பேச்சு:இந்தியாவிற்கு ஒரு பாதை (திரைப்படம்)
@Umashankar81: கதைச்சுருக்கும் நிறைவுறாமலும் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள தகவலுக்கு மாறாகவும் உள்ளது. இதனைச் சரி செய்த பின் கட்டுரைப் போட்டியில் கணக்கில் கொள்ளலாம். கட்டுரையில் காணப்படும் பிற எழுத்துப் பிழைகள், நிறுத்தற்குறிப் பிழைகளையும் களைய வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:41, 26 மார்ச் 2018 (UTC)
- @Ravidreams:, வணக்கம். போட்டியின் விதிமுறையான் 9000 பைட்டுகள் அளவை கண்க்கில் கொண்டு கதைச்சுருக்கம் முழுமை படுத்தாமல் இருந்தேன். இப்போது விரிவாக்கி உள்ளேன். ஆனால் தற்போது கட்டுரையில் அளவு இரண்டு மடங்காக அதாவது 18000 பைட்டுகளை தாண்டி விட்டது. ஆகவே இந்தக் கட்டுரைக்கு இரண்டு புள்ளிகள் வழங்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன். முடிந்தவரை பிழைத்திருத்தம் செய்துள்ளேன். 9000 பைட்டுகள் விதிமுறை கடைபிடித்தால் நாம் முழுவதுமாக ஆங்கில கட்டுரையை மொழியாக்கம் செய்ய இயலாது. மேலும் போட்டியாளர்களுக்கு அது சலிப்பைத் தரும். இதை நீங்கள் கருத்தில் கொள்ள விரும்புகிறேன். நன்றி. --உமாசங்கர் (பேச்சு) 06:18, 27 மார்ச் 2018 (UTC)
- @Umashankar81:, ஒரு கட்டுரைக்கு ஒரு புள்ளி மட்டுமே. போட்டிக்குச் சமர்ப்பிக்கும் கட்டுரைகளில் குறைந்தது 9000 பைட்டுகளும் 300 சொற்களும் இருக்க வேண்டும். ஆனால், கட்டுரையின் பயன், முழுமை கருதி பல பயனர்களும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கள் சொந்த ஆர்வத்தின் பேரில் விரிவாக்கியே வருகிறார்கள். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளவாறு முழுக்கட்டுரையையும் அதே அளவு இங்கு எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்லை. ஆனால், துணைத்தலைப்புகள் தம்மளவில் முழுமையாகவோ சுருக்கமாகவோ இருக்க வேண்டும். கதைச் சுருக்கத்தை பாதியில் நிறுத்துவதால் வாசகருக்குப் பயன் இல்லை. எனவே, இத்தகைய சூழல்களில் நீங்கள் குறிப்பிட்ட துணைத்தலைப்பை மட்டுமாவது விரித்து எழுதலாம். நடிகர்கள், தயாரிப்பு போன்ற பிற பகுதிகளை முழுமையாக விடுத்து எழுதினாலும் சரி. --இரவி (பேச்சு) 06:23, 27 மார்ச் 2018 (UTC)
- @Ravidreams:, வணக்கம். என்னால் புறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் போட்டி என்பதால் இங்கு இரண்டு கட்டுரையில் உழைப்பு கொடுக்கபட்டுள்ளது என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். 9000 பைட்டுகளுக்கு 1 புள்ளி என்றால் அதற்கு கூடுதலாக சேர்க்கும் பைட்டுகளுக்கும் புள்ளிகள் கொடுக்கப் பட வேண்டும். உதாரண்ம் மேலும் கூடுதலாக 4500 பைட்டுகள் சேர்த்து மொத்தம் 12500 பைட்டுகள் உள்ள பட்சத்தில் 0.5 (அரை) புள்ளி கொடுங்கள் அல்லது மேலும் 9000 பைட்டுகள் அதாவது இரு மடங்காக 18000 பைட்டுகள் சேர்க்கும் பட்சத்தில் 1 புள்ளி கூடுதலாக அதாவது 2 புள்ளிகள் கொடுக்கலாம். போட்டி என்றால் அது நடுநிலையோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி. --உமாசங்கர் (பேச்சு) 06:34, 27 மார்ச் 2018 (UTC)
