெலர்கிகான் ", "ஸ்டார்க் சுவர் அல்லது இடம்" என்று அழைத்துள்ளனர். "பெலர்கிகோன்" என்பது அக்ரோபோலிசின் மேற்கு அடிவாரத்தில் உள்ள சுவர் வரிசையைக் குறிக்கிறது. [3] துசிடிடீசின் காலத்தில் இந்தச் சுவர் பல மீட்டர் உயரம் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போதைய பிராபிலேயாவின் தெற்கிலும் முந்தைய நுழைவாயிலுக்கு அருகில் 6 மீட்டர் அகலத்தில் ஒரு பெரிய, துண்டுப்பகுதி காணப்படுகிறது. [4] இன்று, அதன் எச்சசத்தைக் காணலாம் ஆனால் சுவரின் அடித்தளம் தற்போதைய மலையில் தரை மட்டத்திற்கு கீழே உள்ளது.

பெலாஸ்ஜியர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சுவரின் சில எச்சங்கள் நவீன ஏதென்சில் இன்னும் தெளிவாக்க் காணப்படுகின்றன. இந்த இடத்தின் தொல்லியல் எச்சங்களின்படி சுவர் 6 மீட்டர் தடிமன் கொண்டதாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. [5]

குறிப்புகள்

தொகு
  1. Thuc 2.17.1[தொடர்பிழந்த இணைப்பு]
  2. The Birds (play) 832
  3. "Acropolis". www.brown.edu. பார்க்கப்பட்ட நாள் 2018-04-05.
  4. Primitive Athens as Described by Thucydides.
  5. "Acropolis". www.brown.edu. பார்க்கப்பட்ட நாள் 2018-04-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலாசுசிக்_மதில்_சுவர்&oldid=3574316" இலிருந்து மீள்விக்கப்பட்டது