பேச்சு:அயனமண்டல நோய்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy
இந்த கட்டுரையின் தலைப்பை அயனமண்டல தொற்றுநோய் என மாற்றலாமா? --கலை 12:04, 25 ஆகத்து 2011 (UTC)
- காரணம்? --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:04, 21 நவம்பர் 2011 (UTC)
- அனேகமாக அயனமண்டல நோய்கள் என அழைக்கப்படுபவை தொற்றுநோய்களாகவே இருக்கின்றன. ஆனால் எல்லா அயனமண்டல நோய்களும் தொற்றுநோய்கள்தானா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. யாராவது இதுபற்றி தெரிந்தவர்கள் கூறினால் நல்லது. --கலை 11:39, 21 நவம்பர் 2011 (UTC)
- பொதுவான பெயரீட்டு வழமை (எல்லா மொழிகளிலும் அயனமண்டல நோய் என்றே உள்ளது) காரணமாக இக்கட்டுரை அயனமண்டல நோய் என்று இருப்பதே சிறந்தது, அயனமண்டலத் தொற்றுநோய் என்பது இதன் ஒரு பகுதி எனலாம்; ஆனால் மருத்துவ நடைமுறையில் அயனமண்டலத் தொற்றுநோய் "அயனமண்டல நோய்" என்று அழைக்கப்படுகின்றது. சில (தொற்று உள்ள அல்லது தொற்று அல்லாத) தோல் நோய்கள் அயனமண்டலத்தில் ஏற்படும் நோயாக இருந்தாலும் tropical diseases எனும் பிரிவுக்குள் அடக்கப்படுவது இல்லை, மாறாக "tropical skin diseases" என்று கூறப்படுவது உண்டு, பங்கசுக்களால் ஏற்படும் தொற்று நோய்கள் இதில் அடங்கும். சில (Leishmaniasis போன்ற) tropical diseases தோல் நோய்களை உண்டாக்குகின்றது என்பது புறக்கணிக்கத்தக்கது எனலாம்.
இதைவிட, "தொற்றுநோய்" எனும் வரைவிலக்கணத்துக்குச் சார்பாக சில "அயனமண்டலத் தொற்றுநோய்"கள் அமையவில்லை என்று நான் கருதுகிறேன். குடற்புழுக்களால் ஏற்படும் பாதிப்பை தொற்று நோய் என்று அழைத்தல் உகந்தது அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 13:55, 21 நவம்பர் 2011 (UTC)
- செந்தி! நீங்கள் கூறுவது சரியெனவே தோன்றுகின்றது.--கலை 22:24, 21 நவம்பர் 2011 (UTC)