பேச்சு:அசீஸ் அன்சாரி
அசீஸ் அன்சாரி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
அசீஸ் அன்சாரி என்பது விக்கித்திட்டம் பெண்ணியம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு பெண்ணியம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
அசீஸ் அன்சாரி சிறந்த நகைச்சுவை நடிகருக்கான 2017 ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் தமிழர் மற்றும் ஆசிய அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார். - இது த.வியின் தலைப்புச் செய்திகளில் காணப்பட்டது. இதன் மூலம் படிப்பவர் என்ன புரிந்து கொள்வார்? ஒவ்வொரு வருடமும் தமிழர் விருது பெற்றால், அவரை குறிப்பிட்ட விருதுக்கான முதல் தமிழர் என்ற முக்கியத்துவம் வழங்குவதா? அடுத்த வருடம் X என்பவர் இதே விருதைப் பெற்றால், X சிறந்த நகைச்சுவை நடிகருக்கான 2018 ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் தமிழர் என்ற புகழைப் பெற்றார் என்பதா? அல்லது இச்செய்தி "கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் தமிழர்" என்று சொல்ல வருகின்றதா அல்லது சிறந்த நகைச்சுவை நடிகருக்கான முதல் தமிழர் என்கிறதா? நிற்க, குறிப்பிட்ட நபர் பற்றிய கட்டுரையில் இச்செய்திக்கான (முதல் தமிழர் என்பதற்கான) உசாத்துணை இல்லை. இவ்வாறானவற்றை செய்தியாக்கத் தேவையில்லை. அல்லது முறைப்படி செய்தியாக்கலாம்.
ஆ.வியில் தற்போதுள்ள செய்தியில் (In cricket, the Ashes series concludes with Australia (captain and man of the series Steve Smith pictured) beating England.) என்றுள்ளதைக் காணலாம். அதில் நபருக்கல்ல குறிப்பிட்ட நிகழ்வே செய்தியாகும். Ashes series என்பதற்கு கட்டுரையுள்ளதைக் காணலாம். இம்முறையை இங்கும் பின்பற்றுவது நல்லது. தேவையில்லை என்றால் அதனை வழிகாட்டல் பக்கத்தில் குறிப்பிடுங்கள். இல்லாவிட்டால் யாரும் எங்காவது விதி எழுதப்பட்டுள்ளதா? அல்லது நீங்களாகவே உருவாக்கிக் கொண்டீர்களா? எனக் கேள்வி எழுப்பலாம். நானும் பதிலுக்கு தற்காப்புத் தேட வேண்டிய அசாதாரண சூழலை உருவாக்கலாம். அல்லது en:Wikipedia:In the news/Candidates போன்ற ஒரு நடைமுறையினை இங்கும் கொண்டு வாருங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 12:36, 14 சனவரி 2018 (UTC)Reply
- அன்ரன், இங்குள்ள உரையாடலை இப்போது தான் பார்க்கிறேன். ஆனாலும்., நீங்கள் இதனை நீக்குவதற்கு ஒரு காரணம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக மேலே உள்ளதை எழுதியிருக்கிறீர்கள். ஒரு தமிழர் ஒரு உலகறிந்த விருது பெற்றால் அது முதல் பக்கத்தில் இடம்பெறலாம். சிறந்த நகைச்சுவை நடிகராக வேறொரு தமிழர் வேறோர் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டாலும், அது முக்கியமானதே. குறிப்பிட்ட கட்டுரையில் மேற்கோள்களுடன் செய்தி தரப்பட்டுள்லது. பிறிம்பாக செய்திக் கட்டுரை தேவையா? தேவை என்றால் மூன்று வரிக் கட்டுரை ஒன்றை எழுதலாம். பிரச்சினை இல்லை.
