பேச்சு:அடிநா அழற்சி
பாராட்டுகள்
தொகுஇது நல்ல கட்டுரை, நன்றாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நல்ல நீளம். தெரிய வேன்டிய கட்டுரை.
"இதனை உரை திருத்த உதவுங்கள்" என்று முதலில் போடுவது, தேவையற்ற செயலாகும். ஏனெனில் அந்த அறிவுரை எப்பொழுதும், எல்லாக் கட்டுரைகளுக்கும் பொருந்தும். அந்த 'முன்னுரை' இட்ட பயனர், அவர் கண்ட பிழைகளை திருத்த வேண்டும்.--217.169.51.254 12:45, 26 ஏப்ரல் 2010 (UTC)
- இவ்வார்ப்புரு கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் எழுதப்படும் அனைத்துக் கட்டுரைகளிலும் இடப்படுகிறது. கூகுளின் திட்டம் குறித்து தர மதிப்பீடு செய்ய இவ்வார்ப்புரு உதவும். வார்ப்புருவில் தேவையான மாற்றங்களை இங்கு தெரிவிக்கலாம். அதை விடுத்து எல்லா கட்டுரைகளிலும் ஒரே கருத்தை இட்டு எரிதப் பதிப்பைக் கூட்ட வேண்டாம்--ரவி 12:52, 26 ஏப்ரல் 2010 (UTC)
ஒவ்வொரு கட்டுரையும் 'முழுமை'யாக இருக்க வேண்டும்.- அதாவது அதன் விமர்சனங்கள், எதிர்விமர்சனங்கள் அக்கட்டுரையின் கூடே இருக்க வேண்டும். ஒரு பயனர் விமர்சனத்தை மட்டும் படித்துவிட்டு, எதிர்விமர்சனத்தை பார்க்க முடியாமல் இருக்கக் கூடாது.--217.169.51.254 13:02, 26 ஏப்ரல் 2010 (UTC)
- இவ்வார்ப்புருவில் விமர்சனம் ஏதும் இல்லை. கூகுள் திட்டத்தினை ஒழுங்குபடுத்தும் முகமாக இவ்வார்ப்புரு இடப்படுகிறது. இது போல் பல்வேறு திட்டங்களுக்கும் வார்ப்புருக்கள் இடப்படுகின்றன. தேவையான மாற்றங்களைத் தயவு செய்து வார்ப்புருவின் பேச்சுப் பக்கத்தில் இடுங்கள்--ரவி 13:05, 26 ஏப்ரல் 2010 (UTC)
கட்டுரையின் முன்னால் "இதனை உரை திருத்த உதவுங்கள்" என எழுதிவிட்டு விமர்சனம் ஒன்றும் இல்லை என சொல்ல முடியாது. --217.169.51.254 13:07, 26 ஏப்ரல் 2010 (UTC)
- மற்ற கட்டுரைகளில் அவற்றை எழுதிய பயனரே உரை திருத்துவார் என்று எதிர்பார்க்கலாம். கூகுள் பயனர்கள் இதுவரை அப்படி உரை திருத்துவதில்லை. எனவே, இதில் மற்றவர்களின் உதவியையும் கோருகிறோம். ஒவ்வொரு கூகுள் கட்டுரையிலும் ஒரு வார்ப்புரு இட வேண்டிய தேவை உள்ளது. வார்ப்புருவில் என்ன எழுதுவது என்று உங்கள் ஆலோசனைகளைத் தெரிவியுங்கள்--ரவி 13:29, 26 ஏப்ரல் 2010 (UTC)