பேச்சு:ஆடாதோடை

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

ஆடாதோடையின் வெண்ணிறப் பூக்கள் ஏழாண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்கும் என ஊர்ப் பகுதியிற் கூறப்படுகிறது. இது பற்றி எவரும் உறுதியாகத் தெரிந்தாற் கட்டுரையிற் குறிப்பிடுவது நலம்.--பாஹிம் (பேச்சு) 04:27, 22 மே 2012 (UTC)Reply

  • இத்தாவரத்தை ஆடுகள் உண்ணாது என்பது செவிவழிச் செய்தி. இது எந்த அளவிற்கு உண்மையெனத் தெரியவில்லை. எவரேனும் தெரிந்தவர்கள் கருத்தளித்தால் நல்லது.--Booradleyp (பேச்சு) 18:32, 7 சூலை 2012 (UTC)Reply
இது ஆடாதொடை என்று எழுதப்படுவதுண்டா ??--Natkeeran (பேச்சு) 00:45, 27 சூன் 2013 (UTC)Reply
இல்லை. ஆடாதோடை என்பதே சரியானது.--பாஹிம் (பேச்சு) 04:17, 27 சூன் 2013 (UTC)Reply

இது ஆடு உண்ணாத இலை ஆகவே ஆடுதொடா இலை எனப்பட்டது. அறிவியல் பெயரும் தமிழ்வழி வந்த பெயரே. இதனைப் பின்னர் உறுதி செய்கின்றேன். ஆனால் ஆடுதொடா இலை என்பதே ஆடாதொடா என்றும் ஆடாதோடை என்றும் அழைக்கப்படுறது என்பது உண்மை. இது இருமல் சளிக்கு கசாசயப் பொருளாக நெடுங்காலம் விளங்குகின்றது. நானும் உண்டு பயன் பெற்றிருக்கின்றேன். நற்கீரன், ஆம் இந்த இலை ஆடாதொடை என்றும் அழைக்கப்பெறும் (ஆடாதொடா, ஆடாதோடா, ஆடாதோடை ஆகியவையும் உண்டு); ஆடாதோடை என்பது எழுத்துவழக்கில் பல இடங்களில் ஆளப்பெற்றுள்ளது.. --செல்வா (பேச்சு) 04:21, 27 சூன் 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆடாதோடை&oldid=1446261" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆடாதோடை" page.