அதை விட, ஆசசு தொடரை இங்கு எதற்காகக் காரணம் காட்டுகிறீர்கள்? அதில் ஒருவர் தான் விளையாடுகிறாரா? ஆசசு தொடரை ஒரு அணி பெற்றுள்ளது. ஒவ்வொரு முறையும் இரண்டில் ஒரு அணி பெற்றுக் கொள்ளும். ஒவ்வோர் ஆண்டும் இது முதற்பக்கத்தில் வரும். இந்த விதியை இங்கு ஏன் கொண்டு வருகிறீர்கள்?--Kanags (பேச்சு) 07:53, 15 சனவரி 2018 (UTC)Reply
- @Ravidreams: தொடர்புள்ள உரையாடல் வேறு பக்கத்தில் உள்ளது.--Kanags (பேச்சு) 07:55, 15 சனவரி 2018 (UTC)Reply
- என்னுடைய கேள்விகள் மற்றதையும் கவனித்து, அவற்றுக்கும் பதில் தந்தால் மேலும் உரையாட உதவியாக இருக்கும். குறிப்பாக உசாத்துணை முரண்பாடு பற்றியது. --AntanO (பேச்சு) 07:57, 15 சனவரி 2018 (UTC)Reply
- அசீஸ் அன்சாரி சிறந்த நகைச்சுவை நடிகருக்கான 2017 ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் தமிழர் மற்றும் ஆசிய அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார் என்பதற்கு மேற்கோள் எங்குள்ளது? இருக்கும் மேற்கோள்களில் இது தொடர்பான செய்தியைத் தரவில்லை. --AntanO (பேச்சு) 08:00, 15 சனவரி 2018 (UTC)Reply
- //ஒரு தமிழர் ஒரு உலகறிந்த விருது பெற்றால் அது முதல் பக்கத்தில் இடம்பெறலாம்.// இதற்கு ஏதும் வழிகாட்டல் உள்ளது. --AntanO (பேச்சு) 08:03, 15 சனவரி 2018 (UTC)Reply
- 2017 ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் தமிழர் என்பதில் "முதல்" என்பது மிகைப்படுத்தல். மேலும் இவர் ஒரு தமிழ் முஸ்லிம் அல்லவா? --AntanO (பேச்சு) 08:12, 15 சனவரி 2018 (UTC)Reply
- //2017 ஆம் ஆண்டிற்கான தொலைக்காட்சி இசை மற்றும் நகைச்சுவை பகுப்பில் - சிறந்த நடிகருக்கான தங்க பூமி விருதை பெற்றார். இந்த விருதை பெரும் முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமையும் மற்றும் இந்த விருதைப் பெற்ற முதல் தமிழர்// இது தவறான தகவலா? அல்லது அவர் தமிழ் வம்சாவழி என்று நீங்கள் நம்பவில்லையா? எனினும் இச்செய்தி முதல் பக்கத்தில் இடம்பெறாவிட்டால் அசீசு அன்சாரி விக்கியின் மீது வழக்குப் போடப்போவதில்லை. உங்களுடன் உரையாடிப் பயனில்லை போல் தெரிகிறது. எனவே இனி உங்களுடன் மோத நான் தயாரில்லை. நீங்கள் மீள்வியுங்கள். நன்றி. கட்டுரையில் தேவையானால் கட்டுரைத் தகவல் பற்றி உரையாடலாம். கட்டுரையை நான் எழுதவில்லை. எழுதியவரைத் தொடர்பு கொள்ளலாம். என்னைப் பொருத்தவரையில் சரியான மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன எனவே நம்புகிறேன்--Kanags (பேச்சு) 08:19, 15 சனவரி 2018 (UTC)Reply
- //இவர் ஒரு தமிழ் முஸ்லிம் அல்லவா?// ஆகா, இப்போது தான் விளங்குகிறது. ஏன் நீங்கள் இச்செய்தியை எதிர்க்கிறீர்கள் என்பதை. இந்தியத் தமிழ் முசுலிம்கள் அவர்கள் முசுலிமை முதன்மைப் படுத்துவதில்லை. மதம் என்று வரும் போது தான் முதன்மைப் படுத்துகிறார்கள். இனம் என்று வரும் போது அவர்கள் இந்தியத் தமிழர். ஏ. ஆர். ரகுமான் முதல் தமிழ் முசுலிம் என்றா விளம்பரப்படுத்தினார்கள்? எனவே இங்கு மதம் சார்ந்ததாக சர்ச்சையைக் கொளப்பாதீர்கள். இப்போது உங்கள் பழைய கருத்துகளைத் தள்ளி விட்டு மதப் பிரச்சினையை இழுக்கிறீர்கள். --Kanags (பேச்சு) 08:19, 15 சனவரி 2018 (UTC)Reply
