பேச்சு:இடலை எண்ணெய்
Olive என்பதன் தமிழ்ப் பெயர் சைத்தூன் என்கிறது விக்சனரி. இன்னும் பல இடங்களிலும் அப்படித்தான் உள்ளது. அப்படியிருக்க, இங்கே ஏன் ஆங்கிலத் தலைப்பு? சைத்தூன் எண்ணெய் என்றல்லவா இக்கட்டுரைத் தலைப்பு இருக்க வேண்டும்?--பாஹிம் (பேச்சு) 18:50, 24 சனவரி 2013 (UTC)
ஆலிவ் - ஒலிவம் - சைத்தூன்: வழிமாற்றலைப் பயன்படுத்தலாம்
தொகுதமிழுக்கு ஆலிவ், ஒலிவம், சைத்தூன் அனைத்துமே புதியவையே. சைத்தூன் பாரசீகம்-அரபி-உருது வழியே தமிழில் வந்ததுபோல, ஆலிவ், ஒலிவம் ஆகியவை இலத்தீன் (கிரேக்க) மொழி அடிப்படையில் தமிழுக்கு வந்தவை. எனவே, இங்கு வழிமாற்றலைப் பயன்படுத்துவதே சிறப்பு என நினைக்கிறேன்.
தமிழகத்தில் சைத்தூன் எண்ணைய் என்று யாரும் கூறுவதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஆலிவ் எண்ணெய், ஒலிவ எண்ணெய் என்னும் சொல்வழக்குகள் உள்ளன. --பவுல்-Paul (பேச்சு) 19:03, 24 சனவரி 2013 (UTC)
- விருப்பம்.--Kanags \உரையாடுக 20:04, 24 சனவரி 2013 (UTC)
அப்படிப் பார்த்தாலும் தமிழ் இலக்கணப்படி வகர மெய்யெழுத்து சொல்லின் இறுதியில் வர முடியாதே?--பாஹிம் (பேச்சு) 13:45, 31 சனவரி 2013 (UTC)
அப்படியெனில் ஆலிவு எனலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:45, 2 பெப்ரவரி 2013 (UTC)
- இது தமிழில் உள்வாங்கிய ஆங்கிலச் சொல்லாகக் கொண்டால், தமிழ் இலக்கணம் போற்ற வேண்டியதில்லை. அதனால் *ஆலிவ்* என்றே சொல்லலாம் (வட எழுத்து ஒரீஇ) --இரா. செல்வராசு (பேச்சு) 00:25, 3 பெப்ரவரி 2013 (UTC)
- இங்கு வட எழுத்து ஏதும் இல்லையே? வ் ஈற்றில் முடியும் ஏகப்பட்ட அயல் சொற்கள் உள்ளன (எ.கா. : இராசீவ், இராகவ்). அதைப் போல இதுவும் இருந்துவிட்டுப் போகட்டும் என விடலாம். ஆனால், உள்வாங்கும் சொற்களுக்குத் தமிழ் இலக்கணம் தேவையில்லை என்பதை ஒரு அணுகுமுறையாக வைப்பது சரியன்று--இரவி (பேச்சு) 08:20, 3 பெப்ரவரி 2013 (UTC)
இங்கே வடவெழுத்து ஓரீஇ விதிமுறைக்கு அமையும் எதுவுமே காணப்படவில்லையே. மேலும், இலக்கணம் வேண்டாமென்றால், வேற்று மொழிச் சொற்கள் விடயத்தில் எங்கேயும் இலக்கணம் போற்ற வேண்டாம். இலக்கணத்தை மதிப்பதாயின், ஓரிடமேனும் விடப்படாமல் எல்லா இடங்களிலும் மதிக்கப்பட வேண்டும். அத்துடன், இங்கே ஏன் ஆலிவ் என்று கூறிக் கொண்டிருக்க வேண்டும்? ஏற்கனவே தமிழிலக்கணத்துக்குச் சிறிதும் பிழைக்காதவாறு சைத்தூன் என்றொரு சொல் இருக்கின்றதல்லவா? அதைப் பயன்படுத்த வேண்டாமா? இலக்கணத்தை வீசியெறிய வேண்டுமா? முன்னரெல்லாம் இலக்கணம் பற்றிப் பேசிய