இராமலிங்க சௌடேசுவரி அம்மன்

இந்துக்கடவுள்

இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் அல்லது ச்சவுடேசுவரிதேவி (மற்ற மாநிலங்களில்) சக்தி, சாமுண்டி, ஜோதி என மூன்று வடிவில் வழிபடப்படும் அம்மன் ஆவார். மற்ற பெயர்கள் பனசங்கரி, சூடாம்பிகை என்பதாகும். மேலும் இவர் தேவாங்கர் சமூகத்தின் குலதேவதை ஆவார்.[1]

இராமலிங்க சௌடேசுவரி அம்மன்
சௌடேஸ்வரி தேவி
அதிபதிதேவாங்கர் சமூகக் கடவுள்
வகைதேவி
மந்திரம் ஓம் ஈசப்பத்னி ச வித்மஹே சிம்ஹத்வஜாய தீமஹி தந்நோ சௌடி ப்ரஜோதயாத்(ராமலிங்க சௌடேஸ்வரியம்மன் மந்திரம் ) ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விராட் ரூபாய மஹாமர்த்தினி தந்நோ ச்சௌடேஸ்வரி ப்ரஜோதயாத் (ச்சௌடேஸ்வரி /சவுடேசுவரி தேவி மந்திரம் )
ஆயுதம்திரிசூலம்
துணைசிவன் (ராமலிங்கேசுவரர் வடிவில்)
இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் , தமிழ் நாடு , கேரளா , ஒடிசா , மத்தியப் பிரதேசம், டெல்லி மஹாராஷ்டிரா .
மாவட்டம்:கர்நாடகா(அனைத்து மாவட்டங்களிலும்),தமிழ் நாடு (அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பாக சேலம் ), கேரளா (குத்தாம்பள்ளி பகுதியில் ), ஆந்திரப் பிரதேசம் (சிறப்பாக நந்தவரம் ),டெல்லி, மஹாராஷ்டிரா , மற்ற மாநிலங்களின் சில மாவட்டங்களில்.
அமைவு:குறிப்பிட இயலாது (நாடு முழுவதும் கோவில் உள்ளது)
ஆள்கூறுகள்:11°41′58″N 77°52′29.4″E / 11.69944°N 77.874833°E / 11.69944; 77.874833
கோயில் தகவல்கள்