- //ஒரு தமிழர் ஒரு உலகறிந்த விருது பெற்றால் அது முதல் பக்கத்தில் இடம்பெறலாம்.// ஆம் இடம்பெறலாம். ஒரு தமிழர் நோபல் பரிசு பெற்றால் எழுதலாமா இல்லையா? அல்லது குறைந்தது புக்கர் பரிசு பெற்றால் எழுதலாமா இல்லையா?--Kanags (பேச்சு) 08:19, 15 சனவரி 2018 (UTC)Reply
- மேற்கோளுக்கும் செய்திக்கும் தொடர்பில்லை. இது விளங்குகிறதா? கட்டுரையில் தமிழ் முஸ்லிம் என்றுள்ளது. செய்தியில் தமிழர் என்கிறது. 2017 ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் தமிழர் என்பதற்கு மேற்கோள் இல்லை. இருக்கும் மேற்கோளுக்கு இவ்வரிகளுடன் தொடர்பில்லை. எது இடம்பெறலாம்? எது இடம்பெறக்கூடாது என்பதற்கான அளவீடு எது? எங்குள்ளது? --AntanO (பேச்சு) 08:25, 15 சனவரி 2018 (UTC)Reply
- யார் இங்கு சமய சர்ச்சையை ஏற்படுத்துவது? என்னை முஸ்லிம் எதிர்ப்பாளனாக காட்டி சந்தோசப்படுவதையிட்டு மகிழ்ச்சி. --AntanO (பேச்சு) 08:29, 15 சனவரி 2018 (UTC)Reply
- தேவையற்று என்னை சமய எதிர்ப்பாளனாகக் காட்ட முற்பட்டால், நான் என் பாதுகாப்புக் கருதி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்பதைப் பதிவு செய்கிறேன். --AntanO (பேச்சு) 08:33, 15 சனவரி 2018 (UTC)Reply
- கட்டுரையை வாசிக்கும் சிறு பிள்ளைக்கே விளங்கும். உங்களுக்கு ஏன் விளங்கவில்லை. கட்டுரையில் இவ்வாறுதான் எழுதப்பட்டுள்ளது: //2017 ஆம் ஆண்டிற்கான தொலைக்காட்சி இசை மற்றும் நகைச்சுவை பகுப்பில் - சிறந்த நடிகருக்கான தங்க பூமி விருதை பெற்றார். இந்த விருதை பெரும் முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமையும் மற்றும் இந்த விருதைப் பெற்ற முதல் தமிழர்என்ற புகழையும் பெருகிறார்// எங்கே தமிழ் முசுலிம் என எழுதப்பட்டுள்ளது. காட்டுங்கள். இந்த வரிகளில் உள்ள அனைத்துக்கும் மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. ஆங்கில ஊடகங்கள் என்பதால் முதலாவது ஆசியர் அல்லது ஆசிய அமெரிக்கர் எனத் தரப்பட்டிருக்கிறது. தமிழர் எனபதைத் தர வேண்டுமானால் தமிழ் ஊடகங்களை மேற்கோள் காட்டலாம். இதனை நீங்கள் முன்னரே கூறியிருந்தால் அந்த மேற்கோலஈ நான் தேடித் தந்திருப்பேன். மூன்று நாள் விவாதம் வீணாகி விட்டது.--Kanags (பேச்சு) 08:41, 15 சனவரி 2018 (UTC)Reply
- //ஒரு தமிழர் ஒரு உலகறிந்த விருது பெற்றால் அது முதல் பக்கத்தில் இடம்பெறலாம்.// ஆம் இடம்பெறலாம். ஒரு தமிழர் நோபல் பரிசு பெற்றால் எழுதலாமா இல்லையா? அல்லது குறைந்தது புக்கர் பரிசு பெற்றால் எழுதலாமா இல்லையா?--Kanags (பேச்சு) 08:19, 15 சனவரி 2018 (UTC)Reply
