இயேசு என்னும் கட்டுரை கிறித்தவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் கிறித்தவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இயேசு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

jesus, budha can be put under some category like "samaya niRuvanarkaL" and Md.Nabi can be put under some category like "iRaith thUtharkaL". see also the talk page of budha. "samayathn thalaivarkaL" seems too broad a category under which many can fit in--ரவி (பேச்சு) 09:09, 14 ஜூலை 2005 (UTC)


இயேசு கிறிஸ்தவ சமயத்தை தோற்றுவிக்கவில்லை மாறாக அவரது போதனைகளை பின்பற்றியோரே "கிறிஸ்தவத்தை" தோற்றுவித்தனர். --டெரன்ஸ் 10:52, 2 ஜூலை 2006 (UTC)

  • References

This page is a free translation of the page titled Jesus[1] from the english-wikipedia section.

ஐ நீக்கினேன் (ஏ-கா) தமிழில் புதிய தகவல்கள சேர்த்துள்ளேன். இது மொழிபெயர்ப்பு மட்டுமல்ல.--டெரன்ஸ் 11:03, 2 ஜூலை 2006 (UTC)

டெரன்ஸ், முழுமையான கட்டுரையாக வடிவமைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.--Kanags 11:14, 3 ஜூலை 2006 (UTC)
எழுத்து பிழைகளை திருத்தியுள்ளீர்கள் நன்றி மேலும் எழுதவுள்ளேன் பின்னர் நோக்கவும்.--டெரன்ஸ் 13:55, 6 ஜூலை 2006 (UTC)

கிறிஸ்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்கால??? தொகு

In english!!!!

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 00:59, 14 மே 2007 (UTC)Reply


முன்னலைப்படுத்த தொகு

இக்கட்டுரை முதற்பக்க கட்டுரைகளில் ஒன்று. பயனர் ஒருவரால் தவறாக்கப்பட்டுள்ளது. தயை கூர்ந்து முந்திய திருத்தத்திற்கு முன்னலைப்படுத்தவூம்--சஞ்சீவி சிவகுமார் 10:08, 10 நவம்பர் 2010 (UTC)Reply

சஞ்சீவி, இப்படியான விசமத் தொகுப்புகளைக் கண்ணுற்றால் நீங்களே அதனை மீள்விக்க முடியும். அப்பக்கத்தின் வரலாற்றுக்குச் சென்று குறிப்பிட்ட மாற்றத்தில் மீளமை என்பதைச் சொடுக்கிச் சேமியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:23, 10 நவம்பர் 2010 (UTC)Reply

வெளி இணைப்புகள் தொகு

இக்கட்டுரையில் உள்ள வெளி இணைப்புகளில் பெரும்பான்மையானவை மிகப் பழங்காலத்தில் (!!) ஆங்கில விக்கிக் கட்டுரையில் இருந்து எடுத்தவை. (வரலாற்றைப் பார்த்தால் அறியலாம் [2]). இவை அனைத்தும் ஆங்கில விக்கிக் கட்டுரையில் இருந்து இப்போது எடுத்து விட்டார்கள். இங்குள்ள இணைப்புகளில் ஒரு சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு மீதமானவற்றை அகற்றப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 10:30, 15 நவம்பர் 2010 (UTC)Reply

பல சிக்கல்கள் தொகு

தமிழ்க் கட்டுரையில் தொன்மங்கள் அல்லது நம்பிக்கைகள் உண்மைகள் அல்லது வரலாறு போன்று எழுதப்பட்டுள்ளது, தலைப்பிடப்பட்டுள்ளது. (எ.கா "இயேசு புரிந்த பொதுப் பணி அவர் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து தொடங்கியது எனலாம். திருமுழுக்கின்போது இயேசு தாம் ஆற்ற வேண்டிய பணியொன்று உளது என உணர்ந்தார். அப்பணியைக் கடவுளே தம்மிடம் ஒப்படைத்ததையும் அறிந்தார். இயேசு உண்மையிலேயே கடவுளின் மகன் என்னும் உண்மையும் அவர் பெற்ற திருமுழுக்கின்போது வெளிப்படுத்தப்பட்டது.") விமர்சனப் பார்வைகள் தகுந்த முறையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆங்கில விக்கியில் Life and teachings in the New Testament என்பதன் கீழேயே அவர் மீட்டெழுந்தார், விண்ணேற்றம் அடைந்தார் போன்ற தகவல்கள் அடங்கி உள்ளன. அந்த தலைப்பின் கீழ் வருவதுவே பொருத்தமாக இருக்கும். இவற்றை கிறித்தவர்கள் நம்புகிறார்கள், நம்பிக்கைகள் என்று தெளிவுபடுத்த வேண்டும்.

ஆங்கில விக்கியில் வரலாற்றுப் பார்வை, சமயப் பார்வை என்று இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன. அத்தோடு விமர்சனங்கள் என்ற பகுதியும் உண்டு. தமிழ் விக்கியில் இவை தகுந்த முறையில் இடம்பெறவில்லை. எ,கா இயேசு வரலாற்று நபரா என்று கேள்விக்கு உட்படுத்தும் எந்தக் கருத்தும் கட்டுரையில் இடம்பெறவில்லை.

