பேச்சு:ஆப்பிரிக்கா

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி உட்பட பல தமிழகராதிகளில் ஆபிரிக்கா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. "ஆப்பிரிக்கா" என்று எந்தத் தமிழகராதியும் குறிப்பிடுவதாகத் தெரியவில்லை. இலங்கையின் பாடநூல்களிலும் ஆபிரிக்கா என்றே உள்ளது. எனவே, இப்பக்கத்தையும் ஆப்பிரிக்கா என்று பிழையாகக் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற இடங்களையும் திருத்தியமைக்க வேண்டுகிறேன்.--பாஹிம் 03:40, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரகராதி ஆப்பிரிக்கா என்று குறிப்பதை இப்பக்கத்தில்] காணலாம் (காப்பிரி என்னும் சொல்லுக்கு < U. kāfir. Kaffir, Negro of South Africa; ஆப்பிரிக்கா கண்டத்து நீகிரோ சாதி. என்று தந்திருக்கின்றார்கள்). ஆனால் ஆபிரிக்கா என வேறு இரண்டு இடத்தில் குறித்துள்ளனர் (இப்பக்கட்ட்தைப் பார்க்கவும்).
  • மனோரமா இயர்புக் 2010 இல் பக்கம் 530 இல் ஆப்பிரிக்க நாடுகள் என்று பகர ஒற்று சேர்த்தி எழுதியுள்ளார்கள். தமிழ்நாடு அரசின் பாட நூலில் பதினோராம் வகுப்புப் புவியியல் பாடத்தில் பக்கம் 52 இல் ஆப்பிரிக்கா என்று பகர ஒற்றுடன் தந்துள்ளார்கள் (பிறபல இடங்களிலும் இருக்க வேண்டும். நான் பார்த்த பக்கங்களை மட்டும் தருகின்றேன் பார்க்கவும்).
  • ஆகவே தமிழ்நாட்டில் ஆப்பிரிக்கா என்று குறிப்பது வழக்கம். ஆப்பிரிக்கா என்றால் aapirikaa என்றும் ஆபிரிக்கா என்றால் aabirikaa என்றும் ஒலிக்க வேண்டும். இதில் எதுவும் பிழை இல்லை, ஆனால் ஒலிப்பது எப்படி என்பதைப் பொருத்தே எழுத்துக்கூட்டல் அமைய வேண்டும். aabirikaa என்று ஒலிப்பதாயின் நீங்கள் சொல்வதுபோல எழுதலாம். ஆனால் aapirikaa என்று ஒலிப்பதாயின் தமிழ்நாட்டில் வழங்குவது போல வழங்கலாம். கூகுள் தேடல் எது சரி என்பதை நிறுவப் பயன்படாது எனினும், தேடல் முடிவுகளை, ஒரு ஒப்ப்பீட்டுக்காகத் தருகின்றேன்:. ஆப்பிரிக்கா (399,000), ஆபிரிக்கா (31,200).

--செல்வா 04:52, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply

aabirikka என்றல்ல aafirikka என்றுதான் வாசிக்க வேண்டும். ஆபிரிக்கா aafirikka என்றுதான் இலங்கையில் அனைத்துத் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளிலும் கற்பிக்கிறார்கள். இது கபிலர் என்பதை kafilar என்றும் சிபி என்பதை sifi என்றும் வாசிப்பது போன்றாகும்.--பாஹிம் 05:19, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply

aafrikka(a) என்று தமிழில் ஒலிக்க முடியாது. ஆஃபிரிக்கா என்று எழுதினால் அப்படி ஒலிக்கலாம் என்பது ஒரு அண்மைக்காலத்துப் பரிந்துரை, ஓரளவுக்கு அரையும் குறையுமாக வழக்கத்திலும் உள்ளது.ஆனால் தமிழில் அப்படியான ஒலிப்புக்கு இடம் இல்லை. ஆஃவிரிக்கா, ஆஃவ்ரிக்கா, ஆஃப்ரிக்கா, ஆவ்'ரிக்கா, ஆவி'ரிக்கா என்று பல முறையாக எழுதி ஒலிப்பைப் புது முறையாக சுட்டலாம். நீங்கள் கூறுவது போல கபிலர் என்பது kafilar அல்ல. அது kabilar. அதே போல சிபி என்பது sibi. sifi அல்ல. தமிழில் ஒலிப்பு முறை தெளிவானது. ஆபிரிக்கா என்றால் அது aabirikaa என்றுதான் ஒலிக்க வேண்டும். உங்கள் கூற்றுகள் எனக்கு வியப்பளிக்கின்றன.--செல்வா 05:43, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply

