பேச்சு:அல்போன்சு டி லாமார்ட்டின்
பிரெஞ்சு - பிரான்சிய - எது நல்லது?
தொகுபிரான்சு நாட்டில் பேசும் மொழியை அவர்கள் 'விரான்சே (français, [fʁɑ̃sɛ]) என்பதுபோல குறிப்பிடுகிறார்கள். பிரான்சிய மொழி என்றால் இயல்பாகவும், மூல மொழியை ஒத்தும் உள்ளது. பிரெஞ்சு என்று எழுதுவதை pirenju என்று ஒலிக்க வேண்டும். பிரெஞ்ச்சு என்றால் pirenchu என்று ஒலிக்க வேண்டும். பிரெஞ்ச் என்றால் pirench என்று ஒலிக்க வேண்டும். பிரான்சு, பிரான்சிய மொழி, பிரான்சிய அறிஞர், பிரான்சிய அரசியலாளர் என்பன பொருத்தமாக இருப்பதாக நினைக்கின்றேன். பிரான்சு என்றோ பிரான்ஸ் என்றோ எழுதிவிட்டு பின்னர் அந்நாட்டு மக்களையோ, மொழியையோ பிரெஞ்ச் என்று கூறுவது ஒரு சிறிதும் பொருத்தம் இல்லாமல், ஆனால் ஆங்கிலத்தைப் பின்பற்றுவதாக இருக்கின்றது. டாய்ட்சு மொழியினர் பிரான்சிய மொழியை Französische Sprache என்றும், எசுப்பானிய மொழியர் idioma francés (en francés: le français, la langue française) என்றும் கூறுகின்றார்கள். பிரெஞ்ச்சு, பிரெஞ்சு என்று கூறுவது பொருத்தமாகத் தெரியவில்லை. பிரான்சிய மக்களை டாய்ட்சு மொழியர் Franzosen என்று கூறுகின்றனர். இவை யாவும் பிரான்சிய என்பதற்கு நெருக்கமான ஒலிப்பாக உள்ளது. --செல்வா 20:58, 15 டிசம்பர் 2008 (UTC)