- இரவி, முதற்பக்க செய்திகளை பயனர் அன்ரன் மட்டுமே தொகுக்கக்கூடியதாக காப்பிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஏனேன்றால் அவருக்குத் தான் தெரியும் எது முக்கியம் எது முக்கியமில்லை என்று. ஆங்கில விக்கியிலும் நன்கு பரிச்சயமானவர். விக்கி விதிகளை நன்கு அறிபவர். முதற்பக்கக் கட்டுரைகளில் எனது பங்களிப்புகள் இவ்வாறு தான் தேவையற்ற உரையாடல்கள் மூலம் தடுக்கப்பட்டது. இப்போது செய்திகளிலும் கை வைக்கப்பட்டுள்ளது. நன்றி. அதை விட, தானே தேவையில்லாமல் "முசுலிம்" என சர்ச்சையைக் கிளப்பி விட்டு இப்போது என்னைப் பயமுறுத்துகிறார். எனக்கும் பயமாக உள்ளது. நானும் பாதுகாப்புத் தேடப் போகிறேன்:) இங்கு எதற்காக முசுலிம் என்ற புதிய பிரச்சினையைக் கிளப்பினார் எனத் தெரியவில்லை. செய்தியில் எதுவும் அவ்வாறில்லை.--Kanags (பேச்சு) 08:41, 15 சனவரி 2018 (UTC)Reply
- பாதுகாப்பு உதவிக்கு en:Wikipedia:Harassment. திரும்பவும் ஒரே விடயத்தைப் பேசுவதில் பயனில்லை. ஆகா, நான் ஒருவனே குற்றவாளி. குற்றவாளியாக இருந்துவிட்டுப் போவதில் ஆட்சேபனை ஒன்றுமில்லை. --AntanO (பேச்சு) 08:57, 15 சனவரி 2018 (UTC)Reply
- //அசீஸ் அன்சாரி சிறந்த நகைச்சுவை நடிகருக்கான 2017 ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் தமிழர் மற்றும் ஆசிய அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.// மிகவும் எளிமையாகப் புரியும், சரியான மேற்கோள்களுடன் இருக்கும் இந்தச் செய்தி ஏன் நீக்கப்படுகிறது என்பதுதான் புரியவில்லை. அசீஸ் அன்சாரி ஒரு ஆசிய அமெரிக்கர், அவர் ஒரு தமிழர் அல்லது தமிழ் மரபுவழி வந்தவர் என்பதற்கான மேற்கோள்கள் இருக்கின்றன. விருதுபெற்ற முதல் ஆசியர் என்னும்போது. அவர் முதல் தமிழரும்கூட. இதில் என்ன குழப்பம், எதற்காக நீக்கப்பட வேண்டும் என்பதுதான் தெரியவில்லை. அவசியமேற்படின் சிறு திருத்தத்துடன் செய்தியை மாற்றியமைத்திருக்கலாம். அவ்வாறின்றி நீக்குவதும் அவசியமற்றதாகவே தோன்றுகின்றது. --கலை (பேச்சு) 17:50, 15 சனவரி 2018 (UTC)Reply
- சிறந்த நகைச்சுவை நடிகருக்கான 2017 ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருது என்பது 2017 இற்கு மட்டுமே. அது ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும். இதில் ஏன் முதல் தமிழர் என்ற அடைமொழி? இந்த வரிக்கான மேற்கோள் அங்கு இல்லை! இல்லையென்றால், அதனை இங்கு பிரிதியிட முடியுமா? பேசாமல் இருந்தாலும் சிலர் என்னைத்தான் குறி வைப்பீர்கள் போல் உள்ளது. --AntanO (பேச்சு) 01:59, 16 சனவரி 2018 (UTC)Reply
- கொடுக்கப்பட்ட சொற்றொடரில் செய்தி சரியாகப் புரியவில்லை என்றால், அதனைச் சிறிது மாற்றியமைக்கலாம். அல்லது எழுதியவரை மாற்றியமைக்கக் கேட்கலாம். அவ்வாறின்றி நீக்குதல் அவசியம்தானா என்று தோன்றியது, அதனால் எனது கருத்தை இட்டேன். சொற்றொடரை அசீஸ் அன்சாரி சிறந்த நகைச்சுவை நடிகருக்கான 2017 ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருதைப் பெற்றார். இதன்மூலம் கோல்டன் குளோப் விருதைப் பெற்ற