ஆப்பிரிக்கா என்பதே தமிழக பொது வழக்கு. பிழையல்ல. ஆபிரிகா இலங்கை வழக்காக இருப்பின் ஒரு வழிமாற்று ஏற்படுத்திவிட்டு அடைப்புகளில் தந்து விடலாம். த. விக்கியில் இரு வழக்குகளில் வித்தியாசம் ஏற்படின் முதலில் எழுதப்பட்ட தலைப்பை மையக் கட்டுரையாக வைத்துக் கொண்டு பின் சேர்க்கப்படும் வழக்கை வழிமாற்றாக வைப்பது வழக்கமாக இருக்கிறது. --சோடாபாட்டில் 05:49, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply

சோடாபாட்டில் கூறுவது ஏற்றுக்கொள்ளத் தக்கது. மேலும், இலங்கையில் யாரும் கபிலர் என்பதை kabilar என்று கூறுவதில்லை. மாறாக kafilar என்றுதான் கூறுகிறார்கள். சிபி என்பதை sify என்றுதான் கூறுகிறார்கள். தமிழில் இந்த ஒலிப்பு முறை உள்ளது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இலங்கை அரசாங்கமும் இதைத்தான் ஏற்றுக்கொள்கிறது. தேவையெனில் இதனை இலங்கை அரச கரும மொழிகள் திணைக்களத்தின் மூலம் உறுதிப்படுத்தலாம்.--பாஹிம் 06:06, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply

பாகிம், இது என்ன புதுக்கதை சொல்கிறீர்கள்? தமிழ் இலங்கையில் அவ்வளவு தரங்குறைந்ததாக மாறி விட்டதா என்ன? நீங்கள் எந்தக் காலத்தில் எந்த இடத்தில் தமிழ் படித்தீர்கள்? நானும் கொழும்பில் தான் தமிழ் மூலத்தில் கல்வி கற்றேன். எனக்குத் தெரிந்த வரையில் யாரும் கபிலரை கஃபிலர் எனக் கூறுவதில்லை. சிபியை சிஃபி எனக் கூறுவதில்லை. ஆச்சரியமாக உள்ளது. ஆபிரிக்கா எனத் தமிழில் இலங்கையில் எழுதிப் படித்தவர்கள் பலர் இன்னும் அதனை abirikkaa எனக்கூறுவதைப் பார்த்திருக்கிறேன். ஆப்பிரிக்கா கூடுதலாகப் பொருந்துகிறது என எனக்குப் படுகிறது.--Kanags \உரையாடுக 06:12, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply

இது ஒன்றும் புதுக் கதையல்ல. மேலும், இந்த ஒலிப்பு முறை நான் புதிதாகக் கண்டுபிடித்துக் கூறுவதன்று. இலங்கையில் பல்கலைக்கழகங்களிலும் அனைத்துப் பாடசாலைகளிலும் நான் இங்கு குறிப்பிடுவதுபோன்றுதான் கற்பிக்கிறார்கள். என்னுடன் றோயல் கல்லூரியில் படித்த தமிழ் நண்பர்கள் அனைவரும் அங்கு கற்பித்த ஆசிரியர்களும் இப்படித்தான் வாசிப்பார்கள். மேலும், இலங்கையின் செய்தி வாசிப்பு நிறுவனங்கள் எதுவும் ஆப்பிரிக்கா என்று எக்காலத்திலும் வாசித்ததாக அறியேன். இலங்கையில் எந்தச் செய்தி நிறுவனமும் நீங்கள் கூறுவதுபோல் aabirikka என்று கூறுவதில்லை. உங்களுக்குச் சந்தேகமிருந்தால் இதனையெல்லாம் இலங்கையிலுள்ள மூத்த தமிழறிஞர்களிடம் அல்லது பல்கலைக்கழகங்கள் போன்ற பொறுப்புள்ள நிறுவனங்களிடம் கேட்டுப் பாருங்கள். உங்களுக்குத் தெரியவில்லை என்பதற்காக, நான் புதிதாகத் தமிழில் ஒலிப்பு முறையொன்றைக் கண்டுபிடித்தது போன்று குற்றம் சாட்டாதீர். நான் இன்னும் இரண்டு நாட்களில் இலங்கைக்குச் செல்லத்தான் எண்ணியிருக்கிறேன். அப்போது இது குறித்து உங்களுக்கு வேண்டிய ஆதாரங்களைத் திரட்டித் தர முடியும்.--பாஹிம் 07:49, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply

வணக்கம் பாகிம், புதுக்கதை என்று நான் கூற வந்தது கஃபிலன், சிஃபியைத் தானே ஒழிய ஆபிரிக்காவை அல்ல. நானும் ஆபிரிக்கா என்றே எழுதிப் படித்தேன். ஆனால் சிலர் அதனை aabirikkaa என்றே சொல்லியும் வருகிறார்கள். அதில் ஒரு பிழையும் இல்லை. ஆப்பிரிக்கா என்று சொல்வதில் தவறில்லை என்றால் ஆபிரிக்கா என்று சொல்வதிலும் தவறில்லை அல்லவா? ஆனால் நீங்கள் புகழ் பெற்ற ஒரு புலவரை அல்லது மன்னனை இப்படித் தவறாகக் கூறி வருகிறீர்கள் மட்டுமல்லாமல் இலங்கைப் பாடசாலைகளில் இப்படித்தான் சொல்லித் தருகின்றார்கள் என்று கூடச் சொல்கிறீர்கள். அது எப்படி என்று தான் எனக்குப் புரியவில்லை. தயவு செய்து நீங்கள் இலங்கை செல்லும் போது இது குறித்து அறிந்து வந்து சொல்லுங்கள். அறிய மிகவும் ஆவலாக உள்ளேன்.--Kanags \உரையாடுக 09:16, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply
தமிழ்நாட்டில் தமில், வால்க, மள என்று அறியாது சொல்வோரும் உள்ளனர். ஒலிப்பதிவு, நிகழ்படப்பதிவு செய்தும் காட்ட முடியும், அதனால் அது சரியாகாது. தமிழ், வாழ்க, மழை என்பன சரியானவை என்பதைக் கூறித்தான் தெளிவாக்க வேண்டுமா?! தமிழில் காற்றொலி வகரம் (f) கிடையாது. இலங்கையிலுள்ள மூத்த தமிழறிஞர்களிடம் அல்லது பல்கலைக்கழகங்கள் போன்ற பொறுப்புள்ள நிறுவனங்களிடம் கேட்டுப் பாருங்கள் என்று நீங்கள் கூறுவது எதனால் என்று புரியவில்லை. எந்தத் தமிழறிஞரும் இப்படிக்கூறமாட்டார்கள். இந்த அளவுக்குக்கூட தமிழறியாதவர்கள் அல்லர் இங்கிருப்பவர்கள். எப்படிவேண்டுமானாலும் எழுதலாம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், எல்லாமே சரி, தவறென்று எதுமே கிடையாது, போன்ற ஒருசில மொழியியல் கருத்தாக்கங்களையும் அறிவேன் (இங்கெல்லாம் நாம் போக வேண்டாம் என்பது என் கருத்து. நேரம் வீணாகும். போகத்தான் வேண்டும் எனில் கூடிய அளவு கருத்தாட அணியமாக உள்ளேன். விக்கிப்பீடியா அதற்கான களம் இல்லை. இதனை நினைவில் கொள்வோம்). --செல்வா 17:47, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply

ஆபிரிக்கா என்று எழுதிவிட்டு aabirika என்று வாசிப்பது ஏன் பிழை என்பதற்கான ஆதாரக் குறிப்பு பேச்சு:ஜப்பான் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. தமிழில் சொல்லின் நடுவில் b ஓசை வர வேண்டிய வேற்றுமொழிச் சொற்கள் வகரமாகவே தமிழ்ப்படுத்தப்படும் வழக்கம் பண்டு தொட்டு இருந்து வருகிறது.--பாஹிம் (பேச்சு) 14:38, 1 அக்டோபர் 2015 (UTC)Reply

[[பகுப்பு:எழுத்துப்பெயர்ப்பு பற்றிய உரையாடல்கள்]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆப்பிரிக்கா&oldid=3118472" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆப்பிரிக்கா" page.