பேச்சு:இந்தியத் தேர்தல் ஆணையம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
- கட்டுரையின் முன்னுரையில் இந்தியத் தேர்தல் ஆணையத்தை விவரிக்கும் முதல் சொற்றொடர் சற்று எளிமையற்றதாக உள்ளது என கருதுகிறேன். constitutional body என்பதற்கான தமிழாக்கம் "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற அமைப்பு" என்பதாகும்.
- இச்சொற்றொடரில் "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால்" என்று வரிகளுக்கும் "நிறுவப்பெற்ற அமைப்பு" என்று வரிகளுக்கும் இடையில் வேறு செய்திகளும் வருவதால் constitutional body என்னும் பொருள் மங்கி விடுவதாக தோன்றுகிறது
- முதலில் ஆங்கில கட்டுரையைத்தான் படித்தேன். அப்பொழுது constitutional body என்றால் என்ன? என்ற கேள்வி எழுந்தது. தமிழ் கட்டுரையை படிக்கலானேன்.பதில் கிடைக்காதலால் Google-இலும் அகரமுதலிகளிலும் தேடினேன். "அரசியல் சாசனத்தால் உருவாக்கப்ட்ட அமைப்பு" என்று விளங்கிக் கொண்டேன் . இவ்விடயத்தை தமிழ் கட்டுரையில் சேர்க்க மறுபடியும் படிக்க நேர்கையில்தான் ஏற்கனவே எழுதபட்டிருப்பது தெரிந்தது
எனவே சொற்றொடர்களை பிரித்து எழுதினால் எளிமையாகவும் பொருள் தெளிவாகவும் விளங்கும் என்று எண்ணுகிறேன்.
பின்வருவதைப் போல:-
இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) ஒரு தன்னாட்சி பெற்ற, பகுதியளவு நீதித்துறை போன்ற, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற அமைப்பாகும்.இதன் பணி மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும்.−முன்நிற்கும் கருத்து Cangaran (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. பிரித்து எழுதிவிட்டேன். இது போன்ற சர்ச்சையற்ற நல்ல மாற்றங்களை நீங்களே செய்துவிடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 09:40, 27 நவம்பர் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இந்தியத்_தேர்தல்_ஆணையம்&oldid=3964920" இலிருந்து மீள்விக்கப்பட்டது