வரலாறு

தொகு

தேவாங்க புராணத்தின் படி, தேவலர் தேவாங்கர் சமூகத்தின் மூலாதாரமாக விளங்குகிறார். [2] அனைவருக்கும் ஆடை வழங்கி வந்த "அக்னி மனு" வீடு பேறு பெற்ற பிறகு துணிகளுக்கான தேவை மிக அதிகமானது. ஆடைகளை உருவாக்கவும் உலகிற்கு நெசவு செய்ய கற்றுக் கொடுக்கவும் சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து தேவலர் உருவானார் (அல்லது சிவபெருமானின் இதயத்தில் இருந்து என கொள்ளலாம்) . விஷ்ணுவின் தொப்புளில் இருந்து தாமரை நூல் பெற்று வரும் வழியில் ​​ஐந்து அசுரர்களின் ஒரு குழு அவரைத் தாக்கியது, அமாவாசை இருட்டில் அவர்கள் வலிமை மிக அதிகமாக இருந்தது. தேவலர் விஷ்ணுவின் சக்கரத்தை கொண்டு போராடி தோற்றார், கடைசியில் அவரை பாதுகாக்க சக்தி அம்மனை வேண்டினார். தேவி சக்தி மகிமையுடன் இருளை விரட்டும் பிரகாசமான கிரீடம் அணிந்து, சூலம் மற்றும் இதர ஆயுதங்களை கையில் கொண்டு சிங்கத்தின் மீது தோன்றினார். கடைசியாக அவர் அசுரர்களை கொன்றார். அவ்வசுரர்களுடைய இரத்தம் வெள்ளை ,கருப்பு,சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்தது. அவ்வசுரர்களுடைய வண்ணமயமான இரத்தத்தில் தேவலர் நூலை சாயம் ஏற்றினார்.அன்று முதல் அந்த அம்மன், சௌடேஸ்வரி அல்லது ச்சவுடேசுவரி (சௌட / சவுட / சூட = பிரகாசம்) என்று அறியப்பட்டார். பின்னர், ஒவ்வொரு அமாவாசை நாளிலும் அவளை வணங்கும்படி தேவலருக்கு அறிவுரை கூறினார். [3] பின்னர் தேவலர் இமயமலையின் தெற்கு பகுதிக்கு சென்று, அமோத நகரை தலைநகராக கொண்டு "சகர" நாட்டினை ஆண்டார். புதிய ஆடைகளை நெய்து மும்மூர்த்திகள், திரிதேவிகள், தேவர் , அசுரர், கந்தர்வர், கின்னறர் மற்றும் சாதாரண மக்களுக்கு கொடுத்தார். மகாதேவரின் உடலிலிருந்து தோன்றியதலும் தேவர்களின் உடல் பாகங்களை மறைப்பதற்கு தேவலர் துணிகளை அளித்ததாலும், அவரது சமூகத்தினர் தேவாங்கர் (அங்க= உடல் அங்கம்) என பெயரிடப்பட்டனர். தேவலர் சூரியதேவனின் சகோதரி தேவதத்தையை மணந்தார். எனவே சூரியன் தேவாங்கர்களின் முதல் சம்பந்தி ஆவார். பின்னர் ஆதி சேடனின் மகள் சந்திரரேகையை மணந்தார், எனவேதான் தேவாங்க மக்கள் சேடர் / ஜேண்டர் என்று அழைக்கப்படுகிறார்கள். பின்னர் அசுரராஜன் வக்கிரதந்தனின் மகள் அக்னி தத்தையை மணந்தார். தேவலரைப் பின்பற்றுபவர்கள் தேவாங்க அல்லது தேவாங்கர் என்று அழைக்கப்படுகின்றனர்.[4]


தமிழ் நாட்டில்

தொகு

கர்நாடகாவில் இந்த அம்மனை தங்கள் குல தெய்வமாக வணங்கி வந்த தேவாங்கர் சமுதாயத்தினர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து தொழில் நிமித்தமாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர். நெசவுத் தொழில் செய்து வந்த இவர்கள் தாங்கள் சென்று குடியேறிய ஊர்களிலெல்லாம் தங்களது தெய்வமாக ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலை அமைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கன்னட மொழி பேசும் இந்த தேவாங்க சமுதாயத்தினர் தேவாங்க செட்டியார் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பல ஊர்களில் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்து சமயத்தின் சைவம், வைணவம் என்கிற இரு பிரிவுகளில் தங்கள் தெய்வ வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலும் அனைவருக்கும் பொதுவாக இந்த ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்குக் கோவில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இவர்கள் 10000குலம் கொண்ட இனம் ஆக இருக்கின்றார்கள்.

ராமலிங்க சௌடேஸ்வரி மற்றும் ச்சவுடேசுவரி (வித்தியாசம்)

தொகு

தேவாங்க மக்கள் சக்தி தோற்றத்தை பின்பற்றுகிறார்கள், இதனால் அவர்கள் தெய்வத்தை சவுடேசுவரி என உச்ச தெய்வத்தின் வடிவத்தில் வணங்குகிறார்கள். பின்னர் இந்து மதம் பாரம்பரியத்தால் அவர்கள் சில கலாச்சாரங்களை ஏற்றுக்கொண்டு, ராமபாணம் (ராமர்இன் வில்) மற்றும் லிங்கம் (சிவன்) ஆகியோருடன் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மானாக, சைவம் மற்றும் வைணவம் கலாச்சாரத்துடன் வழிபடுகின்றனர். இங்கு பெயர் மட்டுமே வேறுபடுகிறது அவர்களின் பாரம்பரியத்தில் வேறு எந்த வித்தியாசமும் இல்லை. பெரும்பாலும் தமிழ்நாடு மற்றும் கேரளா வழிபாட்டுத் தலங்களைச் சேர்ந்த தேவாங்கர், ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனாகவும் மற்ற பகுதிகளில் உள்ள தேவாங்கர் சவுடேசுவரி தேவியாகவும் வணங்குகின்றனர்.[5]நேபாளத்தின் கோரக்பூர் தேவாங்க மக்கள் அவரை கோமளாங்கி தேவி என்று வணங்குகின்றனர்.

