பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்

பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள் அல்லது பெஸ்லான் பாடசாலைப் பணயக்கைதிகள் பிரச்சினை (Beslan school hostage crisis, Beslan School massacre)[1] ரஷ்யாவின் வடக்கு ஒசேத்திய-அலனீயா குடியரசில் பெஸ்லான் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் செச்சினியப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் 2004, செப்டம்பர் 1 ஆம் நாள் ஆரம்பித்தனர். 777 பாடசாலைப் பிள்ளைகள், மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட 1,100 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். மூன்று நாட்களின் பின்னர் ரஷ்யக் காவற்படையினர் பணயக்கைதிகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தை பீரங்கி வண்டிகள், வெப்ப அமுக்க ஏவுகணைகள், மற்றும் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்கினர்[2]. பல தொடர்க் குண்டுவெடிப்புகளினால் பாடசாலைக் கட்டிடம் அதிர்ந்து தீப்பிடிக்க ஆரம்பித்தது. இதையடுத்து ஆயுததாரிகளுக்கும், ஆயுதப்படைகளுக்கும் இடையில் சரமாரியான துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றன. 186 பிள்ளைகள் உட்பட 334 பணயக் கைதிகள் இந்த முற்றுகையின் போது கொல்லப்பட்டனர்[3][4]. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பலர் காணாமல் போய்விட்டனர்.

பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்
படுகொலை செய்யப்பட்டவர்களின் படங்கள் காட்சிக்கு
இடம்பெஸ்லான், வடக்கு ஒசேத்திய-அலனீயா (ரஷ்யா)
நாள்செப்டம்பர் 1, 2004
காலை 9:30 – செப்டம்பர் 3, 2004 மாலை 5:00 (UTC+3)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
பாடசாலை இல. 1
தாக்குதல்
வகை
பணயக்கைதிகள்
இறப்பு(கள்)குறைந்தது 385
காயமடைந்தோர்ஏறத்தாழ 783
தாக்கியோர்ரியாடுஸ் சலிஹீன்
வடக்கு ஒசேத்தியாவில் பெஸ்லான் நகரம்

செச்சினிய பிரிவினைவாதிகளின் தலைவர் ஷமீல் பசாயெவ் இந்த பணயக்கைதிகள் நிகழ்வுக்கு உரிமை கோரினார். ஆனாலும் இந்நிகழ்வின் பயங்கரத்துக்கு அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் பூட்டினைக் குற்றம் சாட்டினார். இவ்விவகாரத்தை அடுத்து ரஷ்யாவில் பல அரசியல் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. கிரெம்ளினுக்கும், ரஷ்ய அதிபருக்கும் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு