பெலிலென (Belilena) என்பது இலங்கையில் மிகவும் பெயர் பெற்ற ஒரு குகையாகும். இக்குகை இலங்கையின் மத்திய பகுதியில் கித்துல்கல நகரிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், தலைநகர் கொழும்பில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முந்தி இலங்கையில் வாழ்ந்த மக்கள் தொடர்பான ஆதாரங்களை இக்குகை கொண்டுள்ளது. அக்காலப் பகுதியிலேயே இக்குகை பலாங்கொடை மனிதனாற் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பலாங்கொடை மனிதனின் பத்து எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 2000 மீ உயரத்திலான அமைவிடங்களில் வாழ்ந்த மேற்படி மனிதர்கள் இங்கு 32,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.[1]

இக்குகையின் ஒரு பகுதி ஏரியினுள் அமைந்துள்ளது. இது சில இடங்களில் ஒடுக்கமான வாயில்களைக் கொண்டுள்ளது. இதுவரையிலும் இக்குகையின் முழுப் பகுதியும் சரியாகக் கண்டறியப்படவில்லை.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-01. Retrieved 2011-10-14.

உசாத்துணை

தொகு

வெளித் தொடுப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலிலென&oldid=4252643" இலிருந்து மீள்விக்கப்பட்டது