பேச்சு:இந்தியாவின் ஊராட்சி மன்றம்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

பஞ்சாயத் என்பதற்கு தமிழ் அகராதியில் ஊராட்சி மன்றம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜ் என்பதற்கு ஆட்சி, இராச்சியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, தமிழ் நாட்டில் ஊராட்சி மன்றம் என்றே பெயரிடப்பட்டுள்ளது. நிர்வாகம், அரசு என்றுப் பெயரிடவில்லை இவை மாநில அரசின் கட்டுபாட்டில் தான் இயங்குகின்றது. சரியான தமிழ் சொல் இருந்தால் வைக்கவும். நானும் தேடுகின்றேன். தேர்தல்கள் ஊராட்சி மன்றத் தேர்தல்கள் என்றே குறிப்பிடப்படுகின்றன. பஞ்சாயத்து என்ற சொல் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்துவதில்லை.--செல்வம் தமிழ் 03:37, 14 மார்ச் 2009 (UTC)

ஊர்களை ஊராட்சி என்று குறிப்பிடுவதே சரி. பல கட்டுரைகளில் ஊர்களுக்கு "இது ஊராட்சி மன்றம் ஆகும்." என்றவாறு உள்ளது. மன்றம் என்பது அமைப்பு தானே ஒழிய, ஊர் அல்ல. ஆங்கில இணைப்பில் இருந்து தமிழுக்கு மாற்றும்பொழுது இதை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர் போலும். இதே போன்றே சென்சஸ் டவுன் என்பதை கணக்கெடுப்பில் உள்ள ஊர் என்று குறிப்பிடுகின்றனர். எல்லா ஊர்களுமே கணக்கெடுப்பில் உள்ளவை தான். மொழிபெயர்ப்பை சரியாக செய்ய வேண்டும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:21, 30 சூலை 2015 (UTC)Reply
Return to "இந்தியாவின் ஊராட்சி மன்றம்" page.