சௌடேஸ்வரி மற்றும் அசுரர்களுக்கிடையே போர்

தொகு

விஷ்ணுவின் வசிப்பிடத்திலிருந்து தேவலர் திரும்பி வந்த போது, வஜ்ரமுஷ்டி, தூம்ரவக்கிரன், தூம்ராட்சன், சித்ரேசனன், பஞ்சசேனன் ஆகியோர் அடங்கிய அசுரர் குழு அவரை தாக்கினர். தேவலர் விஷ்ணுவின் சுதர்ஷன சக்ரத்தைக் கொண்டு போரிட்டார், எனினும் விஷ்ணுவிடமிருந்து அவர்கள் பெற்ற வரத்தினால் , சக்கரம் போரில் தோற்றது. தேவி சௌடேஸ்வரி தோன்றி அந்த அசுரர்களை கொன்றாள். இந்த நாள் ஆசாட அமாவாசை தினமாக தேவாங்க மக்களால் கொண்டாடப்படுகிறது. [6]

பண்டிகைகள்

தொகு
  • தேவாங்க புத்தாண்டு - நிலவின் சுழற்சியின் காலண்டர் பின்பற்றினால், அவர்கள் உகாதி நாளில் தங்கள் புதிய ஆண்டு கொண்டாடுகிறார்கள். சூரியனின் சுழற்சி காலெண்டரைப் பின்பற்றுகிறார்களானால், அவர்கள் சித்திரை நாளன்று தங்கள் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். பெரும்பாலும் உகாதியை தான் தங்கள் புதிய ஆண்டாக கொண்டாடுகிறார்கள்.
  • சித்திரை சுத்த பஞ்சமி - இது உகாதிக்கு பின்னர் ஐந்தாவது திதியில் கொண்டாடப்படுகிறது. இது தேவலர் மகரிஷியின் பிறந்தநாள் ஆகும். அவர் சிவனின் கண்ணிலிருந்து இந்த நாளில் தான் பிறந்தார்.
  • ஆடி அமாவாசை - இது ஆடி மாதத்தின் அமாவாசை நாள். அசுரர்களைக் கொல்ல தேவி சௌடேஸ்வரி இந்த நாளில் தோன்றியதாக நம்பப்படுகிறது. இது தேவியின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஆகும். மேலும் தேவாங்க மக்கள் ஒவ்வொரு அமாவாசை தினத்தையும் தங்கள் புனித நாளாக கொண்டாடுகிறார்கள், அந்த நாளில் அவர்கள் நெசவு செய்வதை நிறுத்திவிட்டு, சௌடேஸ்வரி அம்மனுக்கு தங்கள் பிரார்த்தனைகளை செலுத்துகிறார்கள்.[7]
  • தேவாங்கர்ஜனிவாரா - தேவாங்க மக்கள் ரிக் உபகர்மாவைப் பின்பற்றுகிறார்கள், பாரம்பரிய இந்து நாட்காட்டியின் படி [[ஆவணி]] பௌர்ணமி நாளில் ஜானிவராவைக் கொண்டாடுகிறார்கள் , இது வட இந்தியாவில் ரக்ஷா பந்தனின் நாளாகும். இது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஆவணி அவிட்டம் என்று அழைக்கப்படுகிறது.
  • வருடாந்திர திருவிழா (வருஷ ஹப்பா) - இது வழக்கமாக நவராத்திரி வேளையில் கொண்டாடப்படுகிறது, ஆயினும் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. இதில் கத்தி போடுதல் , மஞ்சள் நீர் மெரவனை, அம்மன் வீதி உலா ஆகியவை அடங்கும்.
  • சங்கராந்தி தேவாங்கர் சங்கராந்தி விழா கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் அவர்கள் சங்கராந்திக்கு பதிலாக பொங்கல் திருவிழா கொண்டாடுகிறார்கள்.