தயந்து, நடுநிலைமையுடன், பொது, புறவயப் பார்வையில் கட்டுரையைத் திருத்தி எழுதவும். சமயப் பார்வையில் உள்ள தகவல்கள் இடம்பெறலாம். ஆனால் சமயப் பார்வையில் எழுத முடியாது. --Natkeeran (பேச்சு) 06:55, 24 திசம்பர் 2013 (UTC)Reply

நக்கீரன், எல்லா சமய மற்றும் சமய மறுப்புக் கட்டுரைகளிலும் இவ்விதத்திலேயே எழுதப்பட்டுள்ளது. குறித்த விடயத்தில் ஆர்வமுள்ளவர்கள் அதைப்பற்றி மட்டுமே எழுதும்போக்கு அதிகம், ஒருசிலரைத் தவிர. இது மட்டுமல்ல பல கட்டுரைகள் கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட வேண்டும். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:16, 25 திசம்பர் 2013 (UTC)Reply
பிற கட்டுரைகளில் சிக்கல்கள் இருக்கின்றன. எனினும் இக் கட்டுரை முதற் பக்க கட்டுரையாகக் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதால் கூடிய கவனம் எடுத்து இருக்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 22:40, 25 திசம்பர் 2013 (UTC)Reply
நான் பல தடவைகள் முதற்பக்கக் கட்டுரைகளின் இற்றைபடுத்தலிலுள்ள சிக்கல் பற்றி குறிப்பிட்டும் யாரும் முக்கியத்துவம் கொடுத்ததாகத் தெரியவில்லை. தற்போது முதற்பக்கக் கட்டுரையில் "துப்புரவு" வார்ப்புருவும் கூட?! பல கட்டுரைகளுக்கு வார்ப்புரு இடும் அவசியத்தை இது உணர்த்துகிறது. --Anton·٠•●♥Talk♥●•٠· 02:45, 28 திசம்பர் 2013 (UTC)Reply