- @Umashankar81:, உங்கள் எதிர்பார்ப்பு நியாயமானதே. சில போட்டிகளில் நீளமான கட்டுரைகள் எழுதுவோருக்குத் தனிப்பரிசும் கொடுத்திருக்கிறோம். இந்தப் போட்டியைப் பொருத்தவரை தரத்தை உறுதி செய்யும் பொருட்டு குறைந்தபட்ச அளவைக் குறிப்பிட்டிருக்கிறோம். அதே வேளை, கட்டுரை தகவல் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறோம். அந்த அடிப்படையிலேயே தேவைப்படும் மாற்றத்தைக் குறிப்பிட்டேன். இதே போன்று தேவைப்படும் மாற்றங்களை மற்ற பல பங்களிப்பாளர்களுக்கும் குறித்து வருகிறேன். அந்த வகையிலேயே இதில் நடுநிலை காக்க முடியும் என்று நம்புகிறேன். போட்டிக் கட்டுரையாக இருந்தாலும் சரி வழமையான கட்டுரையாக இருந்தாலும் சரி, வாசகர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கிலேயே நாம் இங்கு செயலாற்றுகிறோம். அனைத்துப் போட்டியாளர்களும் இந்த உணர்வுடன் பங்கேற்பதால் ஒரு சில கட்டுரைகளில் ஒருவர் கூடுதலாக எழுத வேண்டி இருப்பதால் போட்டியில் அவருக்கு மட்டும் பின்னடவு ஏற்படுகிறது என்று எண்ண இயலாது. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். நன்றி. --இரவி (பேச்சு) 11:24, 27 மார்ச் 2018 (UTC)
- @Ravidreams:, வணக்கம். என்னால் புறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் போட்டி என்பதால் இங்கு இரண்டு கட்டுரையில் உழைப்பு கொடுக்கபட்டுள்ளது என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். 9000 பைட்டுகளுக்கு 1 புள்ளி என்றால் அதற்கு கூடுதலாக சேர்க்கும் பைட்டுகளுக்கும் புள்ளிகள் கொடுக்கப் பட வேண்டும். உதாரண்ம் மேலும் கூடுதலாக 4500 பைட்டுகள் சேர்த்து மொத்தம் 12500 பைட்டுகள் உள்ள பட்சத்தில் 0.5 (அரை) புள்ளி கொடுங்கள் அல்லது மேலும் 9000 பைட்டுகள் அதாவது இரு மடங்காக 18000 பைட்டுகள் சேர்க்கும் பட்சத்தில் 1 புள்ளி கூடுதலாக அதாவது 2 புள்ளிகள் கொடுக்கலாம். போட்டி என்றால் அது நடுநிலையோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி. --உமாசங்கர் (பேச்சு) 06:34, 27 மார்ச் 2018 (UTC)
- @Umashankar81:, ஒரு கட்டுரைக்கு ஒரு புள்ளி மட்டுமே. போட்டிக்குச் சமர்ப்பிக்கும் கட்டுரைகளில் குறைந்தது 9000 பைட்டுகளும் 300 சொற்களும் இருக்க வேண்டும். ஆனால், கட்டுரையின் பயன், முழுமை கருதி பல பயனர்களும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கள் சொந்த ஆர்வத்தின் பேரில் விரிவாக்கியே வருகிறார்கள். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளவாறு முழுக்கட்டுரையையும் அதே அளவு இங்கு எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்லை. ஆனால், துணைத்தலைப்புகள் தம்மளவில் முழுமையாகவோ சுருக்கமாகவோ இருக்க வேண்டும். கதைச் சுருக்கத்தை பாதியில் நிறுத்துவதால் வாசகருக்குப் பயன் இல்லை. எனவே, இத்தகைய சூழல்களில் நீங்கள் குறிப்பிட்ட துணைத்தலைப்பை மட்டுமாவது விரித்து எழுதலாம். நடிகர்கள், தயாரிப்பு போன்ற பிற பகுதிகளை முழுமையாக விடுத்து எழுதினாலும் சரி. --இரவி (பேச்சு) 06:23, 27 மார்ச் 2018 (UTC)
- @Ravidreams:, வணக்கம். போட்டியின் விதிமுறையான் 9000 பைட்டுகள் அளவை கண்க்கில் கொண்டு கதைச்சுருக்கம் முழுமை படுத்தாமல் இருந்தேன். இப்போது விரிவாக்கி உள்ளேன். ஆனால் தற்போது கட்டுரையில் அளவு இரண்டு மடங்காக அதாவது 18000 பைட்டுகளை தாண்டி விட்டது. ஆகவே இந்தக் கட்டுரைக்கு இரண்டு புள்ளிகள் வழங்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன். முடிந்தவரை பிழைத்திருத்தம் செய்துள்ளேன். 9000 பைட்டுகள் விதிமுறை கடைபிடித்தால் நாம் முழுவதுமாக ஆங்கில கட்டுரையை மொழியாக்கம் செய்ய இயலாது. மேலும் போட்டியாளர்களுக்கு அது சலிப்பைத் தரும். இதை நீங்கள் கருத்தில் கொள்ள விரும்புகிறேன். நன்றி. --உமாசங்கர் (பேச்சு) 06:18, 27 மார்ச் 2018 (UTC)
Start a discussion about இந்தியாவிற்கு ஒரு பாதை (திரைப்படம்)
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve இந்தியாவிற்கு ஒரு பாதை (திரைப்படம்).