போது ஐம்பதாயிரம் கட்டுரைகளை ஆக்கிவிட்டு இலக்கணத்தைப் பற்றிப் பேசலாமென்று ஒரு சிலர் கூறிக் கொண்டிருந்தனர். ஐம்பதாயிரம் கட்டுரை என்ற இலக்குத் தாண்டிய போதே நான் அதைப் பற்றி ஆலமரத்தடியில் எடுத்துரைத்தும் யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இலக்கணம் வேண்டாமென்றால், அது தேவையில்லையென்று தெளிவாகக் கூறிவிட வேண்டியதுதானே. இலக்கணம் பேசுவோரின் நேரமாவது மிஞ்சும். எனினும் அதன் பின்னர் நற்றமிழ் விக்கிப்பீடியா என்றொன்று இலக்கணம் போற்றி உருவானாலும் புதினப்பட வேண்டியதில்லை.--பாஹிம் (பேச்சு) 16:48, 3 பெப்ரவரி 2013 (UTC)
- மன்னிக்கவும், இலக்கணமே தேவையில்லை என்று நான் சொல்லவில்லை. இயன்றவரை கிரந்தம் தவிர்த்தும், தனித்தமிழ்ச் சொற்களைப் பாவித்தும், பிழையின்றி எழுதவும் வேண்டும் என்பதே என் கட்சியும். வடவெழுத்தை நீக்கிவிட்டு வட சொல்லாக ஏற்றுக் கொள்ளலாம் என்று பொதுவான விதியைத் தான் சுட்டிக் காட்டினேன். இங்கு வடவெழுத்து இல்லை. இது வடசொல்லும் அன்று. ஆங்கிலச் சொல். இதனை ஏற்றுக் கொள்வதானால் *ஆலிவ்* என்று அப்படியே ஏற்றுக் கொள்வதில் தவறேதுமில்லை என்பதை *எனது* கருத்தாக மட்டும் சொல்லி இருக்கிறேன். மற்றபடி, *ஆலிவு* என்று தான் எழுத வேண்டும் என்று பலர் எண்ணினாலும் சரியே. ஆனால், கீழே பவுல் கூறியது போல, *ஆலிவ்* என்பதைத் தமிழ் இலக்கணத்தை மீறிய ஒன்று என எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை (கோர்பசேவ், குருசேவ்). இலக்கணம் தமிழ்ச்சொற்களுக்கு மட்டும் தான், அயற்சொற்களுக்கு அன்று என்று பல இலக்கண நூல்கள் கூறும். --இரா. செல்வராசு (பேச்சு) 04:34, 4 பெப்ரவரி 2013 (UTC)
செல்வராசு, அயன்மொழிச் சொற்களுக்குத் தமிழிலக்கணம் பொருந்தாதென நீங்கள் கூறுவது ஏற்க முடியாதது. ஏற்கனவே வடமொழிச் சொற்களையும் ஏனைய மொழிகளின் சொற்களையும் தமிழ்ப்படுத்துவது எவ்வாறென்றுதான் இலக்கண நூல்கள் கூறுகின்றனவேயன்றி, அவற்றுக்கு இலக்கணமே இல்லையென்றல்ல. இலக்கணத்தை மீறிய சொல்லை இலக்கண மீறல் என்று கூறாமல் வேறெப்படிக் கூற வேண்டும்? அச்சொற்களை வெறுமனே விட்டு விட வேண்டுமெனக் கூறுவதாயின், எல்லா இடங்களிலும் அதே கொள்கையை ஏற்றுக்கொண்டாக வேண்டும். அதனாற்றான் வேற்றுமொழிச் சொற்களுக்கு இலக்கணம் போற்றுவதா அல்லவா என்பதைப் பற்றித் தெளிவான கொள்கை வேண்டும். ஏற்கனவே தமிழில் இல்லாத ஃவ போன்ற பயன்பாடுகள் இங்கு விக்கிப்பீடியாவில் காணப்படுகின்றன. எனவேதான் இதைப் பற்றிய தெளிவான வரையறை வேண்டுமென்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 10:34, 4 பெப்ரவரி 2013 (UTC)