இக் கட்டுரையில் ஒரு மேற்கோள் கூடச் சேர்க்கபப்ட வில்லை. எல்லாம் ஆங்கில விக்கிக் கட்டுரை இணைப்புகள். --Natkeeran (பேச்சு) 13:45, 10 ஏப்ரல் 2014 (UTC)
  • நட்கீரன், நீங்கள் "மேற்கோள்" என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. உண்மையில், இயேசு பற்றிய இக்கட்டுரை தமிழ் விக்கியில் உள்ள கட்டுரைகளுள் மிகச் சிறப்பான விதத்தில் ஆதாரங்களோடு எழுதப்பட்ட கட்டுரை என்பது எனது கருத்து. "மேற்கோள்" என்பதை மிகக் குறுகிய விதத்தில் பார்க்காமல், ஆதாரங்கள் (sources), குறிப்புகள் (notes) குறுக்குக் குறிப்புகள் (references) என்று பார்த்தால் இக்கட்டுரைக்கு "மேற்கோள்" (direct quotation/citation) தரப்படவில்லை என்பதை ஒரு குறையாகக் கருதமுடியாது என்பது என் கருத்து. அத்தகைய "மேற்கோள்கள்" இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகின்ற ஆதாரங்களின் உள்ளே பல இருக்கின்றன.--பவுல்-Paul (பேச்சு) 17:17, 10 ஏப்ரல் 2014 (UTC)
ஆமாம். என் கூற்றுத் தவறானது. கட்டுரை உரையில் நூல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அது சரியே. இங்கு மேற்கோள்கள் என்று குறிப்பது References ஐயே. ஆங்கில விக்கிக் கட்டுரையை இன்னுமொரி விக்கிக்கு மேற்கோளாகச் சேர்ப்பது பொருத்தமில்லை. குறிப்பாக மேற்கோள்கள் என்ற பகுதிக்குள் வரும் எல்லாம் அப்படி அமைந்திருப்பது. உள்ளடக்கத்தைப் பற்றி விரிவான உரையாடலில் இறங்க விரும்பவில்லை. எனினும் யேசு என்ற வரலாற்று மனிதரும், கிறித்தவ நம்பிக்கைகளுக்கு எற்ற யேசுவும் கலந்து எழுதப்பட்டுள்ளது. --Natkeeran (பேச்சு) 17:41, 10 ஏப்ரல் 2014 (UTC)
  • கட்டுரைக்குக் கட்டுரை வேறுபாடுகள் இருப்பது இயல்பே. இயேசு, புத்தர், ஆன்மா, சாங்கியம், அத்வைதம் போன்ற பொருள்கள் மெய்யியல், இறையியல் சார்ந்தவை. அவற்றைப் பற்றி எழுதும்போது சிந்தனைகள், விளக்கங்கள் இயல்பாகவே அமையக் கூடியவை. அவற்றை எடுத்துரைக்கும்போது ஒருதலைச் சார்பாகச் செயல்பட்டு, ஒரு கருத்தியலைச் சார்ந்துநின்று பிற கருத்தியல்களைக் கொச்சைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது விக்கிப் பண்புகளுக்கு ஏற்புடையதல்ல என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அத்தகைய நடவடிக்கைகள் இல்லாதவரையிலும், இயேசுவை வரலாற்று மனிதராகக் கண்டு, நம்பிக்கை மையமாகக் கொள்வோர் அவரை எவ்வாறு பார்க்கின்றனர் என்று விக்கிக் கட்டுரையில் எடுத்துரைப்பதில் குறையில்லை என்று கருதுகிறேன். இங்கே நடுநிலைப் பிறழ்வு இருப்பதாகத் தெரியவில்லை. --பவுல்-Paul (பேச்சு) 18:03, 10 ஏப்ரல் 2014 (UTC)
எந்தக் கட்டுரை எனினும் புறவயமாக எழுத வேண்டும். நம்பிக்கையை நம்பிக்கை என்று தெளிவாக எழுதல் வேண்டும். இந்தக் கட்டுரையில் இந்த நூல் இப்படிக் கூறுகிறது என்றே பொரும்பாலும் கூறுவதால் எனக்கு ஆட்சோபனை இல்லை. எனினும் அது சில இடங்களில் தஇக் கட்டுரையில் தற்போது நம்பிக்கைசார்ந்த தகவல்களையே முதன்மையாக வெளிப்படுத்துகிறது. ஆங்கிலக் கட்டுரையில் Life and teachings in the New Testament என்பது ஒரு பகுதியே. தமிழ்க் கட்டுரையில் Life and teachings in the New Testament என்பதே எல்லாப் பக்கங்களும் (இயேசு பற்றிய பிற விளக்கங்கள் தவிர்த்து). பிற பாகங்களை பிற பயனர்கள் சேர்க்கலாம், கட்டுரையாளரே சேர்க்கவேண்டும் என்று கூறவரவில்லை. --Natkeeran (பேச்சு) 19:17, 10 ஏப்ரல் 2014 (UTC)
  • புறவயம் - அகவயம் பற்றி நீங்கள் பொதுவாகக் கூறுவதில் எனக்கும் உடன்பாடுதான். இயேசு பற்றிய கட்டுரையில் திருத்தங்கள் தேவைப்படுகின்ற பகுதிகள் யாவை என்று சுட்டிக்காட்டினால் அவற்றைத் திருத்திட நான் முன்வருகிறேன். இக்கட்டுரையின் ஒரு பெரும்பகுதியை நான் எழுதியதால் அதைத் திருத்தும் பொறுப்பையும் ஏற்கிறேன். "நம்பிக்கை சார்ந்த தகவல்கள்" என்று நீங்கள் கூறுவதைப் பற்றி என்னுடைய கருத்தை முன்வைக்க விரும்புகிறேன். இயேசு பற்றிய தகவகல்கள் மிகப்பெரும்பான்மையும் (90% +) புதிய ஏற்பாட்டிலிருந்து, அதுவும் குறிப்பாக நான்கு நற்செய்தி நூல்களிலிருந்து பெறப்படுகின்றன. புதிய ஏற்பாடு கிறித்தவர்களின் சமய நூல். எனவே அதில் சமயக் கருத்துகள் இருப்பதில் வியப்பில்லை. வேறு சமய மரபுகளிலிருந்து எடுத்துக்காட்டாக, காண்க: மகாயான பௌத்தம். இயேசுவைப் பொறுத்தமட்டில், புதிய ஏற்பாட்டுக்கு வெளியே அவருடைய போதனைகள் இல்லை. மாறாக, இயேசு வரலாற்றில் வாழ்ந்த ஒருவரா என்ற கேள்வியை எழுப்புவோர் உள்ளனர். அப்பொருள் பற்றி வேண்டுமென்றால் தனிக்கட்டுரை எழுதப்படலாம். ஆங்கில விக்கியின் மொழிபெயர்ப்பாக மட்டும் நான் தமிழ் விக்கியைக் கருதவில்லை. எனவே, வேறு முறையில் இக்கட்டுரையை வடிவமைப்பதில் சிக்கல் இருக்க வேண்டியதில்லை. இறுதியாக, சமயம் சார்ந்த கட்டுரைகள் அந்தந்த சமயத்தினர் பொதுவாக ஏற்கின்ற கருத்துகளைத் திரிவுறாமல் அளிக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. மேலதிகமாக, கட்டுரையின் தரத்தை உயர்த்துவதற்கு நீங்கள் ஆலோசனை தருவதாக இருந்தால் அவற்றை ஏற்க முன்வருகிறேன். விக்கி ஒரு கலைக்களஞ்சியம் என்பதால் அதில் தரப்படுகின்ற தகவல்கள் நம்பகத்தன்மை கொண்டிருக்கவேண்டும் என்பதும் எனது உறுதியான கருத்து. --பவுல்-Paul (பேச்சு) 23:45, 10 ஏப்ரல் 2014 (UTC)
முன்னர் குறிப்பிட்டது போன்று, இந்த நூலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று கூறின், அது பொருத்தமே. அப்படித் தெளிவு இல்லாமல் அமையும் பகுதிகள் குளப்பத்தைத் தருகின்றன. எ.கா "இயேசு எதிரிகளோடு மோதல்" என்ற பகுதியை எடுத்துக் கொள்வோம். அது பின்வருமாறு தொடங்குகிறது: "இயேசு இறையாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, அவர்கள் தங்கள் பாவ வழிகளிலிருந்து விலகி மன மாற்றமடைந்து இறையாட்சியை நம்பி ஏற்க வேண்டும் என்று விடுத்த அழைப்பைப் பொதுமக்கள் விருப்போடு ஏற்றனர்." இந்த வரி, இந்த நூலில் இப்படிக் கூறப்பட்டது, அல்லது இப்படி கிறித்தவர்கள் நம்புகிறார்கள் என்று வர வேண்டும்.
சமய நம்பிக்கைகளே கட்டுரையின் பெரும் பகுதியாக தற்போது அமைவாதால், எது வரலாறு எது சமய நம்பிக்கை என்று சில இடங்களில் குளப்பம் தருகிறது. "இயேசு துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறையுண்டு இறத்தல்" என்ற பகுதி "Life and teachings in the New Testament" என்பதன் பகுதியாக அமைய வேண்டும். அல்லது xx என்ற நூலின் படி இயேசுவின் இறப்பு போன்று தலைப்பிடலாம்.
"இயேசு வரலாற்றில் வாழ்ந்த ஒருவரா என்ற கேள்வியை எழுப்புவோர் உள்ளனர்" என்று நீங்கள் குறிப்பிட்டது மிகச் சரியே. இத் தகவலோ, கருத்து வேறுபாடுகளோ கட்டுரையில் இடம்பெறுதல் நன்று. அதாவது Historical views அல்லது Historical Jesus என்ற வரலாற்றியல் சார்ந்த தகவல்கள் சேர்க்கப்படுவதன் மூலம் கட்டுரை மேலும் மேம்படலாம்.
தற்போது கிறித்தவப் பார்வையே பெரும்பான்மையாக இருக்கிறது. யூதப் பார்வை, இசுலாமியப் பார்வை பற்றி ஒரு இரு வரிகளே உள்ளன. அச் சமயங்கள் எவ்வாறு யேசுவை நோக்குகின்றன என்று குறிப்பிடலாம். எ.கா யூத சமயம் யேசுவை கடவுளாகக் கருதவில்லை.
யேசு மீத விமர்சனங்கள் சேர்க்கப்படலாம். எ.கா "There is one very serious defect to my mind in Christ's moral character, and that is that He believed in hell. I do not myself feel that any person who is really profoundly humane can believe in everlasting punishment." என்று கணிதவியலாளர் பெர்ட்ரண்டு ரசல் குறிப்பிடுகிறார்.

