பெ. நா. அப்புசாமி
பெ. நா. அப்புசாமி (திசம்பர் 31,1891-மே 16,1986) தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தில் பிறந்தவர். அறிவியல் தமிழ் முன்னோடி, தொழிலால் வழக்கறிஞர். தமிழ் , ஆங்கிலம், சமசுகிருதம் ஆகிய பன்மொழிப் புலமை கொண்ட இவர் அறிவியல் தமிழுக்காக 70 ஆண்டுகள் தொண்டாற்றினார். தனது இறுதி மூச்சு அடங்கும் அன்று கூட இவர் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பிவிட்டே மறைந்தார்
படைப்புகள்
தொகுபல அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர். பேனா என்ற புனைபெயரில் பல நூல்களை எழுதினார். இவர் 25 அறிவியல் நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.[1]
- மின்சாரம் (நூல்)
- வானக்காட்சி (நூல்)
- இன்றைய விஞ்ஞானமும் நீங்களும் (நூல்)
- அணுசக்தியின் எதிர்காலம் (நூல்)
- ராக்கெட்டும் துணைக்கோள்களும் (நூல்) பாரதியார் கவிதைகள், சங்கப்பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இசையில் ஆர்வம் கொண்டவர். அறிவியல் தமிழுக்காக 70 ஆண்டுகள் தொண்டாற்றியவர். தமிழில் வெளிவந்த முதல் அறிவியல் இதழான தமிழ் நேசன் இதழில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அறிவியல் தமிழர் என்று போற்றப்படுபவர். மதுரைப் பல்கலைக் கழகத்தில், தமிழ்ப்பேரவைச் செம்மல் எனும் பட்டம் பெற்றுள்ளார்.
- சர்வதேச விஞ்ஞானிகள்
- அறிவியல் கதைகள், போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
மொழிபெயர்ப்புகள்
தொகுஅறிவியல் நூல்கள் மட்டும் அல்லாது, பாரதியார் கவிதைகள், சங்கப் பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
1. சுதந்திரத் தியாகிகள் (ஹென்றி ஸ்டீல் காம்மெஜர்) (1965-ஜோதி நிலையம்)
இசைத் துறை
தொகுஇசையில் ஆர்வம் கொண்டிருந்த இவர், பல இசை விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்/ உசாத்துணைகள்
தொகுபொதுத் தமிழ் மேல்நிலை- முதலாம் ஆண்டு, தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் -2018