பிரதீப் குமார் (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

பிரதீப் குமார் (Pradeep Kumar) ஓர் இந்திய அரசியல்வாதியும், உத்தரபிரதேசத்தின் 13, 16, 17 வது சட்டமன்ற உறுப்பினருமாவார். 2017ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தின் கங்கோஹ் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர் பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினராக உள்ளார். கைரானா மக்களவைத் தொகுதியிலிருந்து பதினேழாவது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

பிரதீப் குமார்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்தபசம் ஹசன்
தொகுதிகைரானா
சட்டமன்ற உறுப்பினர், பதினேழாவது சட்டமன்றம்
பதவியில்
மார்ச் 2017 – 23 மே 2019
தொகுதிகங்கோஹ்
சட்டமன்ற உறுப்பினர், பதினாறாவது சட்டமன்றம்
பதவியில்
மார்ச் 2012 – மார்ச் 2017
முன்னையவர்எவருமில்லை
தொகுதிகங்கோஹ்
சட்டமன்ற உறுப்பினர், பதிமூன்றாவது சட்டமன்றம்
பதவியில்
2000–2002
முன்னையவர்குன்வர் பால் சிங்
பின்னவர்சுசீல் சௌத்ரி
தொகுதிநகுத், சகாரன்பூர் மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 மார்ச்சு 1969 (1969-03-10) (அகவை 55)
துத்லா கிராமம், கங்கோஹ், உத்தரப் பிரதேசம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2017–தற்போது வரை)[1]
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்
சுனிதா சௌத்ரி (தி. 1999)
பிள்ளைகள்2
வாழிடம்(s)துத்லா கிராமம், சகாரன்பூர், உத்தரப் பிரதேசம்
தொழில்விவசாயி, அரசியல்வாதி

சொந்த வாழ்க்கை தொகு

பிரதீப் குமார் 1969 மார்ச் 10 அன்று கன்வார்பால் சிங் என்பவருக்கு உத்தரபிரதேசத்தின் கங்கோஹ் தொகுதியின் துத்லா கிராமத்தைச் சேர்ந்த குஜ்ஜர் குடும்பத்தில் பிறந்தார். இவர் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். சுனிதா என்பவரை பிப்ரவரி 19, 1999 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தொழிலால் விவசாயியாவார்.[2]

அரசியல் வாழ்க்கை தொகு

இவர், மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினாராக இருந்துள்ளார். முதல் முறையாக, 2000ஆம் ஆண்டில் நகுத் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ராஷ்டிரிய லோக் தளத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2012இல் கங்கோஹ் சட்டமன்றத் தொகுதியிலிருந்து உத்தரபிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் இருதர் சென் என்பவரை 4,023 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[1]

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக 2017ஆம் ஆண்டில் மீண்டும் கங்கோஹ் சட்டமன்றத் தொகுதியிலிருந்து உத்தரபிரதேசத்தின் பதினேழாவது சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளர் நௌமன் மசூத்தை 38,028 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[1]

இதையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Gangoh Election Results 2017". elections.in. பார்க்கப்பட்ட நாள் 5 November 2018.
  2. 2.0 2.1 "Profile". Uttar Pradesh Legislative Assembly website இம் மூலத்தில் இருந்து 4 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150204112245/http://uplegisassembly.gov.in/ENGLISH/pdfs/members_profile/7.pdf. பார்த்த நாள்: 11 June 2015. 
  3. "2012 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.gov.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf. பார்த்த நாள்: 11 June 2015.