முதல் தமிழர் (அல்லது தமிழர் மரபுவழி வந்தவர்) மற்றும் ஆசிய அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார். என்று மாற்றியமைக்கலாமே. முதல் தடவையாக இந்த விருதைப் பெற்ற ஆசியர் என்றும், அவர் ஒரு தமிழர் அல்லது தமிழர் மரபுவழி வந்தவர் என்றும் மேற்கோள்களில் உள்ளதே. மேற்கோள்களின் தொகுப்பின் அடிப்படையில்தானே செய்தி உள்ளது. அதனால் அவ்வாறு செய்தியில் எழுதுவதில் தவறில்லையே.
- //பேசாமல் இருந்தாலும் சிலர் என்னைத்தான் குறி வைப்பீர்கள் போல் உள்ளது.// என்று இப்போ எதற்காகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. உங்களைக் குறிவைத்துத் தாக்குவதற்கு எனக்கும், உங்களுக்கும் எந்தவொரு முன் விரோதமும் இல்லை. அப்படி எங்கும் நிகழ்ந்ததாகவும் நினைவில் இல்லை. எதற்கும் நான் இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன். எனது கருத்துக்களைக் கேட்பதும், கேட்காமல் விடுவதும் உங்கள் விருப்பம்.
- --கலை (பேச்சு) 17:23, 16 சனவரி 2018 (UTC)Reply
- //முதல் தடவையாக இந்த விருதைப் பெற்ற ஆசியர் என்றும், அவர் ஒரு தமிழர் அல்லது தமிழர் மரபுவழி வந்தவர் என்றும் மேற்கோள்களில் உள்ளதே.// எங்குள்ளது? அதற்கான இணைப்பு எது? Eg: Ref1
Aziz Ansari made history Sunday night for South Asian representation at the Golden Globes.
- //முதல் தடவையாக இந்த விருதைப் பெற்ற ஆசியர் என்றும், அவர் ஒரு தமிழர் அல்லது தமிழர் மரபுவழி வந்தவர் என்றும் மேற்கோள்களில் உள்ளதே.// எங்குள்ளது? அதற்கான இணைப்பு எது? Eg: Ref1
During the 75th annual ceremony hosted by Seth Meyers on Sunday, the Master of None co-creator and star won Best Actor, Television – Comedy, marking the second time an actor of South Asian descent has won a Golden Globe in 35 years. Ben Kingsley, who is of Indian descent, won for Best Actor – Motion Picture, Drama in 1982.
Both Ansari and Hong Chau (Downsizing) were the only two Asian actors nominated at the Golden Globes, representing roughly three percent of the actors recognized across all the film and TV categories. The last actor of Asian descent to be nominated was Riz Ahmed in 2017, for the HBO miniseries, The Night Of. The only other actors of Asian descent to win Globes in the awards' 75-year history include Haing S. Ngor, Peg Tilly, Sandra Oh and Vic Tayback.
Asian representation onscreen and at awards show has long been a problem in Hollywood, only to be further exasperated at the 2016 Oscars, which was already under scrutiny after the Academy failed to nominate any people of color in the acting categories, when host Chris Rock brought out three Asian-American children for a stereotype-laden sight gag.