--Natkeeran (பேச்சு) 00:37, 11 ஏப்ரல் 2014 (UTC)

  விருப்பம்--AntonTalk 03:43, 11 ஏப்ரல் 2014 (UTC)
  • உங்கள் கருத்தைத் தெளிவுபடுத்தியுள்ளீர்கள். இப்பின்னணியில், கட்டுரையில் மாற்றங்களையும் மேலதிக தகவல்களையும் விரைவில் சேர்க்கிறேன்.--பவுல்-Paul (பேச்சு) 01:12, 11 ஏப்ரல் 2014 (UTC)

துப்புரவாக்கம் தொகு

இக்கட்டுரையில் இயேசு கிறித்து பற்றி கிறித்தவர்கள் நம்புவது என்ன என்பது தெளிவாகத் தெரியும் வகையில் பகுதித் தலைப்புகள் மாற்றப்பட்டுள்ளன. கட்டுரை வெகு நீளமாக இருப்பதால் கிறித்தவத்தை மறுப்போர், இயேசு பற்றி இசுலாம் போன்ற பகுதிகளை இக்கட்டுரையில் சேர்ப்பதா என்றும் தெளிவில்லை. ஒருவேளை புதிய கட்டுரைகள் உருவாக்கி அவற்றிற்கு இணைப்புக் கொடுக்கலாம். துப்புரவு வேண்டும் என்னும் குறிப்பை அகற்றியுள்ளேன்.--பவுல்-Paul (பேச்சு) 03:50, 27 சனவரி 2014 (UTC)Reply

தலைப்பு மாற்றம் தொகு

இயேசு கிறித்து வழிமாற்றாகக் கொண்டு இயேசு என்பது முதன்மையாக இருக்கலாம். --AntonTalk 18:34, 11 ஏப்ரல் 2014 (UTC)

AntonO செய்கின்ற துப்புரவாக்கம் தொகு

AntonO, ”இயேசு” கட்டுரையை மேம்படுத்தும் வகையிலும் அதை நன்முறையில் விக்கியாக்கம் செய்யும் வகையிலும் நான் செய்கின்றவற்றை நீங்கள் “தேவையற்ற உள்ளீடும் உசாத்துணையும்” என்று கூறி அகற்றியிருக்கிறீர்கள். எந்த ஒரு பொருளைப் பற்றியும் எடுத்துரைக்கும்போது பல கோணங்களில் அப்பொருளை அணுகுவதும் அதற்கான ஆதாரங்கள் தருவதும்தானே கலைக்களஞ்சியத்தின் பாணி. நீங்கள் செய்கின்ற “துப்புரவு” ஆக்கப்பூர்வமானதாகத் தெரியவில்லையே.--பவுல்-Paul (பேச்சு) 02:34, 12 ஏப்ரல் 2014 (UTC)

