பெல் எக்சு-1

பெல் எக்சு-1 என்பது பெல் வானூர்தி நிறுவனத்தால் வடிவமைத்துக் கட்டமைக்கப்பட்ட மீயொலிவேக ஆராய்ச்சி வானூர்தியாகும். இந்த ஆய்வுத் திட்டமானது முதலில் எக்சு எஸ் 1 என்ற பெயரால் வழங்கப்பட்டது. இந்த ஆய்வு அமெரிக்காவின் ராணுவம், வான்படை மற்றும் நாசா ஆகியவற்றின் கூட்டுமுயற்சியாகும். 1944-ல் இதற்கான வடிவமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1945-ல் கட்டிமுடிக்கப்பட்டது. 1948-ல் 1,000 mph (1,609 km/h) வேகத்தை எட்டியது. இதன் அடுத்தகட்ட வடிவமைப்பான பெல் எக்சு-1ஏ வானது அதிக எரிபொருள் கிடப்பு மற்றும் எரிதல் நேரம் கொண்டதாகவிருந்தது. இது 1954-ல் 1,600 mph (2,574 km/h) வேகத்தை எட்டியது. இந்த எக்சு-1 வானூர்தியே கட்டுப்படுத்தப்பட்ட நிலைப்பறத்தலில் ஒலியை விட வேகமாக பயணித்த முதல் வானூர்தியாகும். அமெரிக்காவின் சோதனை வானூர்திகள் திட்டமான எக்சு வானூர்திகளில் முதல் தலைமுறை வானூர்திகளில் ஒன்றாகும்.

X-1
எக்சு-1 #46-062, அடைபெயர் - கிளாமரசு கிலென்னிசு ("Glamorous Glennis")
வகை எறிசு வானூர்தி, சோதனை வானூர்தி
உற்பத்தியாளர் பெல் வானூர்திகள்
முதல் பயணம் சனவரி 19, 1946
தற்போதைய நிலை பயன்பாட்டில் இல்லை
முக்கிய பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்க வான்படை
நாசா

குறிப்புதவிகள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்_எக்சு-1&oldid=3610416" இலிருந்து மீள்விக்கப்பட்டது