The response was immediate. Wu and Kim slammed the joke on Twitter, and a few days later, Sandra Oh, George Takei, and director Ang Lee were among several Academy members to sign an open letter, calling for an apology.
At the 2016 Primetime Emmys, Master of None co-creator Alan Yang made a plea that the industry strive to write and produce more Asian stories that reflect diverse audiences watching TV.
"There's 17 million Asian Americans in this country, and there's 17 million Italian Americans," Yang said while accepting the Emmy for comedy writing. “They have The Godfather,’ Goodfellas, Rocky, The Sopranos. We got Long Duk Dong, so we’ve got a long way to go. But I know we can get there. . . . Asian parents out there, if you could just do me a favor, if just a couple of you get your kids cameras instead of violins, we’ll be all good."
- இது ஒரு மேற்கோள். இதில் அவ்வாறு எங்குள்ளது? இதற்கு மேலும் விளக்க முடியாது? --AntanO (பேச்சு) 19:14, 16 சனவரி 2018 (UTC)Reply
- அன்ரன், இது பற்றி மேலும் உரையாடக் கூடாது எனவே நினைத்திருந்தேன். ஆனால் மேலும் மேலும் குழந்தைப் பிள்ளைகள் மாதிரி கேள்வி கேட்கிறீர்கள். நீங்கள் ஒரேயொரு மேற்கோளைக் காட்டி அதில் குறிப்பாகத் தமிழர் எனக் குறிப்பிடவில்லை எனக் கூறுகிறீர்களா? அனைத்தும் ஒரே மேற்கோளில் இருக்க வேண்டிய அவசியமென்ன? ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு முறையில் தகவல் தரும். அனைத்தையும் ஒன்று கூட்டி எழுதுவதே விக்கியில் வழக்கம். //The only other actors of Asian descent to win Globes in the awards' 75-year history include Haing S. Ngor, P(M)eg Tilly, Sandra Oh and Vic Tayback.// இதன் படி என்ன சொல்கிறது. இங்கு குறிப்பிட்ட நால்வர் + பென் கிங்ஸ்லி + அசீசு இவர்கள் ஆறு பேருமே இதுவரை கோல்டன் குளோப் பரிசு பெற்ற ஆசிய வம்சாவழி நடிகர்கள். இந்த அறுவரில் பென் கிங்சுலியும், அசீசும் மட்டுமே இந்திய வம்சாவழியினர். இவர்களில் பென் கிங்சுலி தமிழர் அல்ல. அசீசு மட்டுமே தமிழ் வம்சாவழி. இவ்வாறு தான் நான் மேலேயுள்ள நீங்கள் தந்த செய்திக் குறிப்பை விளங்கிக் கொண்டேன். நீங்கள் வேறு மாதிரி விளங்கிக் கொண்டீர்களா? உங்களின் முடிவு என்ன? அசீசு செய்தது சாதனை இல்லையா? அல்லது அது முதற்பக்கத்தில் வர வேண்டிய சாதனையே இல்லையா? இதனை இனிமேல் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடுங்கள். ஏனென்றால் கட்டுரையில் பிழை இருந்தால் அதனைக் கட்டுரையில் தான் உரையாடித் திருத்த வேண்டும். எவ்வாறு கட்டுரைப் பகுதியைத் திருத்தி எழுத வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? அல்லது போதுமான மேற்கோள்கள் இல்லையென அனைத்தையுமே நீக்கி விடலாமா? இதனை நான் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் பிரதியிடவுள்ளேன். அங்கு உரையாடுவோம். @Kalaiarasy:--Kanags (பேச்சு) 08:25, 17 சனவரி 2018 (UTC)Reply