- தமிழ் இலக்கணப்படி வகர மெய்யெழுத்து சொல்லின் இறுதியில் வர முடியாதே என்று எடுத்துக் கொள்வது எவ்வளவு தூரம் சரி எனப் பார்க்கவேண்டும். பார்க்க: தெவ். சில சொற்களில் வகர மெய் ஈற்றில் வரலாம் என்கிறதாம் தொல்காப்பியம். இதைப் பொதுவாக எடுத்துக் கொள்ளலாமா அல்லது அந்தக் குறிப்பிட்ட நான்கு சொற்களுக்கு மட்டும் தான் இவ்விதியா என்பது எனக்குத் தெரியவில்லை --இரா. செல்வராசு (பேச்சு) 02:01, 7 பெப்ரவரி 2013 (UTC)
ஆலிவ், ஜைத்தூன்/சைத்தூன்/சைத்துன், தமிழ் இலக்கணம், த.வி. பற்றி ஒரு கருத்து
தொகுபாஹிம் மேலே எழுப்புகின்ற சிக்கல்கள் குறித்து பல கருத்துகள் இருக்கலாம். என்றாலும் எனது கருத்தை இங்கே பதிவுசெய்ய விழைகின்றேன்.
- "வ்" என்னும் எழுத்தில் முடிகின்ற பெயர்கள் பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு வந்துள்ளன. குறிப்பாக உருசிய மொழிப் பெயர்களை இங்கே கருதலாம். காண்க: குருசேவ், கோர்பச்சோவ் முதலியன. ஆலிவ் என்பதும் பெயர்ச்சொல் தான். அதைத் தமிழில் பயன்படுத்துவது தவறல்ல. அதற்காகத் தமிழ் இலக்கணம் சிதைக்கப்பட்டதாகக் கருத வேண்டாம்.
- ஆலிவ் என்பது "ஒலிவம்", "ஒலிவ" என்னும் வடிவங்களில் பலகாலம் தமிழில் உள்ளது.
- ஜைத்தூன்/சைத்தூன்/சைத்துன் என்னும் சொல்வடிவங்கள் பாரசீகம்/அரபி/உருது வழியே வருகின்றன. இந்தி மொழி விக்கியில் அது ज़ैतून என்று உள்ளது. அதைத் துருக்கி மொழி விக்கி Zeytin என்று தருகிறது. நேப்பாளி விக்கி जैतुन என்கிறது. இந்தோனேசிய விக்கி Zaitun என்று குறிப்பிடுகிறது. இவ்வாறு பல மொழிகள் தத்தம் இயல்புக்கு ஏற்ப சொல்வடிவத்தை மாற்றிக்கொள்கின்றன.
- எனவே, "ஆலிவ் எண்ணெய்" என்று தமிழில் உள்ள கட்டுரைக்கு இரண்டு வழிமாற்றல்கள் கொடுக்கலாம். ஒன்று "ஜைத்தூன்/சைத்தூன்/சைத்துன்" வகை, இன்னொன்று "ஒலிவ" வகை.
- இப்படிச் செய்வதால், தமிழ் விக்கி இலக்கணத்தை மீறியது என்று சொல்வதற்கும் இல்லை, ஏதோ ஒரு மொழியிலிருந்து வரும் சொற்களை மட்டும் ஏற்றுக்கொண்டு, பிற மொழிகளிலிருந்து வரும் சொற்களை ஏற்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கும் இடம் இருக்காது என்பது எனது கருத்து. வணக்கம்!--பவுல்-Paul (பேச்சு) 20:43, 3 பெப்ரவரி 2013 (UTC)
இடலை எண்ணெய்
தொகுOlive oil என்பதற்கான தமிழ்ப்பெயர் இடலை எண்ணெய் என்பதாகும்.[1] எனவே அவ்வாறு நகர்த்தியுள்ளேன். மாற்றுக் கருத்து உடையவர்கள் இங்கு தெரிவிக்கலாம். நன்றி. Varunkumar19 (பேச்சு) 07:54, 3 மார்ச் 2019 (UTC)