பேச்சு:அக்னி தேவன்

அக்னி தேவன் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பாராட்டுக்கள் மற்றும் வேண்டுகோள்

தொகு

வினோத், நல்ல கட்டுரை ஆக்கியுள்ளீர்கள். எனது பாராட்டுக்கள். சில சொற்பயன்பாடுகள் குறித்து பரிந்துரைக்கிறேன். நீங்கள் ஏற்றுக்கொள்பவற்றை மட்டும் செயற்படுத்தலாம். சிலவற்றை அடைப்புக்குறிகளுக்குள் மட்டுமாவது தரலாம். சற்றே சூடான கட்டுரையல்லவா இது? ;-)

  1. யாகம் - வேள்வி  
  2. வேதம் - திருமறை
  3. அதிபதி - தலைவர்?
  4. சிரம் - தலை (கண்டிப்பாக மாற்றலாமல்லவா?)  
  5. கரம் - கை  
  6. ஒளிக்கிரணம் - ஒளிக்கீற்று (அ) ஒளிக்கதிர் (கண்டிப்பாக மாற்றலாமல்லவா?) 
  7. சக்தி - ஆற்றல்  
  8. திக்பாலர் - திசைக்காவலர் (அடைப்புக்குறிகளுக்குள்ளாவது)  

எல்லா பரிந்துரைகளையும் இல்லாவிட்டாலும் சிலவற்றையாவது ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். :-) -- Sundar \பேச்சு 05:14, 27 டிசம்பர் 2007 (UTC)

கரம், சிரம் தமிழ் இல்லையா ? எனக்கு தெரியாது.(பேருந்தில் எழுதி நான் பார்த்தது: கரம் சிரம் புறம் நீட்டாதீர் :-)) ) தெய்வங்களை குறித்து கூறுகையில் கை கால் எனக்கூறாமல் கரம், சிரம் என கூறுவதை கண்டுள்ளேன். முருகன் - பன்னிருகரத்தோன் ஏதோ பாடலில் படித்தது. தங்கள் விருப்பப்படி மாற்றிவிடுகிறேன்.
கிரணம் எங்கேயோ படித்தது, கதிர் என்ற பயன்பாடு அப்போது தோன்றவில்லை. ஆற்றல் ஆற்றல்னு எழுதி கொஞ்சம் போர் அடிச்சுதுன்னு சக்தின்னு எழுதினேன்(என்னுடைய முந்தைய அனைத்து கட்டுரைகளிலும் ஆற்றல் என்பதையே பயன்படுத்தி உள்ளேன்)மாற்றி விடுகிறேன்.
அதிபதி, வேதம் எல்லோராரும் புரிந்துகொள்ளக்கூடியது அதை மாற்றித்தான் ஆகவேண்டுமா ? ரிக் வேதம் --> ரிக் திருமறை ?
எனது மறுமொழிக்கு காத்திருக்க வேண்டாம் நான் மேலே கூறியவற்றில் ஏதேனும் தவறாக கூறியிருப்பின் மாற்றிவிடவும்.
wi
n
d
பேச்சு 07:54, 27 டிசம்பர் 2007 (UTC)
நன்றி வினோத். ரிகவேதம் என்பதை மாற்ற வேண்டாம். வேதம் தனியாக வந்தால் மாற்றலாம். கரம் சிரம் வடமொழியிலும் உண்டு, எங்கிருந்து எங்கு சென்றது எனத் தெரியவில்லை. -- Sundar \பேச்சு 09:54, 27 டிசம்பர் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அக்னி_தேவன்&oldid=3746828" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அக்னி தேவன்" page.