பெ. இரா. சாயா
பெ. இரா. சாயா (B. R. Chaya) என்று அழைக்கப்படும் பெங்களூரு இராமமூர்த்தி சாயா ஓர் இந்திய, கன்னடப் பின்னணி பாடகர், மேடை நடிகர் மற்றும் கருநாடகாவினை சேர்ந்த பிரபலமான சுகம சங்கீதா பாடகர் ஆவார்.[1] இவர் பாப், நாட்டுப்புறம், பக்தி மற்றும் பாவகீதே (மெல்லிசை) ஆகிய இசைநிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். கருநாடக மாநில அரசிடமிருந்து ராஜ்யோத்சவ பிரசஸ்தி விருதையும், சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான கருநாடக மாநில திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.[2][3]
பெ. இரா. சாயா | |
---|---|
சாயா 2019-இல் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | அக்டோபர் 16, 1969 பெங்களூர், கருநாடகம் |
இசை வடிவங்கள் | சுகம சங்கீதம், பின்னணி பாடகர் |
தொழில்(கள்) | பாடகர், தொழில்முனைவர் |
இசைக்கருவி(கள்) | குரல் பாடல் |
இசைத்துறையில் | 1983–முதல் |
இணையதளம் | brchaya |
இளமை
தொகுஇராமமூர்த்தி மற்றும் எஸ். ஜி. ஜானகிக்குச் சாயா மகளாகப் பிறந்தார்.[4][1]. ஆர். வி. கல்லூரியில் கடிகாரக் கலையியல் கல்வி பயின்ற பிறகு இந்துசுதான் எந்திர கருவிகள் நிறுவனத்தில் கடிகார சில ஆண்டுகள் கடிகார கம்மியராகப் பணியாற்றினார். பின்னர் சென்னையில் நடந்த தூர்தர்ஷன் தேசிய போட்டியில் கருநாடகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] தமிழ் மொழி திரைப்படமான ஜோதி (1983) மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். மேலும் புட்டண்ணா கனகலின் அம்ருதா காளிகே (1984) மூலம் கன்னடத்தில் அறிமுகமானார்.
தற்போது கானா சந்தனா நிகழ்ச்சியின் நடுவராக உள்ளார், மேலும் கோவிட்-19 தொற்றின் போதிலிருந்து மெய்நிகர் கச்சேரிகளைச் செய்து வருகிறார்.[1]
1988ஆம் ஆண்டில் "காடினா பெங்கி" திரைப்படத்தில் "ருதுமனா சம்புதடி" பாடலுக்காகச் சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதைப் பெற்ற முதல் பாடகி சாயா ஆவார்.[5]
விருதுகள்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "B R Chaya: I was never burdened with household work". Deccan Herald (in ஆங்கிலம்). 2021-02-13. பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.
- ↑ "Pupora - ESCUCHAR MUSICA ONLINE GRATIS SIN DESCARGAR". pupora.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.
- ↑ "On My Pinboard: B R Chaya" (in en). 4 July 2019. https://www.deccanherald.com/metrolife/metrolife-lifestyle/on-my-pinboard-b-r-chaya-744847.html.
- ↑ "BR Chaya". www.brchaya.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.
- ↑ "Ruthumana Samputadi (Full Song) - Kadina Benki - Download or Listen Free - JioSaavn".
- ↑ "On My Pinboard: B R Chaya". Deccan Herald (in ஆங்கிலம்). 2019-07-04. பார்க்கப்பட்ட நாள் 2023-06-19.
- ↑ "YouTube". www.youtube.com.