பேச்சு:இடைமாற்றுச்சந்தி

இப்படி மாற்றி எழுதலாமா?

ஒரு சாலையில் போகும் வண்டிகளின் போக்கை ஒரு சிறிதும் தடைசெய்யாமல் (|போக்கில் எந்தக் குறுக்கீடும் இன்றி) அச்சாலையைக் கடந்து போக வேறு ஒரு வழி அமைப்பதுதான் மாற்றுச் சந்தி (inter என்னும் சொல் இங்கு மொழி பெயர்க்கத்தேவை இல்லை என்று கருதுகிறேன்). (படம் தருவது அவசியம்).--C.R.Selvakumar 02:22, 29 மே 2006 (UTC)செல்வாReply

முன் இருந்தது (சாலைப் போக்குவரத்துத் துறையில், இடைமாற்றுச்சந்தி என்பது, ஒன்று அல்லது பல சாய்தளச் சாலைகளையும், பல்தளச்சாலை அமைப்பையும் பயன்படுத்தி, ஒரு சாலையில் செல்லும் போக்குவரத்தாவது, அதேதளத்தில் வேறெந்தப் போக்குவரத்துக் குறுக்கீடுமின்றி அமையும் ஒரு சந்தி ஆகும்.)

படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது. பயன்படும் என நினைக்கிறேன். --C.R.Selvakumar 02:31, 29 மே 2006 (UTC)செல்வாReply

செல்வா, என்னுடைய மொழிபெயர்ப்புக் கொஞ்சம் சிக்கலானதாகத்தான் இருக்கிறது. நீங்கள் அதை எளிதாக்கியிருக்கிறீர்கள். inter என்பதை மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். மாற்றுச் சந்தி என்றோ மாறு சந்தி என்றோ மொழிபெயர்க்கலாம். இது தொடர்புடைய ஆங்கிலக் கட்டுரைப் பகுதியைக் கீழே பார்க்கவும்.
In the field of road transport, an interchange is a road junction that utilizes grade separation, and one or more ramps, to permit traffic on at least one road to pass through the junction without crossing any other traffic stream.
இதிலே at least one road என்ற பகுதி ஒரு சாலை மட்டுமன்றிப் பல சாலைகள் தடையின்றிச் செல்லக்கூடிய சந்திகளும் உண்டென்பதைக் விளக்கத் தேவையானது. அத்துடன் grade separation என்ற கருத்துருவும் இங்கே உள்ளடக்கப்படுவது அவசியமானது என்பது எனது கருத்து. என்னுடைய மொழிபெயர்ப்பிலும் இது சரியாக அமையவில்லை. grade separation என்பதற்கு நல்ல தமிழ் ஏதாவது நினைவுக்கு வருகிறதா? Mayooranathan 19:11, 29 மே 2006 (UTC)Reply


Grade separation என்பது இரு (பல்) வேறு தளத்தை அமைத்து சாலை போக்குவரத்துக்களைப் பிரிததல் என்று நினைக்கிறேன். படித்து தெளிந்து உறுதி செய்ய வேண்டும். நான் அதைச் செய்ய வில்லை பின்னர் எழுதுகிறேன். --C.R.Selvakumar 20:18, 29 மே 2006 (UTC) தமிழ் நாட்டிலே, மேம்பாலம் (overpass, flyover) என்பதெல்லாம் இதுதான் என்று நினைக்கிறேன். இது தளத்தைப் பிரிப்பதுதானே. I think it is a simple idea couched in tehnical jargon. When two lanes have to cross, either we intermittantly stop and pass traffic or make non-intersecting road. This involves moving up in another plane ('grade') and coming down on the other side. --C.R.Selvakumar 20:24, 29 மே 2006 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இடைமாற்றுச்சந்தி&oldid=274188" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இடைமாற்றுச்சந்தி" page.