பேச்சு:அணு உலை வெப்பமாற்றி


இதன் தலைப்பில் 'அணு உலை' என்று இடைவெளி விட்டு இருக்க வேண்டும். இல்லையெனில் தமிழ் மரபுப்படி அணுவுலை என்றிருக்க வேண்டும். எனது உகப்பு அணு உலை என்பதே. இது போல் இடைவெளியின்மையை வேறு பல கட்டுரைத் தலைப்புகளிலும் கவனித்திருக்கிறேன். கருத்துகள்? --இரா. செல்வராசு (பேச்சு) 23:43, 17 மார்ச் 2012 (UTC)

மீண்டும் கட்டுரையைப் படித்துப் பார்த்ததில், இதன் தலைப்பை இன்னும் மாற்ற வேண்டும் எனத் தோன்றுகிறது. வெப்பமாற்றி என்பது en:Heat Exchanger. இதை வெப்பப் பரிமாற்றி என்றும் சொல்லலாம். விக்சனரியில் கூட இதற்கு வெப்பாற்றி என்று இருக்கிறது. வெப்பத்தை ஆற்றுவது வெப்பாற்றி. http://ta.wiktionary.org/wiki/coolant

குளிர்வி என்றால் கூட Cooler என்று பொருள் படும். Coolant-ஐ குளிர்ப்பி அல்லது குளிர்ப்பான் என்று சொல்லலாமா? --இரா. செல்வராசு (பேச்சு) 23:58, 17 மார்ச் 2012 (UTC)

கலைச்சொல்லாக்கம் என்பது தொடர்ந்த ஓர் கற்றலாகவே உள்ளது. குளிர்வி கூட விக்சனரியில் இருந்து எடுத்ததுதான். எனவே இங்கு நடைபெறும் உரையாடல்களைக் கொண்டு பொருத்தமானத் தலைப்பிற்கு மாற்றலாம். --மணியன் (பேச்சு) 06:37, 18 மார்ச் 2012 (UTC)

Start a discussion about அணு உலை வெப்பமாற்றி

Start a discussion
Return to "அணு உலை வெப்பமாற்றி" page.