பேச்சு:அடும்பு

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic பெயர்

Plant என்பதற்குத் தாவரம் என்ற சொல்லே இலங்கை, தமிழ்நாடு ஆகிய இடங்களில் பயன்பட்டு வருகிறது. (தமிழ் இணையப் பல்கலைக்கழகக் கலைச்சொல் அகராதியில் பார்க்கவும்). இக்கட்டுரையில் நிலத்திணை என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. புழக்கத்தில் பொதுவான சொற்கள் இருக்கும் போது புதிய சொற்களைப் பயன்படுத்துவது நல்லதல்ல என்பது எனது கருத்து. நிற்க, நிலத்திணை என்பது தமிழ் இலக்கியத்தில் குறிஞ்சி, மருதம், முல்லை, பாலை, நெய்தல் ஆகிய நில வகைகளைக் (நிலத்திணை) குறிக்கவே பயன்படுகின்றது. Mayooranathan 07:52, 25 மே 2006 (UTC)Reply

என் தவறு. நிலைத்திணை என்று இருந்திருக்க வேண்டும். Tamil lexicon பார்க்கவும். Quote: [நிலைத்திணை (p. 2280) [ nilaittiṇai ] n nilai-t-tiṇai . < id. +. The category of the immoveables, as the vegetable kingdom, opp. to iyaṅku-tiṇai; ] end Quote. தாவரம் என்ற சொல் ஸ்தாவர என்ற வடமொழியிச் சொல்லாகும். நிலைத்து நகராமல் ஒர் இடத்தில் இருப்பதால் மரஞ்செடிகொடி இனத்தை நெடுங்காலமாக நிலைத்திணை என்றுதான் வழங்கி வந்துள்ளனர். வடமொழிச் சொற்களை கட்டாயம் விலக்க வேண்டும் என்பது இல்லை. தமிழ்ச் சொற்களை ஆண்டால், ஒரு சொல்லுக்கு ஒரு சொல் துணையாக நின்று வலு சேர்க்கும் என்பதும் சொற்கள் இயல்பாக வளர்ச்சி அடையும் என்பதும் அடிப்படை உண்மைகள். Just like there is an ecosystem, there is a linguistic ecosystem, each word, word-parts mutually sstrenthening each other. பயனர்:C.R.Selvakumarசெல்வா--72.140.138.83 12:43, 25 மே 2006 (UTC) நிலத்திணை வேறு நிலைத்திணை வேறு. நிலம் நிலை என்னும் இருவேறு சொற்களின் அடிப்படையில் தோன்றிய சொற்கள்.பயன்ர்:C.R.Selvakumar செல்வா--C.R.Selvakumar 13:00, 25 மே 2006 (UTC)Reply

I prefer continuing the word தாவரம். However pure and correct நிலைத்திணை may be, i don feel it is a good idea to change a widely established current term. There are enough allowances in Tamil grammar to accept words from foreign languages. Already, we have enough problems coining and promoting new tamil words for scientific tamil terms. as discussed many times in Tamil wikipedia, we all keep in mind that good tamil should be promoted through this site but we should also strike a balance in usages like this. However words like நிலைத்திணை can and should be registered in Tamil wiktionary and any amount of detail in explaining the word be given there--ரவி 15:09, 25 மே 2006 (UTC)Reply

ரவியின் கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன். வடமொழியில், ஸ்தாவர என்பது நிலைத்திருப்பது என்ற பொருளைத் தந்தாலும், தமிழில் அது சிறப்பாக PLANT என்னும் பொருள் தரவே பயன்படுத்தப்படுகின்றது. கலைச்சொல்லாக மட்டுமன்றிப், பொது வழக்கிலும் பரவலாகப் பயன்படும் சொல். நல்லதமிழ் என்பதற்காகப் புதிய சொற்களைப் புகுத்துவது குழப்பத்தைத்தான் விளைவிக்கும். நிற்க, தமிழ் லெக்சிகன், நிலத்திணை என்பதற்குத் தாவர வர்க்கம் என்ற பொருளைத் தரவில்லை. The category of the immoveables, as the vegetable kingdom என்றுதான் உள்ளது. இதன்படி தாவரங்களைப் போல், அசையாப் பொருள்கள் என்ற பொருள் தான் கொள்ளவேண்டும். நிலம் முதலிய அசைவற்ற பொருட்களையும் இது உள்ளடக்குகிறது. அதே லெக்சிகனிலிருந்து எடுத்த கீழேயுள்ள பகுதியைப் பார்க்கவும்.

அசரம் (p. 0029) [ acaram ] n a-caram . < a-cara. Motionless things; நிலைத்திணை. அசர சர பேதமான (தாயு. சின். 4).

இயங்குதிணை (p. 0300) [ iyangkutiṇai ] n iyaṅku-tiṇai . < id. +. Class of things that move, opp. to நிலைத்திணை; சரப்பொருள். (நன். 299, விருத்.)

Mayooranathan 16:10, 25 மே 2006 (UTC)Reply

பெயர்

தொகு

அடும்பு என்று கேள்விப்பட்டதில்லை. அதற்கு ஆதாரமிருந்தால் அதனைக் கட்டுரையில் தந்தால் நல்லது. அடம்பு என்பதற்கு ஆதாரமாக அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்றொரு பழமொழி இருக்கிறது.--பாஹிம் (பேச்சு) 16:14, 8 நவம்பர் 2015 (UTC)Reply

செடி?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:21, 8 நவம்பர் 2015 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அடும்பு&oldid=1950156" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அடும்பு" page.