பெல் கோயில்
பெல் கோயில் (Temple of Bel (அரபு மொழி: معبد بعل), சிரியா நாட்டின் பல்மைரா நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் உரோமைப் பேரரசினர் பல்மைரா நகரத்தின் பெல் கடவுளுக்காக கிபி 32ல் கட்டப்பட்டது.[1][2] உருவ வழிபாட்டை வெறுக்கும் பிறகால உரோமைப் பேரரசின் கிறித்தவ மத அடிப்படைவாதிகளால் பெல் கோயில் கிபி 385-388 கால கட்டங்களில் பெல் கோயில் சிதைக்கப்பட்டது.[3] இருப்பினும் பல்மைரா நகரத்தின் பெல் கோயிலின் சிதிலங்கள் பாதுகாக்கப்பட்டது.[4] பின்னர் பெல் கோயிலை இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் ஆகஸ்டு 2015ல் பெருமளவில் குண்டு வீசி சிதைத்தனர்.[5]இதன் அழிவில் கோயிலின் உட்புறச் சுவர் மட்டும் எஞ்சியுள்ளது. 2013ம் ஆண்டு முதல் பெல் கோயிலை அழிவு நிலையில் உள்ளவைகள் என யுனெஸ்கோ வகைப்படுத்தியுள்ளது.
பெல் கோயில் معبد بعل | |
---|---|
2009-இல் பெல் கோயிலின் உட்புறக் காட்சி | |
இருப்பிடம் | பல்மைரா, சிரியா |
ஆயத்தொலைகள் | 34°32′49″N 38°16′26″E / 34.547°N 38.274°E |
வகை | கோயில் |
உயரம் | 15 மீட்டர்கள் (49 அடி) |
வரலாறு | |
கட்டுமானப்பொருள் | கல் |
கட்டப்பட்டது | கிபி 32 |
பகுதிக் குறிப்புகள் | |
நிலை | பெல் கோயிலின் முதன்மை கட்டிடம் இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்டது. மீதமுள்ளது கோயிலின் உட்புறச் சுவர் பகுதி |
உரிமையாளர் | பொது |
பொது அனுமதி | போர்க்கள பகுதியாதலால் எளிதில் அணுக முடியாது |
வகை | பண்பாடு |
வரன்முறை | i, ii, iv |
தெரியப்பட்டது | 1980 (4th session) |
எதன் பகுதி | பல்மைரா தொல்லியல் களம் |
உசாவு எண் | 23 |
பிரதேசம் | அரபு நாடுகள் |
அழிவு நிலையில் உள்ளவைகள் | 2013–தற்போது வரை |
படக்காட்சிகள்
தொகு-
சொர்க்கத்தின் கடவுள்கள்
-
சிதிலமடைந்த கோயில் தூண்கள்
-
சிதைந்த கோயில் மண்டபம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Gates, 2003, p.390–91.
- ↑ Kaizer, p.67.
- ↑ Trombley, Hellenic Religion and Christianization c. 370-529
- ↑ Cremin, p.187.
- ↑ Plácido Domingo (December 2016). "End the International Destruction of Cultural Heritage". Vigilo (Din l-Art Ħelwa: National Trust of Malta) (48): 30–31. பன்னாட்டுத் தர தொடர் எண்:1026-132X.
ஆதாரங்கள்
தொகு- Becker, Jeffrey A. Temple of Bel. Smarthistory
- Gates, Charkes (2003), Ancient cities: the archaeology of urban life in the Ancient Near East and Egypt, Greece and Rome, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-01895-1
- Kaizer, Ted (2002), The religious life of Palmyra: a study of the social patterns of worship in the Roman period, Franz Steiner Verlag, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-515-08027-9
- Cremin, Aedeen (2007), Archaeologica: The World's Most Significant Sites and Cultural Treasures, Frances Lincoln Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7112-2822-1[தொடர்பிழந்த இணைப்பு]