பெல்லா விஸ்டா, ஐதராபாத்து
பெல்லா விஸ்டா (Bella Vista) என்பது ஐதராபாத் மாநிலம் இருந்த காலத்தில் நிசாமின் அரச அரண்மனையாக இருந்தது. இது தற்போது இந்தியாவின் தெலங்காணாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ளது.[1][2] இது 10-ஏக்கர் (40,000 m2) நிலப்பரப்பில் உள்ள இந்தோ-ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்ட பசுமையான வளாகம் ஆகும். கட்டிடத்தின் பிரான்சு கட்டிடக்கலைஞர் இதற்கு பெல்லா விஸ்டா என்று பெயரிட்டார், அதாவது அழகான காட்சி பொருள் படும். இது உசேன் சாகர் ஏரியைக் கண்டும் காணாமல் அமைந்துள்ளாது. இது சைபாபாத் புறநகரில் அமைந்துள்ளது. மேலும், இங்கிலாந்தின் ஆக்சுபோர்டுசையரில் தேம்ஸ் நதிக்கரையில் உள்ள ஹென்லி-ஆன்-தேம்ஸ் மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெல்லா விஸ்டா | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
வகை | அரச அரண்மனை |
கட்டிடக்கலை பாணி | பிரெஞ்சு பாணி |
இடம் | ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா |
நிறைவுற்றது | 1910 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | பிரான்சு கட்டடக்கலை |
வரலாறு
தொகுவழக்கறிஞர் முசிலேகிதீன் முகமது என்பவர் ஐதராபாத் மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆனார். அவருக்கு அக்கிம்-உத்-தௌலா என்ற பட்டம் வழங்கப்பட்டது. அவர் 1905 இல் தனது இல்லமாக இந்த அரண்மனையைக் கட்டினார். அவர் 1905 முதல் 1914 வரை இங்கு வாழ்ந்தார், அவர் தனது 57 வயதில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டார். 1916 இல் அவர் இறந்தவுடன், குடும்பம் அரண்மனையை விற்க முடிவு செய்தது. கடைசி நிசாம் ஓசுமான் அலி கான் 1917 இல் மரச்சாமான்களுடன் சேர்த்து ரூ.60,000க்கு இதை வாங்கினார்.[3]
இந்த அரண்மனையில்தான் ஏழாவது நிசாமின் மூத்த மகன்- ஐதராபாத்து சிம்மாசனத்தின் வாரிசாக இருந்த ஓசுமான் அலி கானின் மூத்த மகன் - பேரார் இளவரசர் ஆசம் சா தனது மனைவி இளவரசி துரு சேவருடன் வசித்து வந்தார்.[4][5] இது இப்போது இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரியாகச் செயல்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Prince and The Palace". தி இந்து. 2004-02-25 இம் மூலத்தில் இருந்து 30 May 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040530154223/http://www.hindu.com/mp/2004/02/25/stories/2004022500270300.htm.
- ↑ "Deen Dayal's eyes capture bygone era". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 4 December 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111204145348/http://articles.timesofindia.indiatimes.com/2006-04-26/hyderabad/27818880_1_exhibition-salar-jung-museum-hyderabad.
- ↑ "Hyderabad: 60 royal years in ASCI life" (in en). Deccan Chronicle. 2016-12-19. https://www.deccanchronicle.com/nation/in-other-news/191216/60-royal-years-in-administrative-staff-college-of-india-life.html.
- ↑ "Princess Dürrühsehvar of Berar". The Telegraph. https://www.telegraph.co.uk/news/obituaries/1510174/Princess-Durruhsehvar-of-Berar.html.
- ↑ Bilquis Jehan Khan. "A Song of Hyderabad". thefridaytimes.com. Archived from the original on 22 February 2014. பார்க்கப்பட்ட நாள் 28 January 2012.