இங்கு நான் செய்த தொகுத்தல் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் எனக் கருதுகிறேன். இதில் நான் யூதப் பார்வை பற்றி ஆ.வி.யில் இருந்து மொழிபெயர்த்துள்ளேன். யூதப் பார்வை யூதப் பார்வையாக இருக்கட்டும். இதில் கிறித்தவ இடைச்சொருகல் தேவையில்லை எனக்கருதுகிறேன். ஒவ்வொரு பார்வைக்கும் மறுப்பு (பின்பு அதற்கு பதில் என) எழுதினால் கலைக்களஞ்சியத்தின் பாணி விவாத அரங்காகிவிடவும் வாய்ப்புள்ளது. அதில் வழங்கப்பட்டுள்ள உசாத்துணை ஒரு (விற்பனை) நூலுக்கு இணைப்புக் கொடுக்கிறது. இது விக்கி மேற்கோள் சுட்டும் முறைக்கு ஏற்புடையது அல்ல. மேலும், நீங்கள் ஆ.வி.க்கு உள்ளிணைப்பு (உள்ளுக்கு இருந்து வெளியிணைப்பு) ஏற்படுத்துகிறீர்கள். த.வி. உள்ளிணைப்பு தன்வயமாக இருப்பதே சிறப்பு. நான் செய்கின்ற “துப்புரவு” ஆக்கப்பூர்வமானதாகத் தெரியாதிருந்தால் மற்றவர்களின் கருத்தையும் கேட்கலாம். சரியானதைச் செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. --AntonTalk 03:33, 12 ஏப்ரல் 2014 (UTC)
  • AntanO, மேலே நீங்கள் கொடுத்த விளக்கம் பற்றி சற்று விரிவாக உரையாடவேண்டிய தேவை எழுந்துள்ளது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

1) "இயேசு" கட்டுரையில் நான் தொகுத்ததை "கிறித்தவ இடைச்சொருகல்" என்கிறீர்கள். அது நான் யூதப் பார்வைக்கு மறுப்பாக எழுதியதாகக் கூறுகிறீர்கள். அது விவாதத்துக்காகச் சேர்க்கப்பட்ட செருகல் அல்ல, மாறாக கட்டுரையின் முழுமைக்காகத் தரப்பட்ட தகவல் மட்டுமே. ஒரு கட்டுரையின் மையக்கருத்துக்கு ஒரு மாற்றுக்கருத்து உள்ளது என்றால், அந்த மாற்றுக் கருத்தை ஆய்ந்து எடுத்துரைக்கும் உரிமை பொதுவாக எங்கும் உள்ளதுதானே. "விவாத அரங்கு" இல்லையே. நான் தொகுத்ததை உடனடியாகவே நீங்கள் அகற்ற முன்வந்தபோது "உரையாடல்" பக்கத்தில் அது பற்றி ஏன் கூறவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. நீங்கள் யூதப் பார்வை என்றும் இசுலாமியப் பார்வை என்றும் கூறுவதை நான் "யூத இடைச் செருகல்" என்றோ "இசுலாமிய இடைச் செருகல்" என்றோ கூறமாட்டேன். மாறாக, கலைக்களஞ்சியக் கட்டுரைக்கு முழுமைதரும் தகவல் என்று கூறிப் பாராட்டுவேன்.

2) "இயேசு" கட்டுரையில் ஆங்கில விக்கிக் கட்டுரைகளுக்கு இணைப்புகள் கொடுத்தது உண்மையே. அவற்றுள் இரு உள்ளிணைப்புகளும் 32 அடிக்குறிப்பு வடிவ உள்ளிணைப்புகளும் இருந்தன. அவை அனைத்தையும் யாதொரு உரையாடலுமின்றி நீங்கள் அகற்றினீர்கள். அவ்வாறு அகற்றியபோது "ஆங்கில விக்கி உசாத்துணையாக முடியாது" என்றொரு தலைப்பும் கொடுத்திருந்தீர்கள். இங்கே எனக்கு ஒரு ஐயம். "ஆங்கில விக்கி உசாத்துணையாக முடியாது" என்றொரு விக்கிக் கொள்கை (policy) இருக்கிறதா? அப்படி ஒரு கொள்கை இருந்தால் அதைக் கட்டாயம் மாற்ற வேண்டும் என்பது எனது பரிந்துரை. விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற இணையத் தளக் கலைக்களஞ்சியம். எனவே, அதில் எழுதப்படுகின்ற கட்டுரைகளுக்கு இணையத்தள இணைப்புகள் இருந்தால், பயனர் எளிதாக அந்த இணைப்புகளைச் சொடுக்கி, கட்டுரைகளிலிருந்து தகவல் பெறுவது எளிதாக இருக்கும். காகிதப் பதிப்புகளில் உசாத்துணை தருவதுபோல இணையத்தளத்திலும் உசாத்துணையை எளிதாகத் தந்துவிடலாம். ஆனால் பயனர் நன்மையைக் கருதினால், ஒரு விக்கி மற்றொரு மொழி விக்கிக்கு இணைப்புக் கொடுப்பதில் குறை இருப்பதாக எனக்குப் படவில்லை. ஏன் ஆங்கில மொழி விக்கிக்கு மட்டும் இணைப்புக் கொடுக்கவேண்டும் என்றால், பொதுவாகத் தமிழ் மக்கள் ஆங்கிலம் அறிந்தவர்கள் என்னும் அடிப்படையில்தான். மேலும், கிறித்தவம் பற்றிய பல கருத்துக்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் தமிழில் இல்லாத குறை. எனவே, தமிழ் விக்கிக் கட்டுரைகளுக்கு ஆங்கில விக்கி இணைப்புக் கொடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்று ஒரு கொள்கை இருந்து, அவ்வாறு செய்வது கொள்கையளவில் தடைசெய்யப்பட்டிருந்தால் நான் சட்டத்திற்கு அமைந்து நடக்கத் தயங்கமாட்டேன். ஆனால் அத்தகைய கொள்கை இருந்தால், அது மாற்றப்படவேண்டும் என்று பரிந்துரைப்பேன்.

