பேச்சு:இலக்னத்திற்கேற்ப வீட்டு வாசல்

இந்தத் தகவல் எதை அடிப்படையில் வைத்து? என்ன அடிப்படையில்? இதை ஒரு சமய? நம்பிக்கை என்று குறிப்பிட்டு சொல்வது நன்று. --Natkeeran 02:55, 7 பெப்ரவரி 2007 (UTC)

இக்கட்டுரை விக்கிபீடியாவில் இடம்பெறத் தகுதியுள்ளதா?--Kanags 07:19, 7 பெப்ரவரி 2007 (UTC)

நீக்கப் பரிந்துரைக்கிறேன். --கோபி 08:00, 7 பெப்ரவரி 2007 (UTC)

வாஸ்து சாத்திரத்தில் அறிவியல் அடிப்படை உண்டு என்று மயூரனாதன் கூறுவார். ஒரு வேளை இது வாஸ்து சாத்திரத்துக்கு உட்பட்டதென்றால், மயூரனாதனும் கட்டுரையை தொடங்கிய நிரோவும் அறிவியல்பூர்வமாக மேம்படுத்த உதவலாம். இல்லாவிட்டால், நீக்கப் பரிந்துரைக்கிறேன். --Ravidreams 09:51, 7 பெப்ரவரி 2007 (UTC)

இக்கட்டுரையினையும் நீக்கி விடுங்கள்.யாருக்குத் தெரியும் இது உணமையோ கட்டுக்கதையோ?--நிரோஜன் சக்திவேல் 14:46, 7 பெப்ரவரி 2007 (UTC)

சில ஆண்டுகளுக்கு முன்னர் புகழ்பெற்ற தற்கால அறிவியலாளரான ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்களுடைய பேச்சு ஒன்றை ஒலிப்பேழையில் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் கூற்றுப்படி, ஒரு அறிவியல் கோட்பாடு என்பது இன்னொருவர் அதைப் பிழை என்று நிரூபிக்கும் வரை ஏற்றுக் கொள்ளப்படுகிறதே அல்லாமல், நிரந்தரமான உண்மை என்பது அல்ல. உலக வரலாற்றை அவதானித்தால் இதன் உண்மை புலப்படும். எனவே உலக நடைமுறைகள் அனைத்தையும் அறிவியல்பூர்வமாக நோக்குதல் என்பதில் எல்லாச் சந்தப்பங்களிலும், ஏதாவது பொருள் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. அறிவியல் யுகம் என்று வர்ணிக்கப்படுகின்ற இன்றும்கூட மனித நடவடிக்கைகள் பலவற்றில் அறிவியல் நியாயம் இருப்பதில்லை.
மனிதர்கள் மிகப்பழைய காலம் முதலாகவே தனக்கும் இந்த உலகத்துக்கும் உள்ள தொடர்பு பற்றியும், தனக்கும் இன்னொரு மனிதனுக்கு உள்ள தொடர்பு பற்றியும் சில கருத்துக்களைக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதுவே அவர்களது உலகப் பார்வை (world view) எனப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே மனிதர்கள், பல கோட்பாடுகளையும், சமயம் போன்ற பண்பாட்டு நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளார்கள். தாங்கள் புரிந்துகொண்டவைகளின் பின்னணியில் இன்னொன்றை ஊகித்து உருவாக்கிக் கொள்ளுகிறார்கள். இதிலே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அறிவியல் சம்பந்தப்படுவதில்லை. வாஸ்து சாஸ்திரம் போன்றவைகளும் இப்படிப் பட்டவைதான். அவ்வக்காலங்களின் புரிந்துகொள்ளலுக்குத் தக்கவாறு இந்தப் பிரபஞ்சத்துக்கும், வாழும் நிலத்துக்கும், கட்டிடங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையில் உள்ள உறவுநிலைகளின் விளக்கமாகவே இவைகள் உருவாகியுள்ளன. இவற்றில் அறிவியல் அடிப்படைகளைக் காணமுயல்வதை விடுத்து, அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து, மனிதப் பண்பாடுகளின் உண்மையை அறிந்துகொள்ளலாம்.
இங்கே, உண்மை, கட்டுக்கதை என்ற பிரச்சினை கிடையாது. என்னைப் பொறுத்தவரை இவைகளைப் பற்றிய விபரங்களும் விக்கிபீடியாவில் இடம்பெறவேண்டியது அவசியமே ஆனால், அவற்றை எவ்வாறு எழுதுவது என்பதுதான் முக்கியம். Mayooranathan 17:11, 7 பெப்ரவரி 2007 (UTC)
மயூரநாதன், உங்களின் அனேக கருத்துக்களுடன் ஒத்துப்போகின்றேன். உலக நடைமுறைகள் அனைத்தையும் அறிவியல் நோக்கில் அணுக முடியாது என்பது சரிதான். மூடநம்பிக்கைகளை மூடநம்பிக்கை என்று எழுதுவதில், தொன்மவியல் கதைகளை தொன்மவியல் கதைகள் என்று எழுதுவிதல் எந்த ஆட்சோபனையும் இல்லை. நீங்கள் சுட்டியபடி "அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து" எழுதுவது நன்று.
உங்களின் கடைசி வரியில் தான் எல்லாமே தங்கியுள்ளது. இல்லாவிட்டால் இனம் 1 இனம் 2 விட இழிவானது என்று ஒரு கால கட்டத்தில் கருதப்பட்டிருக்கலாம். ஆனால் அந்தக் கருத்து தவறு என்று நாம் அறிந்த பின்பும் அது ஒரு உலகப் பார்வை என்ற ரீதியில் அதை உண்மை போன்று தமிழ் விக்கிபீடியாவில் எழுத முனைவது சரியல்ல. எனது கருத்து இலக்னத்திற்கேற்ப வீட்டு வாசல் கட்டுரையை நோக்கியது இல்லை. எது பிழை எது சரியென்று சில விடயங்களை வரலாறும் அறிவியலும் எமக்கு உணர்த்தியிருக்கின்றன. எனவே, நீங்கள் சுட்டியவாறு "எவ்வாறு எழுதுவது என்பதுதான் முக்கியம்". --Natkeeran 18:25, 7 பெப்ரவரி 2007 (UTC)

