பேகம் கம்ருன் நகர்

வங்காளதேசப் பெண் அரசுப் பெண் செயலர்

பேகம் கம்ருன் நகர் (Begum Kamrun Nahar) வங்காள தேசத்தின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ஆவார். வங்களாதேசத்தில் முதன்மை தகவல் அதிகாரியாக பதவிக்கு வந்த முதல் பெண் என்ற சிறப்புக்கு உரியவராக இவர் கருதப்படுகிறார்.[1] பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகத்தின் முன்னாள் செயலாளராகவும் இருந்தார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

பேகம் கம்ருன் நகர் பிராமன்பரியா மாவட்டத்தில் பிறந்தார்.[3] 1983 ஆம் ஆண்டில் டாக்கா பல்கலைக்கழகத்தின் சமூக நலன் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை படிப்பை முடித்தார் [4] . வங்காள தேசத்தின் அச்சக நிறுவனத்தில் பத்திரிக்கை துறையில் பட்டயமும் படித்துள்ளார்.[5]

தொழில்

தொகு

1984 ஆம் ஆண்டு வங்காள தேசத்தின் குடிமைப் பணியில் நிர்வாகப் பணியாளராகச் சேர்ந்தார்.[6]

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் [7] பத்திரிகைத் தகவல் துறையில் முதன்மை தகவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். முதன்மை தகவல் அதிகாரி பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற சிறப்பும் கிடைத்தது.[7] முன்னதாக இவர் திரைப்படங்கள் மற்றும் வெளியீடுகள் துறை, மக்கள் தொடர்பு இயக்குநரகத்தின் பொது இயக்குநராக இருந்தார்.[3] இதேபோல வங்காளதேச திரைப்படக் காப்பகத்தின் முன்னாள் பொது இயக்குநர் பொறுப்பிலும் இருந்தார்.[3] வங்காள தேசத்தின் திரைப்பட தணிக்கை வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்[8]

2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 25 ஆம் தேதியன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகத்தின் செயலாளராக நகர் நியமிக்கப்பட்டார்.[3]

30 டிசம்பர் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகத்தின் செயலாளர் பதவியிலிருந்து தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளராக மாற்றப்பட்டார்.[9][10]

நவம்பர் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் செயலாளராகப் பணியாற்றியபோது ஓய்வுக்குப் பிந்தைய விடுப்பில் சென்றார்.[6] காசா மியா என்பவர் இவருக்குப் பதிலாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

வங்காளதேசத்தின் அமைச்சரவை செயலாளரான கந்தகர் அனோவருல் இசுலாமை நகர் மணந்தார்.[6] இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[5] 2020 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் கோவிட் நோய்த் தொற்று பரவலின் போது தொற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Unb, Dhaka (2017-02-13). "Kamrun Nahar first-ever female PIO". The Daily Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  2. Unb, Dhaka (2019-12-31). "3 secretaries transferred". The Daily Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  3. 3.0 3.1 3.2 3.3 "Kamrun Nahar made secretary to Women and Children Affairs Ministry | Daily Sun |". daily sun (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  4. "Kamrun Nahar appointed as secretary to Women and Children's Affairs Ministry". bdnews24.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  5. 5.0 5.1 Correspondent, A. A. "New women children's affairs secy | The Asian Age Online, Bangladesh". The Asian Age (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  6. 6.0 6.1 6.2 6.3 "Information secretary Kamrun Nahar accorded farewell". theindependentbd.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  7. 7.0 7.1 "Kamrun Nahar made Women & Children Affairs Ministry secretary". unb.com.bd (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "Kamrun Nahar made information secretary". bangladeshpost.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  9. Hossain, Mosharrof. "Kamrun Nahar made information secretary | Bangladesh Sangbad Sangstha (BSS)" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  10. UNB, Dhaka (2019-12-30). "Three secretaries transferred, 6 addl secy promoted". The Daily Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகம்_கம்ருன்_நகர்&oldid=3867224" இலிருந்து மீள்விக்கப்பட்டது