3) மற்றொரு பயனர் "இயேசு" கட்டுரைக்கு சில வெளி இணைப்புகளைக் கொடுத்தபோது நீங்கள் அந்த வெளி இணைப்புகளை யாதொரு உரையாடலுமின்றி அகற்றினீர்கள். இங்கேயும் எனக்கு ஒரு ஐயம். "நூற்றுக்கணக்கான இணையத்தளங்கள் இயேசு பற்றி உள்ளன. ஆகவே வெளி இணைப்பில் இணைப்பதாயின் பேச்சுப்பக்கத்தில் உரையாடவும். அவ்வாறு இல்லாது சேர்க்கப்படும் இணைப்புகள் நீக்கப்படலாம்" என்றொரு குறிப்பு இட்டுள்ளீர்கள். இதன் பொருள் எனக்குப் புரியவில்லை. உலகில் யாவருக்கும் தெரிந்த பெரியவர்கள் (காந்தி, புத்தர், கன்பூசியசு, திருவள்ளுவர்...) பற்றிய ஆய்வுகள் நூற்றுக்கணக்கில் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவற்றுள் ஒருசிலவற்றையாவது வெளி இணைப்புகளாகக் கொடுக்கும்போது எஞ்சிய இணைத்தள இணைப்புகள் எல்லாம் பயனற்றவை என்றோ முக்கியமானவையல்ல என்றோ பொருளாகாதே. எனவே, ஒரு குறிப்பிட்ட இணையத்தளம் விசமத்தனமானது என்று தெரிந்தால் அதைக் கட்டாயம் அகற்ற வேண்டியதுதான். ஆனால் மற்ற இணையத்தளங்களை நீக்குவது சரியாகத் தெரியவில்லை. உங்களுக்கு முக்கியமானவை என்று தெரிகின்றவற்றை நீங்களும் சேர்க்கலாமே. அதற்கு மாறாக, பிற பயனர் தொகுப்பதை அகற்றுவதிலேயே நீங்கள் குறியாக இருப்பது போல் எனக்குத் தெரிகிறது. அப்படி இல்லையென்றால் அது பற்றிய விளக்கம் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி!

மேலே நான் கூறியவை எல்லாம் கொள்கையளவிலான விளக்கங்கள் தேவை என்பதை வலியுறுத்தவே. அடிப்படைக் கொள்கைகளில் தெளிவு இல்லாதபோது எழக்கூடுமான குழப்பங்களைத் தவிர்ப்பது விக்கிப் பயனர்கள் அனைவருக்கும் நன்மையாக அமையும் என்பது எனது உறுதிப்பாடு.--பவுல்-Paul (பேச்சு) 14:34, 12 ஏப்ரல் 2014 (UTC)

பதில்

விக்கிப்பீடியாவின் கொள்கைகள் பற்றி உங்களுக்குத் தெரியாதா எனும் வினா என்னுள் எழுவதனால் உங்கள் கேள்விகளுக்கான பின்புலத்தை அறியேன். மேலும், இக்கட்டுரையை {{Notability}}, {{POV}} வார்ப்புரு இடப்படும் நிலையில் உள்ளது. அவ்வாறு இருந்தும் நன்நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.