நிரோ, இந்த கட்டுரையை முழுக்க நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். உண்மை என்று உங்களால் உறுதிப் படுத்திக் கொள்ள இயலாத ஒன்றை விக்கிபீடியா கட்டுரையாக தர முயல்வது தகுமா? உறுதி இன்றி எழுதி விட்டு அழிக்கச் சொல்வதால் உங்களுக்கும் அனைவருக்கும் நேர விரயம் அல்லவா? கட்டுரையில், இந்து சமயக் கூற்றின்படி என்று பொத்தாம் பொதுவாக உள்ளது. இந்து சமயத்தில் எங்கு இப்படி கூறப்பட்டுள்ளது. சோதிடத்தையும் சமயத்தையும் முடிச்சிடுவது இங்கு எவ்வாறு பொருந்தும். நீங்கள் உசாத்துணையாக கூறியவரின் தகுதி என்ற அறிய வழி இல்லை. இது போன்ற கருத்துக்களை தாங்கிய நூல்கள் சந்தையில் பல இருக்கலாம். நூல்களின் கருத்தை ஆராயாமல் அவற்றை அப்படியே விக்கிபீடியாவில் பிரதி எடுப்பது கலைக்களஞ்சிய தரத்துக்கு நன்மை பயக்காது. மயூரனாதன் கூறிய படி இதை எவ்வாறு எழுதுவது முக்கியம். வாஸ்து சாத்திரம், இது போன்ற நம்பிக்கைகள் ராசிகளின் அடிப்படையில் வீடுகளின் வாயில்கள் அமைய வேண்டிய திசையை குறிக்கின்றன - என்று சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடிய கலைக்களஞ்சிய வாசகமாக இருக்கும். இன்னின்ன இலக்கணத்துக்கு இன்னின்ன திசை என்று குறிப்பிட்டால் விக்கிபீடியாவிலேயே குறிப்பிட்டு விட்டார்கள் என்று அதை நம்புவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். இந்து சமயக்கூற்றின்படி என்ற condition statementஐ அதிகம் பேர் கவனிக்காமல் போகத் தான் வாய்ப்புண்டு. --Ravidreams 23:07, 7 பெப்ரவரி 2007 (UTC)

இப்படியான கட்டுரைகளை விக்கிபீடியாவில் எழுதுவதைத் தவிர்க்கவேண்டும். இதனை முன்னுதாரணமாகக் கொண்டு இப்படியான பல கட்டுரைகள் தோன்ற வாய்ப்புண்டு. எனவே இக்கட்டுரையை மேலும் மேம்படுத்த முயற்சிக்காமல் உடனடியாக நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--Kanags 08:02, 8 பெப்ரவரி 2007 (UTC)

இவை வெறும் நம்பிக்கையே கிருஷ்ணன்,அல்லாஹ்,ஜேசு அனைத்து கதாபாத்திரங்களும் நம்பிக்கைக் கதாபாத்திரங்களே.ஜேசு நோய் வாய்ப்பட்டவர்களை குணப்படுத்தினார் என்பதெல்லாம் நூற்கள் சொல்ல்லும் நம்பிக்கை ஆனால் அவர் இறைவனின் மகனாக ஏராளமானோர் ஏற்றுள்ளது ஏன் அது அவரவர் நம்பிக்கை இக்கட்டுரையும் நம்பிக்கை அடிப்படையில் ஏற்பட்ட கட்டுரையே.--நிரோஜன் சக்திவேல் 14:08, 8 பெப்ரவரி 2007 (UTC)

