பேச்சு:ஆண் தமிழ்ப் பெயர்கள்
1. இதனை அகர வரிசைப்படி அட்டவணையாக தொகுத்தல் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகின்றேன்.
2. தமிழில் பெயர்கள் அநேகமாக மூலப்பெயர்கள் இணைவுப்பெயர்கள் என வகைப்படுத்தி தொகுத்தல் நலம் எனக் கருதுகின்றேன்.
எடுத்துக்காட்டு:
- தமிழ் + மாறன்
- தமிழ் + குமரன்
- தமிழ் + அழகன்
- தமிழ் + நெஞ்சன்
- தமிழ் + இனியன்
- தமிழ் + இனியவன்
- தமிழ் + நேசன்
- தமிழ் + கேசவன்
- தமிழ் + கேசவ + ராயன்
மேலுள்ள இணைவுப்பெயர்களை கீழுள்ள மூலப்பெயருடன் இணைத்து தமது குழந்தைகளுக்கானப் பெயர்களை தெரிவுசெய்வதற்கு எளிதானதாக அட்டவணைப் படுத்தினால் சிறப்பாக இருக்கும்.
- கலை +
- கலை + யரசன், எப்படி அட்டவணையிடலாம்? --HK Arun
சில பெயர்கள் தமிழ் அல்ல என்று நினைக்கிறேன் --குறும்பன் 23:09, 29 டிசம்பர் 2008 (UTC)
தமிழல்லாத பெயர்கள்
தொகுஇங்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள சில (குறும்பன் சொன்னது போல) தமிழல்லாதவையும் உள்ளன. அவற்றில் சில (என நான் நினைக்கும்):
- உதய என ஆரம்பிக்கும் சொற்கள்
- சுதந்திரன்
- சரித்திர..
- சிவ..
தமிழ்ப் பெயர்கள் தரவுத்தளம்
தொகுதமிழ்ப் பெயர்கள் தரவுத்தளம். பங்களிப்புகளை வரவேற்கிறோம்--ரவி 03:21, 30 டிசம்பர் 2008 (UTC)
மாற்றிவி்ட்டேன். சுட்டியமைக்கு நன்றி கனகேசு. --HK Arun
தமிழல்லாத பெயர்கள்
தொகுதமிழல்லாத பல பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் எனத் தரப்பட்டுள்ளன.
- வசுசேனன் - மகாபாரதக் கன்னனின் இளம்பருவப்பெயர்
- கமலன், கார்த்திகேயன், கீர்த்தனன், காந்தன், மௌனி - தெளிவாகத் தெரியும் வடமொழிப் பெயர்கள்
- நித்திய, மயூர, அற்புத, ஆனந்த எனத் தொடங்கும் பெயர்கள்
- கேசவன், வர்மன் என முடியும் பெயர்கள்
--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 19:39, 18 சனவரி 2014 (UTC)
சில பெயர்கள்
தொகு- தொள்வாணன் (தொல்வாணன்??)
- தொள்மாவளவன் (தொல்மாவளவன்??)
- விடுதலைவேற்கன் (விடுதலைவேட்கள்??)
இவை எழுத்துப் பிழைகளைக் கொண்டிருக்கின்றன என நினைக்கிறேன். உதவுக. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:16, 27 சூலை 2014 (UTC)