1) யூதப் பார்வைக்கு ஏன் கிறித்தவ மறுப்பு? இப்படிப் போனால் யூதப் பார்வைக்கு இசுலாமிய மறுப்பு தேவை என்றாகி விடுமல்லவா? இசுலாமியப் பார்வைக்கும் கிறித்தவ மறுப்புத்தான் அவசியமா? கிறித்தவ பார்வை என்னும் பகுதி எழுதப்பட்டால், அங்கு மறுப்பாக எச்சமயப் பார்வை வரவேண்டும்? யூதம் இயேசு இல்லை என்கிறது. அது அவர்கள் பார்வை, அவ்வளவுதான். இதற்கு ஏன் இயேசு பற்றிய யூதப் பார்வைக்குக் கிறித்தவ மறுமொழி? இயேசு என்னும் கட்டுரையில் கிறித்தவ, யூத பார்வைகள் சிறு பிரிவுகளே. ஆகவே, இயேசு பற்றிய கிறித்தவ, யூத, இசுலாமிய, பகாய் பார்வைகள் போதுமானவை. இல்லை என்றால் மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்கலாம். யூதப் பார்வைக்கு கிறித்தவ மறுப்பு தேவைதான் என்று விக்கி சமூகம் கருதுமானால், உங்கள் தொகுப்பினை மீள்வித்துவிடலாம். மேலும், "துப்புரவு வேண்டும்" என்னும் குறிப்பை நீங்கள் அகற்றியபோது யாரும் உங்களைக் கேட்கவில்லை. நீங்களும் யாரிடமும் கேட்கவில்லை. புரிந்துணர்வில்தான் செயற்படுகிறோம்.

2) No original research இதனைப் பாருங்கள். Wikipedia articles should be based on reliable, published secondary sources and, to a lesser extent, on tertiary sources and primary sources......... Wikipedia articles usually rely on material from reliable secondary sources. Articles may make an analytic or evaluative claim only if that has been published by a reliable secondary source........ Wikipedia articles may not be used as tertiary sources in other Wikipedia articles, but are sometimes used as primary sources in articles about Wikipedia itself ...... இங்கு மாற்றுக் கருத்து இருக்குமாயின் "மூன்றாம் நிலை மூலம்" தவிர்த்து "இரண்டாம் நிலை மூலம்" மட்டுமே அவசியாகும்.

3) எனக்கு முக்கியமானவை என்று 100 இணைப்புக்கள் உள்ளன. அவ்வாறே பலருக்கும் பல முக்கியமான இணைப்புக்கள் உள்ளன. எனவே கட்டுப்படுத்துவது எவ்வாறு? சிக்கலைத் தவிர்க்க நான் ஆ.வி.யில் இருந்து அப்படியே பிரதி செய்தேன். தற்போதைக்கு இணைப்புக்களை தற்காலிகமாக நிறுத்துகிறேன். எவை முக்கியமானவை என அறிந்த பின் சேர்க்கலாம். --AntonTalk 17:10, 12 ஏப்ரல் 2014 (UTC)


சில விடயங்கள் தொகு

  • ஆங்கில விக்கிக் கட்டுரைகளை மேற்கோளாகக் (references) காட்டாமல், ஆங்கில விக்கிக் கட்டுரைகள் தரும் மேற்கோள்களைப் பயன்படுத்தி, அல்லது சுட்டி தமிழ் விக்கியில் கட்டுரைகள் தரலாம். கட்டுரைக்குள் quotations தருவது ஏற்றுக் கொள்ளத் தக்கது. எனினும் அதற்கும் குறிப்பாக எந்தப் பதிப்பில் இருந்து எடுக்கப்பட்டது என்று மேற்கோள் சுட்டினால் மேலும் சிறப்பு. மேற்கோள் எடுத்துக்காட்டு.
{{Reflist|refs=
| <ref name="பனுவல்_போற்றுதும்">நாஞ்சில் நாடன். (2011). ''பனுவல் போற்றுதும்''.  திருச்சிராப்பள்ளி: தமிழினி.</ref>
}}

பிற விக்கிகளை மேற்கோள் காட்டுவது Circular logic க்கே இட்டுச் செல்லும்.

  • முதலாம் நிலை ஆதாரங்களைப் பயன்படுத்தலாம். அதுவே ஆங்கில விக்கியின் கொள்கையின் ஆகும்: "Unless restricted by another policy, primary sources that have been reliably published may be used in Wikipedia; but only with care, because it is easy to misuse them". தமிழில் ஆதாரங்கள் மிகவும் அரிது என்பதால், நாம் நிச்சியம் ஒரு இளகிய அணுகுமுறையை இங்கு கையாழ வேண்டும். பல தலைப்புகளைப் பொதுத் தகவலாகப் பலர் அறிவர். ஒளிப்படங்கள் போன்ற ஆதாரங்கள் கிடைக்கும். ஆனால் நூல், அல்லது ஆய்வுக்கட்டுரை இலகுவில் கிடைக்காது. "No original research" என்பதன் அடிப்படை நோக்கம், யாரும் அறியாதா ஒரு புதிய மருந்தைப் பற்றி ஒருவர் தமிழ் விக்கியில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க முயல்வது போன்ற செயற்பாடுகளைத் தடுப்பது ஆகும். ஒரு கட்டுரையை எழுதும் போது நாம் ஆய்வு செய்கிறோம், அது கட்டுரை சார்ந்த ஆய்வே. எ.கா யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் என்ற கட்டுரையை நோக்குக. அதில் ஒரே ஒரு மேற்கோளே தரப்பட்டுள்ளது. மேலும் சேர்க்கப்பட வேண்டும். ஆனால் இது original research என்று கூறி நீக்கிவிட முடியாது. குறிப்பாக விழிம்புநிலை மக்கள், அழியும் கலைகள், பதியப்படாத தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் பற்றி நாம் கட்டுரைகள் எழுதும் போது முதலாம் நிலை ஆதாரங்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டி இருக்கும்.
  • வெளி இணைப்புகளை ஆங்கில விக்கியில் இருந்து படி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இயேசு போன்ற தலைப்புகளில் நல்ல தமிழ் இணைப்புக்களைத் தரலாம். தமிழ் இணைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.
  • யூதப் பார்வைக்கு மறு பார்வை வைப்பது பற்றி நான் உறுதியாகக் கூற முடியவில்லை. எனக்கு இத் தலைப்பு அவ்வளவு பரிச்சியம் இல்லை. ஆனால் ஒரு சிறிய புள்ளியை அல்லது வாதத்தை விபரித்து எழுதுவதால், ஒரு கட்டுரையின் நடுநிலைமை தவறிவிடக் கூடிய வாய்ப்பு உள்ளது. எ.கா Age of the universe என்ற கட்டுரையில் Young Earth creationism பற்றி விரித்து எழுத முடியாது. அப்படி எழுதினால் Age of the universe என்ற கட்டுரையின் நடுநிலைமை தவறும். --Natkeeran (பேச்சு) 17:57, 12 ஏப்ரல் 2014 (UTC)

