பேச்சு:இருவாய்ச்சி
பறவைபெயர்களுக்கு தமிழ் பெயர் தெரிந்தால் அதை சூட்டவேண்டும். நான் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளேன். --குறும்பன் 15:57, 24 மே 2011 (UTC)
இருவாய்க் குருவி
தொகுஇதன் பெயர் இருவாய்க் குருவி என மா. கிருட்டிணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்[1]. எனவே இதன் தலைப்பை இருவாய்க் குருவி என மாற்றப்பரிந்துரைக்கிறேன்.--சிவக்குமார் \பேச்சு 14:31, 16 ஏப்ரல் 2012 (UTC)
இருவாய்ச்சி
தொகுசுந்தர், சிவக்குமார், தமிழ் நாட்டுப் பறவைகள் பட்டியலில் உரைதிருத்தம் செய்தபோது எனக்கு இந்த ஐயம் எழுந்தது. சென்னைப் பேரகராதியைப் பார்த்ததில் hornbill என்னும் "மலைப் பறவைக்கு" "இருவாய்ச்சி" என்று தமிழாக்கம் உள்ளது. அதாவது "இரு வாய்கள் கொண்ட பறவை" என்பது பொருள். அதுவே மருவி, "இருவாச்சி" ஆனது என்பது பொருத்தமாக உள்ளது.
எனவே, "இருவாட்சி" என்பதை மலருக்கும் மூலிகைக்கும் பெயராக வைத்துவிட்டு, hornbill பறவையை "இருவாய்ச்சி" என்னும் தலைப்பின் கீழ் கொணர்ந்து, "இருவாச்சி" என்பதையும் "இருவாய்க் குருவி" என்பதையும் வழிமாற்றாகக் கொடுக்கலாம் என்பது என் கருத்து.
மேலும், "இருவாட்சி" என்னும் சொல் "இருள் வாசி" என்னும் சொல்லின் திரிபு என்றும், மல்லிகைப் பூ இருளில் வாசனையளிப்பதால் அப்பெயர் பெற்றது என்றும், குறுந்தொகையில் அம்மலர் "நள்ளிருள்நாறி" என வருகிறது என்றும் விளக்கம் உள்ளது.
காண்க:இருவாட்சி (மலர்)
சென்னை அகரமுதலியில் "இருவாட்சி", "இருவாய்ச்சி"
--பவுல்-Paul (பேச்சு) 17:04, 16 ஏப்ரல் 2012 (UTC)
- நன்றி சுந்தர், பவுல். கட்டுரைத் தலைப்பை இருவாய்ச்சி என்று மாற்றி விடுகிறேன்.--சிவக்குமார் \பேச்சு 19:26, 16 ஏப்ரல் 2012 (UTC)
மேற்கோள்கள்
தொகு- ↑ பக்கம் 29, பறவைகளும் வேடந்தாங்கலும், மா. கிருட்டிணன், தொகுப்பாசிரியர்: பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம்