பேச்சு:இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்)

இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்) என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

வழிமாற்றம் முறைப்படி செய்யப்படவில்லை. உரையாடல், திருத்த வரலாறு எடுத்துச் செல்லப்படவில்லை.--Kanags 23:38, 21 ஜூலை 2006 (UTC)

கனகு, அடையாளம் தெரியாத பயனர், பக்கத்தை நகர்த்தும் வசதி குறித்து அறியாமல் இப்படி வெட்டி ஒட்டி விட்டார். தற்பொழுது நீங்கள் விரும்பியபடி பக்க வரலாறு, உரையாடல் ஆகியவற்றை இணைத்துள்ளேன். இது குறித்த ஆங்கில விக்கி உதவிப் பக்கம் இங்கு உள்ளது. --ரவி 09:53, 22 ஜூலை 2006 (UTC)

ரவி, அந்த உதவிப்பக்கத் தகவலுக்கும் நன்றி.--Kanags 10:25, 22 ஜூலை 2006 (UTC)

திரைக்கதை, காட்சிகள்

தொகு

இப்படி வரிக்கு வரி, காட்சிக்கு காட்சி திரைக்கதையை விவரித்து எழுதுவது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரைக்கு பொருத்தமா? கதைச் சுருக்கத்துடன் படத்தை பற்றிய திறனாய்வு, தயாரிப்பு விவரங்கள், நடிகர் பட்டியல், வணிகப் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை தருவது ஓரளவுக்கு ஏற்புடையதாக இருக்கலாம்--ரவி 09:37, 23 ஜூலை 2006 (UTC)

ரவி, தவறு என்னுடையது. மன்னிக்கவும் இத்திரைக்கதையை விக்கிமூலத்திற்கு மாற்றுவதுதான் சரியென நினைக்கின்கின்றேன். இங்கே பொதுவான விடயங்களை விவாதித்து விட்டு இணைப்பொன்றை விக்கி மூலத்திற்கும் அங்கிருந்து இணைப்பொன்றை இங்கேயும் வழங்ககுவதுதான் சரியென நினைக்கின்றேன். --Umapathy 13:33, 23 ஜூலை 2006 (UTC)

மன்னிக்கவும், உமாபதி. ஆனால், விக்கிமூலத்திற்கு கூட தற்போதைய கட்டுரை உள்ளடக்கம் பொருத்தமானதாகத் தோன்றவில்லை. இத்திரைப்படத்தின் திரைக்கதை வடிவத்தை படத்தயாரிப்பு நிறுவனம், காப்புரிமை நீக்கி பதிப்பித்தால் அதை மாற்றங்கள் ஏதுமின்றி விக்கி மூலத்தில் சேர்ப்பது சரியாக இருக்கலாம. தவிர, தமிழ் விக்கி மூலம் இன்னும் தொடங்கப்படவில்லை--ரவி 16:35, 23 ஜூலை 2006 (UTC)

ரவி விக்கிமூலம், விக்கிசெய்திகளை ஆரம்பிப்பதற்கு இதுதான் சரியான தருணம் என்று எண்ணுகின்றேன். http://wikisource.org/wiki/Wikisource:Language_domain_requests#Domain_requests_.28ta.wikisource.org.29 பக்கத்தில் விக்கிமூலத்தை ஆரம்பிக்க ஆதரவாக வாக்களித்துள்ளேன். நீங்களும் சிறீதரனும் ஆதரவாக வாக்களிதுள்ளனர். விக்கிப்பீடியாவில் இக்கட்டுரை இடம் பெறுவதால் இத்திரைக் கதையைத் தயாரித்த நிறுவனத்திற்கே இலாபம் எனவே அவர்கள் இக்கட்டுரையை விக்கிப்பீடியாவில் இடம் பெறுவதை மறுக்கமாட்டார்கள் என்று எண்ணுகின்றேன். --Umapathy 19:24, 23 ஜூலை 2006 (UTC)

தயாரிப்பு நிறுவனம் மறுக்காது தான். ஆனால், விக்கிமூலத்திற்கு தற்போதைய கட்டுரை உள்ளடக்கம் பொருத்தமானதா எனத்தெரியவில்லை. விக்கி மூலம் குறித்த என்னுடைய புரிதல் குறைவு தான். மேலும் அறிந்து விட்டு சொல்கிறேன். தவிர, தற்பொழுது நீங்கள் எழுதியிருப்பதை திரைக்கதை என்றும் சொல்ல முடியாது. அதன் வடிவம் வேறு. இன்னும் விரிவாக துல்லியமாக இருக்க வேண்டும். ஆங்கில விக்கிபீடியாவில் இதை விட விரிவாக கதை விளக்கும் கட்டுரைகள் உள்ளன. (எடுத்துக்காட்டாக, டா வின்சி கோட் பற்றிய கட்டுரை). தமிழ்த் திரைப்பட, இலக்கியக் கட்டுரைகளில் எந்த அளவுக்கு கதையை விரிவுபடுத்தி எழுதுவது என்பது குறித்து ஒரு புரிந்துணர்வுக்கு வருவது.--ரவி 20:31, 23 ஜூலை 2006 (UTC)


உமாபதி, திரைக்கதையை அவ்வளவையும் நீங்கள் தான் தட்டெழுதினீர்களா? உங்களால் இதனைவிடப் பயனுள்ளதாக பல விடயங்களை விக்கிபீடியாவில் தர முடியும். கணினியியல் தொடபில் உங்கள் கட்டுரைகள் நன்றாக உள்ளன. நன்றி. --கோபி 16:48, 23 ஜூலை 2006 (UTC)

கோபி சென்றவார இறுதியில் வவுனியா சென்றிருந்தேன் அங்கேதான் இத்திரைப்படத்தைப் பார்த்தேன். நன்றாக இருந்தால் விக்கிபீடியாவில் ஆரம்பித்து வைத்தேன். அத்துடன் இலங்கையில் வெளியாகும் PC Times பத்திரிகையில் விக்கிபீடியா பற்றிய கட்டுரை ஒன்றையும் வாசிதேன் அதில் ஆங்கில விக்கிப்பீடியா போன்று தமிழ் விக்கிப்பீடியா கருதாழமில்லை என்று ஆசிரியர் குறைதெரிவித்திருந்தார். அதற்கு விடைபகருமுகமாக இத்திரைக்கதையை நான் நான் தட்டச்சுச் செய்துளேன். தங்களின் பாராட்டிற்கு நன்றி கணினியியல் தொடர்ந்து கட்டுரைகளை எழுதுவேன். --Umapathy 19:28, 23 ஜூலை 2006 (UTC)
Return to "இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்)" page.