பதில்மொழி: பவுல் தொகு

அன்றன், நட்கீரன், உங்கள் பதில்களுக்கு நன்றி! பிற பயனர்களின் கருத்தையும் அறிய ஆவல்.

//மேலும், இக்கட்டுரையை {{Notability}}, {{POV}} வார்ப்புரு இடப்படும் நிலையில் உள்ளது. அவ்வாறு இருந்தும் நன்நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.// - இவ்வாறு அன்றன் கூறுகிறார். இத்தகைய வார்ப்புருக்களை எளிதில் இடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எச்சரிக்கை/தணிக்கை வார்ப்புருக்களை இட்டுவிட்டால் மட்டும் கட்டுரையின் தரம் உயர வாய்ப்பில்லை அல்லவா? மேலும், இத்தகைய எச்சரிக்கை/தணிக்கை வார்ப்புருக்கள் ஒரு குறிப்பிட்ட கட்டுரையில் எந்தப் பகுதி/கருத்து/சொற்றொடர்/விளக்கம் மாற்றியமைக்கப்பட வேண்டும்; ஏன் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுவதில்லை. அதை உரையாடலில்தான் விரிவாக, விளக்கமாகச் சுட்டிக்காட்ட முடியும். எனவே, முதலில் உரையாடிவிட்டு அதன் பிறகு இன்றியமையாத் தேவை எழுந்தால் மட்டுமே "நடுநிலை" கேள்விக்குறி இடுவது விக்கிப்பண்புக்கு இயைபுடையதாகும். (விரிவான விளக்கம் ஆ.வி.யில் காண்க: Notability, POV).

கட்டுரையின் தரம் உயர வேண்டும் என்றால் தொகுப்பின் தரத்தை உயர்த்துவதே அதற்கு வழி. இதற்கு உரையாடல் வேண்டும், உழைப்பும் வேண்டும். எனவே "இயேசு" கட்டுரையை மட்டுமல்ல, வேறு பல கட்டுரைகளையும் செம்மைப்படுத்துவோம். ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவோம். தமிழ் விக்கியின் ஒட்டுமொத்த வளர்ச்சியையே குறிக்கோளாகக் கொண்டிருப்போம். நன்றி, வாழ்த்துக்கள்! --பவுல்-Paul (பேச்சு) 19:06, 12 ஏப்ரல் 2014 (UTC)

தமிழ் பேச்சு விக்கிபீடியா திட்டத்தின் ஆங்கில பேச்சுக் கட்டுரை தொகு

தமிழ்விக்கிபீடியாவில் இருந்து ஆங்கில பேச்சுக் கட்டுரையை நீக்க வேண்டும் அத்தை நீக்க முடியுமா?. நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 05:16, 1 ஏப்ரல் 2023 (UTC) @Sriveenkat: நீக்கப்பட வேண்டிய கட்டுரை எது என்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள். அக்கட்டுரையின் தலைப்பை அல்லது இணைப்பைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 05:51, 1 ஏப்ரல் 2023 (UTC)

@Kanagsஅது இந்த கட்டுரையில் வெளி இணைப்புகள் பகுதியில் Spoken Wikipedia என்னும் வார்ப்புருவில் உள்ள ஆங்கில ஒளி கோப்பு நீக்க வேண்டும் என்று கூறினேன். அது ஒரு ஒலிகோப்பு ஆகும். அது ஆங்கிலத்தில் உள்ளது. அதை நீக்குங்கள் என்று கூறினேன்.

கட்டுரையை அல்ல

இன்னும் சில தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் லூம் இந்த ஆங்கில ஒலிகோப்புகள் உள்ளன.
அதில் சிலதை ஸ்போக்கன் விக்கிபீடியா திட்டத்தின் பேச்சு பக்கத்தில் கூறி உள்ளேன்.
அதையும் காண்க: பேச்சு விக்கிபீடியா திட்டம், பதில் அளித்ததற்கு மிக்க நன்றி. ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 19:58, 1 ஏப்ரல் 2023 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இயேசு&oldid=3814006" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இயேசு" page.