பேச்சு:அரிவாள்மணை
அரிவாள்மணையா அல்லது அரிவாள்மனையா?. நான் இதுநாள் வரை அரிவாள்மனை என்றே நினைத்திருந்தேன். --சிவக்குமார் \பேச்சு 18:34, 19 ஜனவரி 2010 (UTC)
- அரிவாள்மனையே சரியான சொல்லாக நானும் உணர்கிறேன். பொதுவாக மனை என்று அமரும் பலகையைக் குறிப்பதுண்டு.அரிவாளுடன் அமைந்த மனை என்று அரிவாள்மனை சொல் எழுந்ததாக கருதுகிறேன்.--மணியன் 04:50, 20 ஜனவரி 2010 (UTC)தமிழ் இணையப் பல்கழக தமிழ்-தமிழ் அகரமுதலியில் அரிவாள்மணை என்றே குறிக்கப்பட்டுள்ளது.--மணியன் 04:54, 20 ஜனவரி 2010 (UTC)
அரிவாள்மணை என்பது சரிதான். "மணை" என்பது இருப்பதற்கான பலகையைக் குறிக்கும். தமிழ் லெக்சிக்கனில் "மணை" என்பதற்குத் தரப்பட்டுள்ள பொருளைக் கீழே பார்க்கவும்.
- மணை¹ maṇai
- , n. perh. மண்ணு-. [K. maṇe.] 1. Low, wooden seat; ஆசனப்பலகை. நூலே கரக முக்கோல் மணையே (தொல். பொ. 626). 2. Low, earthen dais; மணமேடை
மயூரநாதன் 15:07, 20 ஜனவரி 2010 (UTC)
அனைவரது விளக்கங்களுக்கும் நன்றி. --சிவக்குமார் \பேச்சு 18:42, 26 பெப்ரவரி 2010 (UTC)
Start a discussion about அரிவாள்மணை
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve அரிவாள்மணை.