பேச்சு:அ. தாமோதரன்
நன்றியுரை குறிப்பு
தொகுபேராசிரியர்கள் தாமசு இலேமன் (Thomas Lehmann) அவர்களும் பா. ரா. சுப்பிரமணியன் அவர்களும் முனைவர் தாமோதரன் அவர்கள் இறந்த இறப்புச்செய்தி வரைவை பாரிசில் இருக்கும் முனைவர் இழான்-லுக்கு செவியர் (Jean-Luc Chevillard) அவர்களுக்கு எழுதிய மடலை, முனைவர் இழாலன்-லுக்கு செவியர், வல்லமை மடலாடற்குழுவிலும் தமிழ் மன்றக் குழுவிலும் இட்டப் பதிவின் அடிப்படியில் இக்கட்டுரையை எழுதினேன். இவர்கள் அனைவருக்கும், யான் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.--செல்வா (பேச்சு) 22:54, 30 சூன் 2019 (UTC)
தலைப்பு மாற்றம்
தொகுஇக்கட்டுரை வளர்ந்து இருப்பது கண்டு மிகவும் மகிழ்கிறேன். செல்வாவின் பதிவுகளைக் காணும் போது, அம்மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. அறிஞர் நா. கணேசன் அவர்களிடம் மின்னஞ்சல் வழியே சில தகவல்களைக் கேட்டிருந்தேன். அவர் அனுப்பிய செய்திகளை இங்கு தருகிறேன். மேலும், அவர் பிரான்சில் இருந்து, தாமோதரன் குறித்து, அவர்களிடையே இருந்த நட்பு குறித்து, எனது அலைப்பேசிக்கு பேசினார். நெகிழ்வான உரையாடல் அது. அவர் அளித்த இச்செய்திகளின் நோக்கம், கட்டுரையின் தலைப்பு மாற்றப்படுவது குறித்தே ஆகும்.
- அய்யாத்துரை என்பது அவரது தந்தை பெயர்.
- அவர் எழுதிய நூல்களில் அ. தாமோதரன் என்றே பதிப்பித்தார்.
- செருமனியில் இருந்த வந்த தமிழ் நூல்-சான்று-1,
- சான்று-2,
- சான்று-3 மேற்கு ஜெர்மனியில் தமிழ் - அ. தாமோதரன் - ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு விழா மலர் 1981
- சான்று-4,
- சான்று-5
- சான்று-6இந்து நாளிதழிலும் அ. தாமோதரன்
எனவே, தலைப்பை அ. தாமோதரன் என அமைக்கக் கோருகிறேன். @Kanags and செல்வா:--த♥உழவன் (உரை) 03:10, 4 சூலை 2019 (UTC)
- "அ. தாமோதரன்" என்றே தலைப்பை மாற்றலாம்.--Kanags \உரையாடுக 08:26, 4 சூலை 2019 (UTC)
- ஆம் அ. தாமோதரன் என்றுதான் தலைப்பு இருக்கவேண்டும். திருத்ததிற்கு நன்றி. --செல்வா (பேச்சு) 13:43, 7 சூலை 2019 (UTC)