- //ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு முறையில் தகவல் தரும். அனைத்தையும் ஒன்று கூட்டி எழுதுவதே விக்கியில் வழக்கம்.// இதைத்தான் நானும் கூறினேன். பல மேற்கோள்களிலும் உள்ளதை இணைத்துச் செய்தியாக்கப்பட்டுள்ளது என்பதையே கூறினேன். ஒருவேளை விரிவாக விளக்கம் கொடுக்காததால், புரிந்து கொள்ளப்படவில்லையா எனத் தெரியவில்லை. --கலை (பேச்சு) 16:44, 17 சனவரி 2018 (UTC)Reply
- இங்கு குழந்தை என்ற உவமானம் தேவையற்றது. மற்றவரை சீண்டும் வேலையை நிறுத்த வேண்டும். பதிலுக்கு நானும் ***** என்று உரையாடலாம். உரையாடத் தெரியாவிட்டால் ஒதுங்கியிருக்கலாம். இதுவே இறுதியாக இருக்கட்டும். அடுத்த முறை இவ்வாறு கோரிக்கையின்றி பதிலுக்கும் நானும் சில சொற்கள் பாவிப்பேன். எதற்கும் ஒரு அளவுண்டு. இங்கு இடப்பட்ட மேற்கோள்கள் ஆ.வியில் இருந்து எடுக்கப்பட்டது. ஆனால் தமிழில் தொடர்பற்று எழுதப்பட்டது. ஏற்கெனவே இருந்த மேற்கோள் முழுவதிலும் தமிழர் என்ற சொல்லாடலைக் காட்ட முடியுமா? ஆம், என்றால் காட்டுக. ஏரண விளக்கம் வேண்டாம்.--AntanO (பேச்சு) 19:09, 17 சனவரி 2018 (UTC)Reply
- ஆங்கில இணைப்பில் உள்ள கட்டுரையில் தமிழர் என்றிருந்தால் மட்டுமே இச்சாதனை உணமையாகுமா? அவர் தமிழ் வம்சாவழி என்று கட்டுரையில் எங்காவது கொடுக்கப்பட்டுள்ளதா என்பதைப் பாருங்கள். நோபல் பரிசு பெற்ற ஒரு இந்தியத் தமிழரின் சாதனையை ஒரு ஆங்கில ஊடகம் எவ்வாறு எழுதும்? அவர் ஓர் இந்தியர் என்றுதான் எழுதும். தமிழர் என்று எழுதாது. அவ்வாறே, அசீசு என்சாரி என்பவர் தமிழ் மரபினர் என்பது அனைவரும் அறிந்தது. அத்துடன் அதற்கான ம்னேற்கோளும் கட்டுரையின் ஓரிடத்தில் தரப்பட்டுள்ளது. இதற்கு மேல் உங்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. இப்போது தான் முதன் முதலில் ஒரு விக்கிக் கட்டுரை எழுதுகிறீர்கள் போல் உரையாடுகிறீர்கள். நீங்கள் ஆரம்பத்திலேயே முதல் தடவை தவறுதலாக மீளமைத்து விட்டீர்கள். அதனை ஒப்புக் கொள்ள மனமில்லாமல், பின்னர் அதற்குப் பல்வேறு காரணங்களையும் தேடிக் கண்டு பிடித்துக் குற்றம் காண்கிறீர்கள். இரண்டாவது மேற்கோளில் அவர் தமிழர் என்ற அடையாளம் காட்டப்படவில்லையா? திரும்பவும் உன்னிப்பாகப் பாருங்கள். இனிச் சொல்லுங்கள். மேலே நான் எழுதியவையெல்லாம் உண்மையில் ஓர் ஆரம்ப விக்கிப் பயனருக்கு எழுதியதாகவே இன்னமும் நான் நம்புகிறேன். இனிமேலும் உங்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கப்போவதில்லை. நீங்கள் என்னை எவ்வாறு அழைத்தாலும் பரவாயில்லை. மிக்க நன்றி. --Kanags (பேச்சு) 06:23, 18 சனவரி 2018 (UTC)Reply
