பெல்ஜிய நாட்டுப்பண்
லா பிரபான்சோன் ("La Brabançonne") (பிரெஞ்சு மொழி: [la bʁabɑ̃sɔn]; Dutch: "De Brabançonne"டச்சு: "De Brabançonne"; German: "Das Lied von Brabant"இடாய்ச்சு மொழி: "Das Lied von Brabant") என்பது பெல்ஜியத்தின் நாட்டுப்பண் ஆகும். இதன் அசல் பிரெஞ்சு மொழிப் பெயராக பிராபண்ட் ( Brabant) என்று குறிக்கப்படுகிறது; பெல்ஜியத்தின் மற்ற இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளான, டச்சு மற்றும் ஜேர்மனிய மொழிகளில் இதன் பெயர் மொழி பெயர்க்கப்படாமல் அவ்வாறே குறிப்பிடப் படுகிறது.[a]
ஆங்கிலம்: The Brabantian | |
---|---|
1910 காலகட்டத்தைச் சேர்ந்த பிரபான்சோன்டாவின் இசைவரி அட்டை | |
பெல்ஜியம் நாடு கீதம் | |
இயற்றியவர் | அலெக்சாண்டர் டெட்சே கான்ஸ்டன்டின் ரோடன்பாக் (அசல் வடிவம், 1830) சார்லஸ் ரோஜியர் (தற்போதைய வடிவம், 1860) |
இசை | ஃபிராங்கோஸ் வான் காம்பன்ஹவுட், செப்டம்பர் 1830 |
சேர்க்கப்பட்டது | 1860, 1921 இல் தற்போதைய வடிவம் |
இசை மாதிரி | |
"லா பிரபான்சோன்" (இசைக்கருவியில்) |
வரலாறு
தொகு183 இல் நடந்த பெல்ஜியப் புரட்சியின்போது "ஜென்னேவால்" என்ற இளம் புரட்சியாளர் படித்த கவிதை இதுவாகும். ஜென்னேவால், ஒரு பிரெஞ்சுக்காரர் ஆவார். இவரது இயற்பெயர் லூயி அலெக்சாண்டர் டெட்சே ஆகும். இவர் ஒரு நாடக நடிகராக இருந்தார். 1830 ஆகத்தில் பெல்ஜியப் புரட்சித் துவங்கியது, இது நெதர்லாந்திடம் இருந்து பெல்ஜியம் விடுதலைப்பெற வழிவகுத்தது. இந்த விடுதலைப் போரில் ஜென்னேவால் இறந்தார். இந்தக் கவிதைக்கு ஃபிராங்கோஸ் வான் காம்பன்ஹவுட் என்ற இசைக்கலைஞர் ஒரு பிரபலமான பிரஞ்சு பாடலின் மெட்டை அடிப்படையாகக் கொண்டு இசையமைத்தார்.[1][2] இது 1930 செப்டம்பரில் முதன்முதலில் இசைக்கப்பட்டது. 1860 இல், இப்பாடலும் இசையும் பெல்ஜிம் நாட்டின் தேசிய கீதமாக முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தற்போதைய வடிவம்
தொகுஇந்த நாட்டுப் பண்ணின் வரிகள், மெட்ட்டு ஆகியவை அரசின் பல்வேறு குழுக்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஒரு அதிகாரப்பூர்வ பதிப்பு இறுதி செய்யப்பட்டது. 1921 அக்டோபர் 8 அன்று பிரெஞ்சு மொழி, ஜெர்மன் மொழி, டச்சு மொழி ஆகிய மொழிகளில் அதிகாரப்பூர்வமாக புதியப் பதிப்பு ஏற்கப்பட்டது. அவை பின்வருமாறு:
பிரெஞ்சு (La Brabançonne) | |
---|---|
Noble Belgique, ô mère chérie, |
Noble Belgium, o mother dear, |
டச்சு (De Brabançonne) | |
O dierbaar België, O heilig land der Vaad'ren, |
O dear Belgium, O holy land of the fathers, |
ஜெர்மனி (Die Brabançonne) | |
O liebes Land, o Belgiens Erde, |
O dear country, O Belgium's soil, |
மும்மொழி வடிவம் | |
O dierbaar België, O heilig land der Vaad'ren, |
O dear Belgium, O holy land of the fathers – |
தமிழ் மொழிபெயர்பு
தொகுஅன்பான பெல்ஜியமே! எம் தந்தையரின் புனித நிலமே!
எங்கள் ஆத்மாக்களும் இதயங்களும் உனக்கே அற்பணிக்கப்பட்டன.
உனக்காக சிந்துவதற்றான குருதியுடன், தந்தை நாடே
ஒரே குரலில் உறுதி ஏற்கோறோம் - நீ நிலையாய் இருப்பாய்.
முழு அழகுடன் மகிழ்வாய் பூப்பாய்.
விடுதலை என்ன கற்பித்ததோ அதனூடே,
இன் பிள்ளைகள் மேலும் பாடுவார்கள்
மன்னர்! சட்டம்! விடுதலை!
நீ துணிவாக பேசும் சொற்களுக்கு உண்மையாக
மன்னருக்காக! சட்டத்திற்காக! விடுதலைக்காக!
சட்டம், மன்னர், விடுதலைக்கு வணக்கம்
மன்னர்! சட்டம்! விடுதலை!
குறிப்புகள்
தொகு- ↑ In English, one may refer to Brabant by the adjectives Brabantine or Brabantian, but only the latter term is (nearly) as general as French Brabançonfr, which can also be a substantive for e.g. the dialect, a man, or a horse or its breed from Brabant. In French, Brabançonne is the feminine gender of adjective Brabançon and matches the preceding definite article la, thus might fit an implied e.g. chanson, ('song') (cf. the official name of the French hymn: "la Marseillaise", "(song) having to do with the city of Marseille"). But neither the female definite article in German die Brabançonnede nor the male den Brabançonne in Brabantian or Brabantine dialects of Dutch can fit 'song', which is Lied in German and lied in Dutch, both of neutre genus. In today's standard Dutch, de Brabançonnenl does not betray whether the gender is male or female, but cannot be used for a neuter substantive either, and referring to de Brabançonne by hij confirms the male interpretation of Dutch dialects. For the anthem name in English, as in Dutch, German, and of course French, Brabançonne can be considered a proper noun.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Courrier des Pays-Bas: La Brabançonne". பார்க்கப்பட்ட நாள் 3 April 2013.
- ↑ Francis Martens, La Belgique en chantant, pp. 19–40, in Antoine Pickels and Jacques Sojcher (eds.), Belgique: toujours grande et belle, issues 1–2, Éditions Complexe, Brussels, 1998
வெளி இணைப்புகள்
தொகு- Belgium: La Brabançonne – Audio of the national anthem of Belgium, with information and lyrics
- Les Arquebusiers History, versions (text and audio) and illustrations
- Belgium National Anthem instrumental File MIDI (5ko)
- Belgium National Anthem instrumental (better) File AU (570ko)
- யூடியூபில் "La Brabançonne"; Helmut Lotti, in French, Dutch and German, before King Albert II