தலைப்பு தொகு

அரசிதழ் என்பது உத்தியோகபூர்வப் பெயரா? இந்தியாவில் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறியேன். இங்கே பல்வேறு பெயர்கள் தரப்பட்டுள்ளமையால் சற்றுக் குழப்பமாக உள்ளது. ஆனால் இலங்கையில் அரசாங்க வர்த்தமானி என்பது உத்தியோகபூர்வப் பெயராகும். வர்த்தமானி என்பது gazette என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல்லாகப் புழக்கத்தில் இருக்கிறது.--பாஹிம் (பேச்சு) 06:05, 18 சனவரி 2015 (UTC)Reply

அரசிதழ் என்னும் சொல் தமிழகத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது.--நந்தகுமார் (பேச்சு) 06:23, 18 சனவரி 2015 (UTC)Reply

பயன்படுத்தப்படுகிறது என்பது வேறு, உத்தியோகபூர்வப் பெயர் என்பது வேறு. இது உத்தியோகபூர்வப் பெயரா என்றே கேட்கிறேன். உத்தியோகபூர்வப் பெயராக இல்லாதவிடத்து, வர்த்தமானி என்ற பெயருக்கு இத்தலைப்பை மாற்ற வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 07:45, 26 ஏப்ரல் 2016 (UTC)

வர்த்தமானி இலங்கையில் மட்டும் தான் தமிழில் அதிகாரபூர்வப் பெயர். அது கட்டுரையிலேயே தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழில் அரசிதழ் என அழைக்கப்படுகிறது. அப்படியிருக்க தலைப்பு மாற்ற வேண்டிய அவசியமில்லை. வர்த்தமானியை வழிமாற்றாக வைத்திருக்கலாம். வர்த்தமானி தமிழடியில் இருந்து வந்ததாக நான் நினைக்கவில்லை.--Kanags \உரையாடுக 07:56, 26 ஏப்ரல் 2016 (UTC)

நான் கேட்ட கேள்வி வேறு, நீங்கள் சொல்லும் பதில் வேறு. கேள்விக்கும் பதிலுக்கும் தொடர்பில்லை. தமிழகத்தில் உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறதா என்றுதான் கேட்டேன். தமிழகத்தில் பல்வேறு சொற்களால் அழைக்கப்படுகின்றமை கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப் பற்றிக் கேட்கவில்லை.--பாஹிம் (பேச்சு) 08:01, 26 ஏப்ரல் 2016 (UTC)

நீங்கள் அதிகாரபூர்வப் பெயர் கேட்கிறீர்கள். வர்த்தமானி இலங்கையில் மட்டும் தான் அதிகாரபூர்வ பெயர். இந்தியாவில் தமிழில் அதிகாரபூர்வ பெயர் இல்லாமலிருக்கலாம். ஏனெனில் அங்கு அனைத்து மொழிகளிலும் கசெட் வெளிவருகிறதா என நான் அறியேன். அறிந்தவர்கள் கூறலாம். ஏனைய நாடுகளில் அந்தந்த மொழிகளில் இருக்கும். பொதுவாக அரசிதழ் என்பது பொது தமிழ் வழக்கு என்பதால் அவ்வாறே தலைப்பிடுதல் சிறந்தது. நீங்கள் குறிப்பிடும் பெயர் வைக்க வேண்டுமானால் புதிய கட்டுரை ஒன்றை இலங்கைக்கு மட்டும் அத்தலைப்பில் எழுதலாம் எனப் பிரேரிக்கிறேன். ஏனெனில் இலங்கை வர்த்தமானி பற்றி எழுத நிறைய விடயங்கள் இருக்கும்.--Kanags \உரையாடுக 08:11, 26 ஏப்ரல் 2016 (UTC)
பார்க்க அரசிதழ்- http://www.tn.gov.in/ta/documents/category/16 --நந்தகுமார் (பேச்சு) 10:07, 26 ஏப்ரல் 2016 (UTC)

இந்தியாவில் வெளிவரும் Gazette தமிழில் அரசிதழ் என்ற பெயரில் வெளியிடப்படுவதில்லை. மேலே நந்தகுமார் சுட்டிக்காட்டியது உத்தியோகபூர்வப் பெயருக்கான ஆதாரமல்ல. இந்திய அரசாங்கத்தின் மற்றொரு வலைத்தளத்தில் கெஜட் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதையும் உத்தியோகபூர்வப் பெயரென்று கூறிவிடக் கூடாது. அது தமிழுமன்று. இந்திய அரசாங்க வர்த்தமானியின் தமிழ்ப் பதிப்பொன்றைக் காட்டுங்கள். அதில் அரசிதழ் என்ற சொல்லிருந்தால் ஏற்றுக் கொள்கிறேன். நிற்க, சிங்கப்பூரிலும் கூட இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் வர்த்தமானி என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். அது இலங்கைக்கு மட்டுமான சொல்லன்று.--பாஹிம் (பேச்சு) 11:13, 26 ஏப்ரல் 2016 (UTC)

Government Gazette என்பது ஒரு பொதுக் கட்டுரை என்பதை மனதில் கொள்ளுங்கள். எந்தக் குறிப்பிட்ட நாட்டுக்குமான அதிகாரபூர்வமான Gazette க்கான கட்டுரை அல்ல. எனவே தமிழில் ஒரு பொதுப் பெயர் வைப்பதில் தவறில்லை. தமிழக அரசுப் பக்கத்தில் Gazette என்பதற்கு அரசிதழ் என்ற பொதுப் பெயரே தரப்பட்டுள்ளது. ஆனால் அது வெளியிடும் பத்திரிகை ஆங்கிலத்திலேயே உள்ளது. தமிழில் வெளியிடப்படுவதில்லை. வர்த்தமானி என்ற பெயர் தமிழ்ச் சொல் என்பதற்கான விளக்கம் அல்லது ஆதாரம் உங்களிடம் இருந்தால் தாருங்கள்.--Kanags \உரையாடுக 11:27, 26 ஏப்ரல் 2016 (UTC)

அது தமிழ்ச் சொல்லல்ல என்று எப்படிக் கூறுகிறீர்கள்? தமிழில் பயன்படுத்தும் சொற்களைத் தமிழல்ல என்று கூறுவதற்குத் தக்க காரணமிருந்தாலே தவிர அவையனைத்தும் தமிழ்ச் சொற்களே.--பாஹிம் (பேச்சு) 11:35, 26 ஏப்ரல் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அரசிதழ்&oldid=2056478" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அரசிதழ்" page.