பேச்சு:இந்திய வரலாற்றுக் காலக்கோடு

இந்திய வரலாற்றுக் காலக்கோடு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தேசம் தொகு

இந்தியா 1947 ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு தேசமே. அதற்க்கு முன்னர் இந்தியா ஒரு பரந்த புவியியல் பிரதேசத்தை குறித்ததே அன்றி ஒரு அரசியல் ஒருமைப்பட்ட தேசத்தை குறிக்கவில்லை. பல அரசுகள், பல தரப்பட்ட ஆட்ச்சி முறைகள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள், பல சமயங்கள் என இவ் பிரதேசத்தில் வழங்கின. எனவே, இந்திய வரலாற்றின் காலக் கோடு குறிக்கப்படும் பொழுது இப் பல பிரதேசங்களின் பிரிவுகளில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறிக்கப்பட வேண்டும். ஆனால், பொதுவாக வட இந்திய நிகழ்வுகள் முன்நிலைப்படுத்தப்பட்டும், மற்றய பிரதேச நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டும் இந்திய வரலாற்று கோடுகள் வரையப்படுவது கண்கூடு. இவ் போக்கில் மாற்றம் வேண்டும். மேலும், அரச எழுச்சி வீழ்ச்சி வரலாற்று கோட்டுகள் மாத்ரமின்ற் மக்களின் வாழ்வியல் மாற்றங்களை குறிக்கும் வரலாற்று கோடுகள், சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய கண்டுபிடுப்புகள், சமூக மாற்றங்கள் போன்றவையும் குறிக்கப்படுதல் வேண்டும்.

--Natkeeran 19:06, 31 ஆகஸ்ட் 2005 (UTC)

உங்கள் கருத்துகளுடன் முழுமையாக உடன்படுகிறேன். இந்த ரீதியில் எனக்கு கிடைக்கும் தகவல்களை இந்த கட்டுரையில் சேர்க்க உதவுகிறேன்.--ரவி (பேச்சு) 10:43, 1 செப்டெம்பர் 2005 (UTC)Reply
நற்கீரரின் இந்த கருத்தை ஆங்கில விக்கிபீடியாவில் பல கலந்துரையாடல்களில் ((எ-கா) en:Talk:History of India/Archive1) நான் தெரிவித்துள்ளேன். அதன் விளைவாகவே en:History of India-கட்டுரையில் சோழர், பாண்டியர் போன்ற அரசுகளைப் பற்றி ஓரளவாவது தகவல்கள் இணைக்கப்பட்டன. தமிழ் விக்கிபீடியாவிலாவது வடகிழக்கு, தெற்கு போன்ற பகுதிகளைப் பற்றிய தகவல்கள் தேவையான அளவு தரப்பட வேண்டும். -- Sundar \பேச்சு 06:52, 2 செப்டெம்பர் 2005 (UTC)Reply
Return to "இந்திய வரலாற்றுக் காலக்கோடு" page.