பேகம் தபசம் ஹசன்

இந்திய அரசியல்வாதி

பேகம் தபசம் ஹசன் (Begum Tabassum Hasan) (பிறப்பு: 1970) ராஷ்டிரிய லோத் தளக் கட்சியின் அரசியல் ஆர்வலர் ஆவார். உத்தரபிரதேசத்தில் உள்ள கைரானா மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த மக்களவை முன்னாள் இந்திய மக்களவை உறுப்பினராவார். இவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த சௌத்ரி முனவ்வர் ஹசனின் மனைவியாவார்.[1] [2] இவர் பகுஜன் சமாஜ் கட்சி, அஜித் சிங்கின் லோக் தளம், சமாஜ்வாடி கட்சி ஆகியவற்றிலும் இருந்தார்.

பேகம் தபசம் ஹசன்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
31 மே 2018 – 23 மே 2019
முன்னையவர்ஹுக்கும் சிங்
பின்னவர்பிரதீப் குமார் சௌத்ரி
தொகுதிகைரானா
பதவியில்
2009–2014
முன்னையவர்அனுராதா சௌத்ரி
பின்னவர்ஹுக்கும் சிங்
தொகுதிகைரானா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 திசம்பர் 1970 (1970-12-25) (அகவை 53)
தும்ஜீரா, சகாரன்பூர்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
துணைவர்சௌத்ரி முனவ்வர் ஹசனி
பிள்ளைகள்1 மகன் (நஹித் ஹசன்), 1 மகள்
மூலம்: [1]

வாழ்க்கை தொகு

ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவரது கணவர் சௌத்ரி முனவ்வர் ஹசன் 2004இல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2008இல் ஒரு விபத்தில் இறந்தார். பின்னர், பேகம், முதன்முதலில் பகுஜன் சமாஜ் கட்சி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] [4]

அரசியல் வாழ்க்கை தொகு

கைரானா மக்களவைத் தொகுதியிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக 2009இல் முதன்முதலில் மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மகன் நஹித் ஹசன் 2014 மக்களவைத் தேர்தலில் கைரானாவில் இருந்து சமாஜ்வாடி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு தோற்றார். பேகம், கைரானாவுக்கான 2018 இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றின் "மகா கூட்டணி" ஆதரவுடன் ராஷ்டிரிய லோக் தள வேட்பாளராக கிட்டத்தட்ட 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[5] [6] இருப்பினும்,இவர் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து 2019 மக்களவைத் தேர்தலில் கைரனா தொகுதியை, பாஜகவின் பிரதீப் சௌத்ரியிடம், 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் இழந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "RLD wins U.P.'s Kairana Lok Sabha seat by over 50,000 votes". The Hindu. 2018-05-31. பார்க்கப்பட்ட நாள் 2018-06-08.
  2. "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
  3. Nishtha Gupta (2018-05-31). "Meet Begum Tabassum Hasan, who sailed RLD boat against Modi wave in Kairana - India News". Indiatoday.in. பார்க்கப்பட்ட நாள் 2018-06-08.
  4. ""DNA of families"".
  5. "RLD wins U.P.'s Kairana Lok Sabha seat by over 50,000 votes". The Hindu. 2018-05-31. பார்க்கப்பட்ட நாள் 2018-06-08."RLD wins U.P.'s Kairana Lok Sabha seat by over 50,000 votes". The Hindu. 31 May 2018. Retrieved 8 June 2018.
  6. "Kairana bypoll result: How strategy of 'Opposition unity' ensured BJP's defeat | india news". Hindustan Times. 2016-04-22. பார்க்கப்பட்ட நாள் 2018-06-08.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகம்_தபசம்_ஹசன்&oldid=3191255" இலிருந்து மீள்விக்கப்பட்டது