பெ. சுப்பையா அம்பலம்
2ஆவது மக்களவை உறுப்பினர்
பெ. சுப்பையா அம்பலம் (P. Subbiah Ambalam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1957 முதல் 62 வரை இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக 2வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர்.
பெ. சுப்பையா அம்பலம் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1957–1972 | |
தொகுதி | இராமநாதபுரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இராமநாதபுரம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு[1] |
துணைவர் | பாப்பாத்தி அம்மாள் |
பிள்ளைகள் | 5 |
முன்னாள் கல்லூரி | சென்னை கிறித்துவக் கல்லூரி, சென்னை சட்டக் கல்லூரி |
வாழ்க்கை வரலாறு
தொகுசுப்பையா அம்பலம், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் 1921ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி பெரியண்ணன் அம்பலம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.[2] இவர் தனது கல்லூரிக் கல்வியைத் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரி மற்றும் சென்னை சட்டக் கல்லூரியில் (டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை) ஆகியவற்றில் கற்றார்.
இவர் பாப்பாத்தி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் நான்கு மகன்கள் உட்பட ஐந்து குழந்தைகள் உள்ளனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "P Subbiah Ambalam, Ramanathapuram Lok Sabha Elections 1957 in India LIVE Results - Latest News, Articles & Statistics". LatestLY. 2018-01-15. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.
- ↑ "Members Bioprofile". Parliament of India, Lok Sabha. 1921-05-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.
- ↑ "Shri P. Subbiah Ambalam MP biodata Ramanthapuram". ENTRANCEINDIA. 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.