பெ. அமுதா (P. Amudha) , (பிறப்பு:19 சூலை 1970) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆவார். இவர் தமிழ்நாட்டில் 1994 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். தற்போது பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் பணிநிலை கூடுதல் செயலாளராக உள்ளார். இவர் உத்தரகாண்ட் முசிறியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாதமியில் பொது நிர்வாகத்தின் பேராசியராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2] இவர் தமிழ்நாடு அரசாங்கத்தின் கீழ் பெண்கள் மேம்பாட்டுக்கான தமிழ்நாடு கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கான ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் திட்ட அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இவர் தமிழக அரசின் கீழ் 15 வெவ்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.[3] இவர் களப் பணியாற்றுவதற்காகவும், துணிச்சலான முடிவுகளை எடுப்பதற்காகவும் ஆர்வம் கொண்டவராவார்.[4]

பெ. அமுதா
இந்திய ஆட்சிப் பணி
2019 ஆம் ஆண்டு பெ. அமுதா
பிறப்புஅமுதா பெரியசாமி
19 சூலை 1970 (1970-07-19) (அகவை 53)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
கல்விஇளங்கலை விவசாய அறிவியல்
படித்த கல்வி நிறுவனங்கள்விவசாய கல்லூரி, மதுரை
பணிஇந்திய அரசு ஊழியர்
செயற்பாட்டுக்
காலம்
1994 – நடப்பு
வாழ்க்கைத்
துணை
சம்பு கல்லோலிக்கர், இந்திய ஆட்சிப் பணி
விருதுகள்கேஎம். ரீனா சந்து மெம்மொரியல் தங்க பதக்கம்

பின்னணி தொகு

அமுதா மதுரையில் பிறந்தார். மதுரையில் உள்ள கேந்திரிய வித்தியாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்தார். மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளங்கலை வேளாண் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். சுதந்திரப் போராட்ட வீரரான தாத்தா பாட்டியிடமிருந்து இவருக்கு உத்வேகம் கிடைத்தது. இவரது கணவரும் ஒரு அரசு ஊழியர், அவர் தற்போது கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறையின் கீழ் தமிழக அரசின் முதன்மை செயலாளராக பணியாற்றுகிறார்.

தொழில் தொகு

 
2008 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தர்மபுரியில் பாரத் நிர்மாண் பொது தகவல் பிரச்சாரத்தை பெ. அமுதா தொடங்கி வைத்தார்

பெ. அமுதா 1994 செப்டம்பர் 4 அன்று முதல் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[5] ஆரம்பத்தில், இவர் தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.  இவர் தமிழ்நாடு அரசாங்கத்தின் பொது (தேர்தல்) துறையில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தார். இந்த பதவிக்கு முன்னர், இவர் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் துறையில் இயக்குநராகவும் உறுப்பினர்-செயலாளராகவும் பணியாற்றினார். இவர் தமிழ்நாடு அரசின் மகளிர் மேம்பாட்டுக்கான தமிழ்நாடு கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார், மேலும் குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கான ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் திட்ட அதிகாரியாக பணியாற்றியுள்ளார். பல ஆண்டுகளாக, இவர் நில வருவாய்த் துறையில் மாவட்ட நிர்வாகத்துடன் மாவட்ட ஆட்சியராகவும் இருந்தார்.[6][7]

1990களின் பிற்பகுதியில், ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் துணை மாவட்ட ஆட்சியராக, இவர் சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள் சென்று உள்ளூர் மக்களைச் சந்தித்தார். இவர் அங்கு பதவியேற்றபோது உள்ளூர் மக்கள் அரசை நம்பத் தொடங்கினர். இவர் தர்மபுரியில் பெண்களை மேம்படுத்துவதில் தனது பணிகளுக்கு பெயர் பெற்றவர். சுய உதவி குழுக்களின் சுறுசுறுப்பான பங்களிப்புடன் பெண்களிடையே கல்வியறிவு விகிதத்தை மேம்படுத்த இவர் முயற்சிகளை மேற்கொண்டார்.

இவர் செங்கல்பட்டு சட்டவிரோத மணல் சுரங்கம் மீது நடவடிக்கை எடுத்தார்.

2015 சென்னை வெள்ளம் தொகு

வரலாற்றுச் சிறப்புமிக்க 2015 சென்னை வெள்ளத்தின் போது பெ. அமுதா மிகவும் திறமையான கள அலுவலராக அறியப்பட்டதால் பருவமழை நிவாரணத்திற்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் நீர்நிலைகள் மற்றும் வெள்ளம் தேங்கி ஆக்கிரமித்துள்ள ஏராளமான கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டார்.

லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாதமி (LBSNAA) தொகு

பெ. அமுதா 2019 மார்ச் 11 அன்று லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாதமியில் (LBSNAA) பொது நிர்வாகப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[8]

விளையாட்டு தொகு

பெ. அமுதா ஒரு கபடி வீராங்கனையாவார். இவர் தேசிய சாம்பியன்ஷிப்பை மூன்று முறை வென்ற கபாடி அணியின் உறுப்பினராக இருந்தார். இவர் கராத்தே பயிற்சியும் பெற்றவராவார்.[9]

மேற்கோள்கள் தொகு

  1. Ahmedabad, Mahesh Langa (2020-07-21). "Amudha appointed Joint Secretary in PMO" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/amudha-appointed-joint-secretary-in-pmo/article32143814.ece. 
  2. "Tamil Nadu IAS officer Amudha appointed as joint secretary in PMO". www.thenewsminute.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-24.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. "Go-to officer heals wounds at Karunanidhi's funeral". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2018-08-10. பார்க்கப்பட்ட நாள் 2020-07-24.
  5. "Civil List of IAS Officers". easy.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-07-22.
  6. "P. Amudha | Everyday Leadership". everydayleadership.org (in ஆங்கிலம்). Archived from the original on 2020-07-26. பார்க்கப்பட்ட நாள் 2020-07-22.
  7. Das, Ria (2020-07-21). "IAS Officer P Amudha Appointed Joint Secretary In Prime Minister's Office". SheThePeople TV (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-24.
  8. "Witness in the Corridors". witnessinthecorridors.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.
  9. Jesudasan, Dennis S. (2020-07-21). "P. Amudha IAS: An officer known for overcoming obstacles on every terrain" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/an-officer-known-for-overcoming-obstacles-on-every-terrain/article32154842.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._அமுதா&oldid=3613949" இலிருந்து மீள்விக்கப்பட்டது