பேச்சு:இராமதேவ சித்தர்
ஐயம்
தொகுஇராமதேவ சித்தர் கட்டுரையில் யாகோபு சித்தர் எழுதிய பாடலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுரையின் இறுதியில் யாக்கோபு பக்கத்திற்கு இராமதேவ சித்தர் என்ற இணைப்பு உள்ளது. அக்கட்டுரையில் தமிழ் புலவராக யாக்கோபு சித்தரிக்கப்பெறவில்லை. மிகுந்த குழப்பங்கள் நிறைந்த கட்டுரையாக உள்ளது. அல்லாவினை நினைத்து எழுதியுள்ள இந்த பாடலுக்கு உரிய ஆசிரியர் யாரென தெளிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:46, 9 சூன் 2013 (UTC)
- யாக்கோபு என்ற இசுரேலியருக்கும் இவருக்கும் எவ்விதத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இணைப்பை நீக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 23:29, 9 சூன் 2013 (UTC)
யாக்கோபு என்பது இவரின் இன்னொரு பெயர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:27, 10 சூன் 2013 (UTC)
- ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால் கட்டுரை மேலும் செம்மையுரும். இராமதேவர் என்ற இயற்பெயரை உடையவர் தேரையர் எனும் சித்தர். பெயர் குழப்பம் நேரிடலாம்.நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:29, 10 சூன் 2013 (UTC)
இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தைத் தழுவினாரென்று சில இடங்களில் வாசித்திருக்கிறேன். அது தொடர்பான ஆதார நூல் எதுவும் உள்ளதா?--பாஹிம் (பேச்சு) 09:54, 8 சூலை 2013 (UTC)
- இதையும் பார்க்கவும் சேரமான் பெருமாள்-இராமதேவ சித்தர்?--அராபத் (பேச்சு) 10:35, 8 சூலை 2013 (UTC)
பார்த்தேன். தகவலுக்கு நன்றி, அரபாத். தினமலர் இவர் இஸ்லாத்தை ஏற்றாரென்றும், வேறு சி செய்திகளையும் கூறுகிறது.--பாஹிம் (பேச்சு) 11:18, 8 சூலை 2013 (UTC)
இது ஒரு பொய்யான தகவல்களை ஆவணப்படுத்தும் முயற்சி ( இராமதேவ சித்தர் ) இணைப்பை நீக்க வேண்டும் ----- Mohamed ijazz
இது பொய்யான தகவல் என்று சொல்லுவதற்கு ஆதாரம் இருக்கா? இராமதேவர் இசுலாமை ஏற்று தமிழகம் திரும்பியது 99% சித்தர் நூல்களில் உள்ளது. சேரமான் பெருமாள் என்றவர் கி.பி7-8ஆம் நூற்றாண்டுகளிலேயே இசுலாமை பரப்பியதுக்கும் ஆவணங்கள் உண்டு. மேலும் கட்டுரை நீக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லை. ஆதாரங்கள் வேண்டுமானால் கேட்கலாம். கட்டுரையை அழிக்க முடியாது. அந்த பாடல் பாடப்பட்ட நூல் யாரெழுதியது? அதன் பிரதி ஏதும் உண்டா? இதை வேண்டுமானால் சரிபார்க்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:24, 12 மார்ச் 2014 (UTC)