இரத்னமாலா பிரகாஷ்

இந்தியப் பாடகர்

இரத்னமாலா பிரகாஷ் (Rathnamala Prakash) இந்தியாவைச் சேர்ந்த கன்னடப் பாடகர் ஆவார். பின்னணிப் பாடுவதுடன் , கன்னடத்தில் பாவகீத வகையான சுகம சங்கீதம் என்ற பாடல்களுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இவரது தந்தை ஆர். கே. ஸ்ரீகண்டன் ஒரு பாரம்பரிய கருநாடக இசைக் கலைஞர் ஆவார். [1] சுகம சங்கீதத் துறையில் பங்களித்ததற்காக 2016 ஆம் ஆண்டில் இரத்னமாலாவுக்கு சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது. [2]

இரத்னமாலா பிரகாஷ்
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்ஹாடு ஹக்கி, கர்நாடகாவின் குரல், இரத்னாக்கா
பிறப்பு19 ஆகத்து 1952 (1952-08-19) (அகவை 71)
கருநாடகம், இந்தியா
இசை வடிவங்கள்சுகம சங்கீதம், திரையிசை
தொழில்(கள்)பின்னணிப் பாடகர்

தொழில் தொகு

ஏராளமான பாவகீதங்களைத் தவிர, இவர் பல திரைப்படப் பாடல்களையும் பாடியுள்ளார். பெரிய வெற்றி பெற்றத் திரைப்படமான "குரி" என்ற படத்தில் இடம்பெற்ற தங்காலியண்ட்டே பாலாலி பந்தே என்ற பாடலை ராஜ்குமாருடன் இணைந்து பாடி இவர் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் எல். வைத்தியநாதன், சி. அஸ்வத், எம். ரங்கா ராவ், விஜய பாஸ்கர், இராஜன்–நாகேந்திரா, அம்சலேகா போன்ற பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். "எலு சுட்டின கோட்டே" என்ற திரைப்படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து "சந்தச அரலுவ சமயா" என்ற பாடலையும், எஸ்.பி சாங்லியானா பாகம் 2 திரைப்படத்தில் "மேரு கிரியானே நீலி கடலானே" என்ற பாடலை கே. ஜே. யேசுதாஸுடனும், மைசூர் மல்லிகே திரைப்படத்திலிருந்து, "ராயரு பந்தரு மாவன மனகே", "யாவ மோகன முரளி கரயிது" என்ற இரு பாடலையும், நாகமண்டலா திரைப்படத்திலிருந்து "கெடியா பேக்கு மகளா", ""ஹுடுகி ஹோ ஹுடுகி" என்ற இரு பாடலையும் பாடியிருந்தார்.

விருதுகள் தொகு

தேசிய விருதுகள் :

  1. 2016 - சுகம சங்கீதத்தின் பிற முக்கிய மரபுகளுக்கான சங்கீத நாடக அகாதமி விருது . [3]

மாநில விருதுகள் :

  1. 2016 - கர்நாடக அரசின் கன்னடம் மற்றும் கலாச்சாரத் துறையால் வங்கப்பட்ட சாந்தா சிசுநாள ஷரீஃப் விருது . [4]
  2. 1991 - கர்நாடக அரசால் கர்நாடக ராஜ்யோத்சவ விருது . [5]
  3. 1990 - கர்நாடக சங்கீத நிருத்ய அகாதமியின் கர்நாடக கலாஸ்ரீ விருது.

பிற விருதுகள் :

  1. 2017 - அலுவாவின் நுதுசிறீ விருது [6]
  2. 2014 - அரிமா சங்கத்தின் தொழில்சார் சிறப்பு விருது
  3. 2012 - பால சமாஜத்தின் ஆண்டின் சிறந்த கலைஞர் விருது
  4. கே. எஸ். நரசிம்மசுவாமி பிரதிஷ்டனா விருது
  5. டி. சுப்பராமையா அறக்கட்டளையின் சுகம சங்கீதத்தில் சிறந்த சாதனை
  6. 2010 - ஹனகல் அறக்கட்டளையின் கிருஷ்ண ஹனகல் விருது [7]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்னமாலா_பிரகாஷ்&oldid=3543999" இருந்து மீள்விக்கப்பட்டது