 

  • தொட்டு ஹப்ப (பெரிய பண்டிகை) - ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது.

 

  • 60 மொக்கு- தேவாங்கர் மக்களின் குடும்ப கோவிலில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.

 

  • தேவாங்க மக்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள், இது குடும்ப பாரம்பரியம் காரணமாக மாறுபடுகிறது, மற்றும் வம்ச பாரம்பரியத்தாலும் மாறுபடும்.

 

  • கோகுலாஷ்டமி - தேவாங்க மக்கள் கிருஷ்ண அஷ்டாமி திருவிழா கொண்டாடுகிறார்கள்.

 

  • ராமநவமி -ராமலிங்க வடிவில் இறைவனை பிரார்த்தனை செய்வதால் அவர்கள் ராமநவமியும் கொண்டாடுகிறார்கள்.

 

  • மேலும் அவர்கள் அனைத்து உள்ளூர் பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள்.

சவுடேஸ்வரி யின் பூஜை முறைகள்

தொகு

ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் க்கான பூஜை முறைகள் மற்ற தெய்வங்களிடமிருந்து வேறுபடுகின்றது . அது வட மற்றும் தென்னிந்தியாவின் கலப்பு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது . அச்சு வெல்லத்தை பயன்படுத்தி கட்டிடம் போன்ற ஒரு சிறிய வடிவத்தை கட்டுகிறார்கள்.மேலும் கூரை கரும்பால் செய்யப்படுகிறது. வெற்றிலை அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பண்டாரம் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு மஞ்சள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அலகு சேவை

தொகு

கத்தி போடுதல் என்பது தேவாங்கர் இன மக்களால் மட்டுமே செய்யப்படும் ஒரு சிறப்பு கலாச்சார சடங்கு நிகழ்வு ஆகும்.[8] புனித வாளால் ("கத்தி") "தீசுக்கோ தாயே", "தெகதுக்கோ தாயே"," தோ பாரக், தளி பராக் "என கூறிக்கொண்டே தங்களை காயப்படுத்திக் கொள்கிறார்கள். எந்தவொரு வயது வித்தியாசமின்றி தேவாங்கர் ஆண்கள் இதை செய்கிறார்கள். தேவி சௌடேஸ்வரி யை அழைப்பதற்கு இந்த வழிமுறையை தங்கள் மூதாதையர்கள் பின்பற்றி வந்ததாக நம்பப்படுகிறது. இப்போதும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. காயங்களிலிருந்து காக்க பண்டாரம் (புனித மஞ்சள் கலவை) பயன்படுத்தப்படுகிறது. இந்த நவீன நாட்களில் இளம் தேவாங்கர் மக்கள் இந்த புனித கத்திகளால் சில சடங்கு நடனம் செய்கிறார்கள். தேவாங்கரை தவிர, மற்றவர்கள் இந்த பரிசுத்த கத்தி யை தொடவும் மற்றும் இந்த சடங்கு செய்யவும் அனுமதி இல்லை. இது "கத்தி ஹாக்காது", "கத்தி போடுதல் ", "அலகு சேவை " என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பாரம்பரியத்தை கடைப்பிடிப்பவர் வீரக்குமாரர் என்று அழைக்கப்படுகிறார். [9]

 
அலகு வீரக்குமாரர்கள் (சாமுண்டீஸ்வரி ஆலய வளாகத்தின் முன்பு ,மைசூர்)

அலகு சேவை வரலாறு

தொகு

தேவலரின் ஏழாவது அவதாரமான தேவதாஸ் சௌடேஸ்வரி அம்மனுக்கு ஒரு அழகான கோவில் கட்டினார். அதில் எழுந்தருள அம்மனை கோவிலுக்கு அழைத்தார், ஆனால் வழியில் அவர் தண்ணீரில் மறைந்து போக, தேவதாசுடன் வீரர்கள் அனைவரும் சேர்ந்து தங்களை வாள்களால் காயப்படுத்தினர், உடனே மனமிரங்கிய அன்னை அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

