பேச்சு:அதிதைராய்டியம்

மற்ற பல கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைக் காட்டிலும் இது ஓரளவு பரவாயில்லை போலத் தெரிகிறது. இருந்தாலும், முதல் வரியில் சுதந்திரமாக என்று என்ன சொல்ல வருகிறார்களெனப் புரியவில்லை. விக்சனரியிலுள்ள மிகை புரிசைச்சுரப்பு என்பது இன்னும் நல்ல தலைப்பாகக் கூடும். அதை ஒரு கூடுதல் தலைப்பாகப் பரிந்துரைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:04, 7 ஏப்ரல் 2010 (UTC)

பின்வரும் வரையறையின்படி, free thyroid என்பதற்கு சுதந்திரமான தைராய்டு என்பது

சரியே எனக் கருதுகிறேன்.

The free hormone hypothesis states that the biological activity of a given hormone is 
affected by its unbound (free) rather than protein-bound concentration in the plasma. 

முகவரி: http://edrv.endojournals.org/cgi/content/abstract/10/3/232


The unbound fraction of hormone is the indicator of what is available to tissues, 
available for metabolism and excretion.

முகவரி: http://medical-dictionary.thefreedictionary.com/free+hormone+hypothesis

தாங்கள் பரிந்துரைத்த தலைப்பும் சிறப்பாகவே உள்ளது, தூய தமிழ்ப்பெயரும் கூட. ஆனால் பயனருக்கு எளிதில் புரியக்கூடிய சொற்கள் இருக்கையில் கடினமான சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம் என்ற உள்ளூர்மயமாக்கல் தத்துவத்தின்படியே அதிதைராய்டியம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளோம். நன்றி -- சாந்த குமார்
விளக்கத்துக்கு நன்றி, சாந்த குமார். தலைப்பைப் பொருத்தவரை பெரிய சிக்கலில்லை. எனது மாற்றுப் பயன்பாட்டிலிருந்து இந்தத் தலைப்புக்கு மாற்றுவழி ஏற்படுத்தி விடலாம். இந்த இடத்தில் free என்பதை விடுபட்ட அல்லது புரதம்-சாரா எனக் குறித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மற்றவர்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 14:34, 9 ஏப்ரல் 2010 (UTC)
"புரதம்-சாரா" எனக் கூறுவது சிறப்பாகவே இருக்கும் சுந்தர். விரைவில் மாற்றம் செய்யப்படும்..!! நன்றி ----Shanthalan 03:05, 12 ஏப்ரல் 2010 (UTC)
நன்றி சாந்தகுமார். கட்டுரையில் மாற்றியதைக் கவனித்தேன். -- சுந்தர் \பேச்சு 04:47, 12 ஏப்ரல் 2010 (UTC)

செம்மைபடுத்தும் பணி நிறைவுற்றது

தொகு

{ஆயிற்று} சரவணன் பெரியசாமி 03:09, 13 அக்டோபர் 2024 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அதிதைராய்டியம்&oldid=4114552" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அதிதைராய்டியம்" page.