பேச்சு:இடதுசாரி அரசியல்
இடதுசாரி அரசியல் அடிப்படையான சமூகமாற்றத்தை வலியுறுத்தும், அரசியல்வாதிகளின் ஏமாற்று முழக்கங்கள், தந்திரங்கள் ஆகியவற்றை சாதாரண மக்களும் புரிந்து கொள்ள பாடுபடும்--ஸ்ரீதர் (பேச்சு) 00:22, 17 திசம்பர் 2013 (UTC)
"வர்க்கங்களற்றதும், அரசற்றதுமான, பின் முதலாளித்துவச் சமூகம் ஒன்றை உருவாக்கும் என அவர்கள் எதிர்வு கூறினர்" என்ற கூற்றில் அரசற்றதுமான என்பதைச் சுட்டும் மேற்கோளை குறிப்பாகச் சுட்ட முடியுமா? --Natkeeran (பேச்சு) 06:00, 18 திசம்பர் 2013 (UTC)
- வர்க்கங்களற்ற சமூகம் என்பது மட்டும்தான் அவர்கள் கூறியது.. மற்றதை நீக்கியாகிவிட்டது.... --Suthir
"Communism (from Latin communis – common, universal) is a socialist movement to create a classless, moneyless,[1][2] and stateless social order structured upon common ownership of the means of production, as well as a social, political and economic ideology that aims at the establishment of this social order." என்றே கூறப்படுகிறது. எனவே நீக்கத் தேவை இல்லை. பொருத்தமான மேற்கோளைச் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 04:02, 19 திசம்பர் 2013 (UTC)
- இல்லை, இதனர்த்தம் அரசற்ற என்ற பொருள் இல்லை என நினைக்கிறேன்... பாட்டாளிகளின் கையில் அரசதிகாரம் என்றுதான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அரசற்ற என்பது அரசின்மை (Anarchism) மட்டுமே அப்படி குறிப்பிடப்படுகிறது. --Suthir
- "பாட்டாளிகளின் கையில் அரசதிகாரம்" என்பது ஒரு இடைக்கால ஏற்பாடு என்றே கம்யூனிசம் கருதுவதாகவும், இறுதியாக ஒரு அரசற்ற சமுதாயம் தோன்றும் என்பதே மார்க்சியத்தின் கருத்து என்றும் நீண்ட காலத்துக்கு முன்னர் நான் வாசித்த ஞாபகம் உண்டு. இது குறித்து மேலும் ஆராய்வது நல்லது. ---மயூரநாதன் (பேச்சு) 08:49, 20 திசம்பர் 2013 (UTC)
- நீங்கள் சொல்வது சரிதான்.. ஆனால், கம்யூனிசம் என்கிற இறுதி இலக்கில் தான் அரசற்ற நிலை உருவாகும்.. ஆனால், எடுத்த எடுப்பிலே அரசற்ற என்றால் அது அரசின்மையை (Anarchism) குறிப்பிடுவதாக தெரிகிறது. இடதுசாரி அரசியலில், அதுவும் கம்யூனிசத்தின் இறுதி இலக்கு அரசற்ற நிலை என்று வேண்டுமானால் எழுதலாம்.. --Suthir