தமிழில் ஈசுவரன்,ஈசுவரி, சாமுண்டீசுவரி, சுந்தரேசுவரர், சனீசுவரன் போன்ற வழக்கம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. எனவே சவுடேசுவரி அம்மன் கோயில் என்று எழுதலாம். கோயிலில் இப்படி எழுதியிருந்தாலும், அப்படியேத்தான் எழுதவேண்டும் என்று இல்லை. இக்கோயிலைப் பற்றி பிறமொழியாளர் எப்படி அவர்கள் மொழிக்குந்தவாறு எழுதுவார்களோ அப்படி நாமும் நம் தமிழ்மொழிக்கு ஏற்றவாறு, வழிவழியாய் எழுதிவந்த வழக்கப்படியே, இருப்பதே நல்லது. --செல்வா 14:37, 3 டிசம்பர் 2008 (UTC)

இக்கட்டுரையின் புவியியல் ஆள்கூறுகள் சம்பந்தமாக தொகு

இக்கட்டுரை பொதுவான உள்ளடக்கம் கொண்டது. குறிப்பிட்டு எந்தக் கோயிலையும் பற்றி விளக்கப்படவில்லை. எனவே, குறிப்பிடப்பட்டுள்ள புவியியல் ஆள்கூறுகள் இக்கட்டுரைக்குப் பொருந்தாது.

சேலம் மாவட்டத்தில் ஜலகண்டேசுவரம் பகுதியில் அமைந்துள்ள இராமலிங்க சௌடேசுவரி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள இடத்திற்கான புவியியல் ஆள்கூறுகள் இவை.

எனவே, இக்கட்டுரையின் புவியியல் ஆள்கூறுகளை நீக்கம் செய்வது பொருத்தமானது.

Almightybless (பேச்சு) 03:54, 25 அக்டோபர் 2023 (UTC)Reply

Return to "இராமலிங்க சௌடேசுவரி அம்மன்" page.