மடாலயங்கள்

தொகு

ஹம்பி ஹேமக்கூட காயத்ரி பீடம்

தொகு

தேவாங்க குல ஜெகத் குரு ஹம்பி ஹேமக்கூட காயத்ரி பீட ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி ஸ்வாமிஜி, [10][11][12]

சம்புசைலம் காயத்ரி பீடம்

தொகு

தேவாங்க குல குரு சந்திரமவுலீஸ்வர ஸ்வாமிகள் சம்புசைலம் மடாலயத்தில் காயத்ரி தேவிக்கு பிரார்த்தனை செய்யும் காட்சி . இது ஏரிக்கரை ஜலகண்டாபுரம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலின் இடது பக்கத்தில் அமைந்துள்ளது. [13]

கோயில்கள்

தொகு

ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனின் பிரதான கோயில் கர்நாடகாவின் ஹம்பியில் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தை "தாய் ஸ்தலம்" என்று அழைக்கிறார்கள். தாராபுரத்தில் அமைந்துள்ள கோயிலும் தாய் ஸ்தலம் ஆகும். தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில்களை காணலாம். இந்த தெய்வத்திற்கான கோயில் நாடு முழுவதும் அமைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் தெய்வத்திற்கு ஸ்ரீ பனசங்கரி , ஸ்ரீ சவுடேஸ்வரி ,சௌடம்மன், சூடம்பிகை போன்ற பெயரில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

ஜகஜ்ஜாத்ரே தொட்டப்பா (பெரிய விழா)

தொகு

ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு ஐந்து நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இது ஜகஜ்ஜாத்ரே தொட்டப்பா என்று அழைக்கப்படுகிறது.

  • சக்தி - இது தேவி சக்தி க்கு உண்டான வழிபாடு ஆகும் - "இரேமனேரு" வம்ச தெய்வம் சக்தி தெய்வமாக மதித்து வணங்கப்படும்.
  • சாமுண்டி - இது தேவி சாமுண்டிக்கு உண்டான வழிபாடு ஆகும் - "ஏந்தேலாரு" வம்ச தெய்வம் சாமுண்டி தெய்வமாக மதித்து வணங்கப்படும்.
  • ஜோதி - இது ஒளி உருவான தேவி ஜோதிக்கு உண்டான வழிபாடு ஆகும் - "லத்தேகாரு" வம்ச தெய்வம் ஜோதி தெய்வமாக மதித்து வணங்கப்படும்.
  • குண்டம் -இது நான்காவது நாளில் குண்டத்திற்க்கு அர்ப்பணிக்கப்பட்ட திருவிழா."கப்பேலாரு" வம்ச தெய்வம் மதித்து வணங்கப்படும்.[14]

மேற்கோள்கள்

தொகு
  1. "MGR magic still spins votes from Coimbatore weavers - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/coimbatore/MGR-magic-still-spins-votes-from-Coimbatore-weavers/articleshow/52049522.cms. 
  2. http://www.devangakula.org/puranas.html
  3. http://www.devangakula.org/AaadiAmavaasai.html
  4. http://www.devangakula.org/DevalaMunivar.html
  5. "Erikarai Sri Ramalinga Sowdeswari Amman Jalakandapuram". sites.google.com.
  6. http://www.devangakula.org/AaadiAmavaasai.html
  7. http://www.devangakula.org/AaadiAmavaasai.html
  8. "ராமலிங்க சௌடேஸ்வரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கத்தி போடும் நிகழ்ச்சி". தினமணி (12 மே, 2016)
  9. http://www.devangakula.org/AlaguSevai.html
  10. "About Devanga Guru". Devanga.org.
  11. "Deavnga Guru and monastery". devangaworld.
  12. "Inaguration of Devanga bruhat Samavesha". yeddyurappa.in.
  13. "Devanga monastery details". devanga.org.
  14. http://www.devangakula.org/DevangarFestivals.html

வெளி இணைப்புகள்

தொகு