பேச்சு:அறியவியலாமைக் கொள்கை

Agnosticism என்பதை அறியவியலாமைக் கொள்கை என்று பெயர்ப்பதே சரியானது எனக் கருதுகிறேன். காண்க: Agnosticism

அறியாமை என்றால் ignorance என்றாகிவிடக் கூடும். காண்க: Ignorance

ஆம் ஒப்புகிறேன். “அறியவியலாமை” என்பதே “அறியாமை”யைக் காட்டிலும் பொருத்தமாக இருக்கும்--சோடாபாட்டில் 05:38, 11 அக்டோபர் 2010 (UTC)Reply
உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். அறியமுடியாமைக் கொள்கை எனலாமா? --Natkeeran 18:27, 11 அக்டோபர் 2010 (UTC)Reply
  • இயலுதல் என்னும் சொல் to be able (அதாவது, இயல்பாகவே அடையக்கூடிய) என்னும் பொருளைத் தருகிறது. முடிதல் என்பது (I can, we can போல) நாம் முயன்றால் அடைந்துவிடலாம் என்னும் பொருள்தரும். எனவே, மனித அறிவு தன் இயல்பிலேயே புலன்கடந்த பேருண்மைகளை (கடவுள் நம்பிக்கை, ஆன்மா, மறு உலகு பற்றிய நம்பிக்கை) அடையும் திறம் கொண்டதல்ல என்னும் முற்கோள் agnosticism-க்கு இருப்பதால் அறியவியலாமைக் கொள்கை என்பது சிறப்பு எனக் கருதுகிறேன். --பவுல்-Paul 19:44, 11 அக்டோபர் 2010 (UTC)Reply

முகன்மையான தலைப்பு தொகு

இறையியலிலும் மெய்யியலிலும் முகன்மையான தலைப்பு இது. நன்கு விரிவாக்க வேண்டும். கியோடலின் முற்றுப்பெறாமைத் தேற்றத்தையும் குறிப்பிடலாமோ? -- சுந்தர் \பேச்சு 04:23, 16 அக்டோபர் 2010 (UTC)Reply

Return to "அறியவியலாமைக் கொள்கை" page.