பேச்சு:அரப்பு

உசிலரப்பு மரம் மற்றும் அரப்புப் பொடியின் புகைப்படம் பதிவேற்றினால் நன்றாக இருக்கும். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 15:53, 20 சனவரி 2011 (UTC)Reply

இந்துக்கள் தமது சித்திரைப் புத்தாண்டில் தலையில் தேய்க்கும் மருத்து நீர் க்கும் அரப்பு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 16:31, 20 சனவரி 2011 (UTC)Reply

உசிலை அரப்பைச் சீயக்காய் உடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. சீயக்காய்த்தூள் பழுப்பு நிறத்தில் இருக்கும். அரப்போ பச்சை நிறத்தில் இருக்கும். சீயக்காய் கண்ணெரிச்சல் உண்டாக்கும். அரப்பு போட்டால் எரியாது. எனவே குழந்தைகளுக்கு அரப்பு பயன்படுத்துவர்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 11:54, 2 நவம்பர் 2012 (UTC)Reply

துரிஞ்சல் மரத்தின் இலைகளின் தூளே அரப்புத்தூள் என எண்ணுகிறேன். புளியமரத்தின் இலைகளை போன்று கூட்டிலை ஆகும். இருப்பினும், தாவரவியல் துறை சார் அறிஞரை கேட்க வேண்டும். 30 வருடங்கள் இதனை எங்கள் குடும்பத்தில் பயன்படுத்தினோம். தெருவில் ஞாயிறு தோறும் விற்று வருவர். தற்போது தமிழக சூழலில் அம்மரங்கள் குறைந்துவிட்டன போலும். வருவதில்லை. அதற்கு மாற்றாக கடைகளில் வேதிப்பொருட்களைக் கொண்டு செயற்கையாக 'ஷாம்பு' வந்துவிட்டது! ஆனால் நான், 20 வருடங்களாக, ஓமியோபதி கடைகளில் கிடைக்கும் ஆர்னிகா (ARNICA shampoo) பயன்படுத்துகிறேன்.--உழவன் (உரை) 03:54, 17 ஏப்ரல் 2021 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அரப்பு&oldid=3133614" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அரப்பு" page.