- கட்டுரையை காட்சிப்படுத்தியாகிவிட்டது. ஆகவே தவறு என்றாலும் ஏற்ற கொள்ள முடியாது என்ற நிலைப்பாடு விளங்குகிறது. மேற்கோள் பற்றிய விளக்கம் சிறுபிள்ளைத்தனமானது. மேற்கோள் இருந்தால்தான் நம்பகத்தன்மை விளங்கும். அறிந்தவர் என்பதற்கான தமிழர் என்று ஏற்றுக் கொள் என்ற வாதம் பிழையானது. இல்லையென்றால் விக்கியின் வழிகாட்டல் காட்டுக. இரண்டாவது மேற்கோளில் பின்பு சேர்க்கப்பட்டது. வரலாற்றுப் பக்கம் காண்க. இது பொதுவான இடம். இங்கு நீங்கள் விருப்பிய, பிழையென்றாலும் காட்சிப்படுத்த பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பிழையென்றால் மறுப்ப வெளிப்படும். இல்லைடியன்றால், en:Wikipedia:In the news/Candidates இவ்வாறு பயனர் கருத்துக் கேட்டு காட்சிப்படுத்துக. இங்கு நடுநிலையான ஒருவர் இருந்தால் உண்மையை விளங்கிக் கொள்ள முடியும் என்பதையும் கவனிக்க. மேலும், முடிந்தால் ஆ.வியில் ஒரு செய்தி தொடர்பான கட்டுரையை எழுதி காட்சிப்படுத்திவிட்டு அனுபவத்தைப் பகிரவும். --AntanO (பேச்சு) 19:38, 19 சனவரி 2018 (UTC)Reply
- நீங்கள் செய்தியை நீக்கும் போதே 4 சான்றுகள் தரப்பட்டிருந்தன. இவற்றை விட வேறு என்ன சான்றுகள் வேண்டும். அவர் தமிழர் என்பதற்கு கட்டுரையின் வேறோர் இடத்தில் சான்று தரப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் செய்தியை நீக்குவதற்குக் கொடுத்த காரணம்: ////No article for the news. See https://en.wikipedia.org/wiki/75th_Golden_Globe_Awards//// என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கூறிய காரணம் தவறு என்று எடுத்துக் காட்டிய பின்னர் வேறு பல காரணங்களை ஒவ்வொன்றாக நீங்களாகவே கண்டுபிடித்தீர்கள். முதற்பக்கம் கடந்த பல மாதங்களாக இற்றைப்படுத்தப்படாமல் உள்ளது. முதற்பக்கக் கட்டுரைகளில் எனது பங்களிப்பை ஏற்கனவே நிறுத்தி விட்டீர்கள். இனிமேல் செய்திகளிலும் கைவக்கப்போவதில்லை. உங்களால் முடிந்தால் முதற்பக்கத்தை ஆங்கில விக்கி விதிகளுக்கேற்பக் கவனியுங்கள். நன்றி.--Kanags (பேச்சு) 21:25, 19 சனவரி 2018 (UTC)Reply
- திரும்பத்திரும்ப சான்று என்று கூறாது, முறையாகக் காட்டவும். மேற்கோளுக்கும் செய்திக்கும் தொடர்பில்லை. நிற்க, இவர் தமிழரா என்பது தெரியாது. அதனை முறையான மேற்கோள் மூலமாகத்தான் அறிய முடியும். ஏற்கெனவே, நீங்களுக்கான காரணம் தெரிவித்துவிட்டேன். தொகுப்புச் சுருக்கத்தில் எல்லாவற்றையும் தெரிவிக்கவியலாது. முதற்பக்கம் கடந்த பல மாதங்களாக இற்றைப்படுத்தப்படாமல் உள்ளதற்கும் எனக்கும் தொடர்பில்லை. நான் பங்களிப்பை நிறுத்தினேன் என்பது அப்பட்டமான அவதூறு. அனுதாபம் தேடும் செயல்! அக்கட்டுரைக்கு பொருத்தமற்ற உரையாடல். முதற்பக்கம் முதற்கொண்டு பல பகுதிகளை கவனித்தக் கொண்டிருக்கிறேன். தேவையான இடத்தில் எனது கருத்தை வெளிப்படுத்த தயங்கமாட்டேன். --AntanO (பேச்சு) 10:58, 20 சனவரி 2018 (UTC)Reply