பேச்சு:இந்திய மூக்குக்கொம்பன்

இந்திய மூக்குக்கொம்பன் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்திய மூக்குக்கொம்பன் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
இந்திய மூக்குக்கொம்பன் என்ற இக்கட்டுரை, விக்கித்திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள் என்னும் திட்டத்துள் அடங்கியதாகும்.

இத்திட்டக் கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடையவர், இத்திட்டத்தில் உறுப்பினராகலாம். இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவர், இத்திட்டப் பக்கத்திற்குச் சென்றால், அங்கு நிறைவேற்ற வேண்டியப் பணிகளின், பட்டியலைக் காணலாம்.

நீரிலும் மணிக்கு 40 கிமீ நீந்தவல்லதா? கட்டுரையில் ஓடக்கூடிய விரைவும் நீந்தும் திறனுடன் கூறப்படுவதால் குழப்பமாக உள்ளது. கார்த்திக் இதனைத் திருத்த வேண்டுகிறேன்.--செல்வா 18:07, 16 ஏப்ரல் 2009 (UTC)-

சரி செல்வா:) செஞ்சுடலாம்--கார்த்திக் 18:22, 16 ஏப்ரல் 2009 (UTC)

நல்ல கட்டுரை. இன்னும் ஓரிரு முறை மெய்ப்பார்த்து எழுத்துப்பிழைகளைத் திருத்தி, உரைதிருத்திவிட்டால், முதல் பக்கத்தில் காட்சிப்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 08:32, 18 ஏப்ரல் 2009 (UTC)

இந்தியக் காண்டாமிருகம் என்றுதானே வரவேண்டும்?--Kanags \பேச்சு 21:48, 24 ஏப்ரல் 2009 (UTC)
ஆம் கனகு, நானும் மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். இந்தியக் காண்டாமிருகம் என்றுதான் வரவேண்டும். ஒரேயொரு சிக்கல். காண்டாமிருகம் என்று முதல் எழுத்தை வலித்து ஒலிக்க வேண்டும். ஆனால் வடமொழியாக இருந்தால் வல்லினம் மிகாது. காண்டாமிருகம் என்பதை Gandamirugam என்று கொள்வதானால், வல்லினம் மிகாது. வேற்றுமொழிச் சொற்களால் வரும் சிக்கல்களில் இதுவும் ஒன்று. எனவே இந்தியக் காண்டாமிருகம் என்று கூறுவதே நல்லது. முதல் ககரத்தை வலித்தே ஒலிக்கலாம். ஆகவே க் வந்தாலும் வராவிட்டாலும் அமைதி கூறலாம். --செல்வா 23:15, 24 ஏப்ரல் 2009 (UTC)

Start a discussion about இந்திய மூக்குக்கொம்பன்

Start a discussion
Return to "இந்திய மூக்குக்கொம்பன்" page.