இவ்வாறான இறை வழிபாடுகளிற்கே சான்றுகள் இல்லாத போது நாம் தீபாவளி,கிறிஸ்துமஸ் என அனைத்து வழிபாட்டுக்கட்டுரைகளினையும் கொண்டாடுகின்றோம்.ஏன் அவரவர் நம்பிக்கைப் பட்டியலில் இக்கட்டுரையும் சேர்க்கக்கூடாது இது எனது கேள்வி.--நிரோஜன் சக்திவேல் 14:12, 8 பெப்ரவரி 2007 (UTC)

நிரோஜன், இங்கே கருத்துக்களை வெளியிடுபவர்கள் உங்களுக்கு எதிராகக் கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என எண்ணவேண்டாம். இங்கே வெளியிடப் பட்டுள்ள கருத்துக்கள் உங்களுக்கும், ஏனைய பங்களிப்பாளர்களுக்கும் விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவதற்கு உதவியாக இருக்கும். இங்கு பலர் சுட்டிக்காடியிருப்பதுபோல் நீங்கள் கட்டுரையை எழுதியிருக்கும் விதம் அதிலுள்ள உள்ளடக்கத்தைப் பிழையாக விளங்கிக்கொள்ள வழிவகுப்பதாக இருக்கிறது. வீடுகட்டும்போது இப்படித்தான் கட்டவேண்டும் என்ற தொனி இதிலே இருக்கிறது. அவ்வாறு எழுதுவது விக்கிபீடியா மரபுக்குப் பிழையானது. நக்கீரன் சுட்டிக்காட்டியிருப்பதுபோல் கட்டுரையை வாசிக்கும்போது, இது ஒரு சாராரின் நம்பிக்கை என்றோ, ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் கூறு என்றோ தெளிவாக விளங்கக்கூடியதாக இருக்கவேண்டும். உலகளாவிய உண்மைபோலத் தோற்றம் அளிக்கக்கூடாது.
நக்கீரனின் குறிப்பிலும் எனக்கு ஒரு சிறிய கருத்துவேறுபாடு இருக்கிறது. மூடநம்பிக்கைகளை, மூடநம்பிக்கைகள் என்று எழுதவேண்டும் என்று அவர் எழுதியிருப்பதில் ஒரு சிக்கல் உண்டு. எது மூடநம்பிக்கை எது மூடநம்பிக்கை இல்லை என்பதை யார் தீர்மானிப்பது? ஈ.வெ.ரா பெரியார், சமயம் ஒரு மூட நம்பிக்கை என்றார். ஆனால், "சமயங்கள் மக்கள் மத்தியில் நிலவும் மூட நம்பிக்கையாகும்" என்று விக்கிபீடியாவில் எழுதமுடியாது. மூட நம்பிக்கைகள் என்று சொல்லப்படுபவற்றுக்கு ஈடான விடயங்கள் அறிவியல் துறையிலும் இல்லாமல் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பிரபல அறிவியலாளர் குழந்தைப் பிரபஞ்சங்கள் என்னும் எடுகோளொன்றை முன்வைத்தார். அதுபற்றி ஒரு நூலும் எழுதி வெளியிட்டுள்ளார். பல விரிவுரைகளையும் ஆற்றியுள்ளார். இந்த எடுகோளை அடிப்படையாக வைத்து வேறுசிலரும் ஆய்வுகள் செய்து பட்டங்களும் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அண்மையில் தடாலடியாகப் பத்திரிகையாளர்களைக் கூட்டிய அந்த அறிவியலாளர் தன்னுடைய எடுகோள் பிழையானது என்று அறிவித்துவிட்டார். அந்த இடைப்பட்ட சில ஆண்டுக்காலங்கள் அதனை நம்பியவர்கள் மூடநம்பிக்கையாளர்களா அல்லவா? என்னைப் பொறுத்தவரை நான் ஒரு ஆன்மீகவாதியோ, சோதிடம் முதலியவற்றின்மீது நம்பிக்கை கொண்டவனோ அல்ல. ஆனால், அவற்றின் அடைப்படைகள் என்ன என்பதை அறிந்து கொள்வதிலும், ஆராய்வதிலும் எனக்கு ஆர்வம் உண்டு. இன்றைய மானிடவியல், நாட்டாரியல் போன்ற துறைகளிலே அறிவியல் அடிப்படையில் இதைத்தான் செய்கிறார்கள். மூடநம்பிக்கை என்ற சொல்லுக்கு எந்தப் பொருளும் கிடையாது என்பது எனது கருத்து. குறிப்பிட்ட ஒருவர் தன்னுடைய நம்பிக்கைகளுக்குச் சார்பாகத்தான் இன்னொருவரது நம்பிக்கையை மூடநம்பிக்கை என்கிறார். எனவே நடு நிலைமையோடு எழுதும் போது மூடநம்பிக்கை என்ற சொல்லைப் பயன்படுத்த முடியாது. Mayooranathan 16:27, 8 பெப்ரவரி 2007 (UTC)

மேலும் இப்பக்கத்தில் உள்ளவாறு அனைவரினையும் பின்பற்றுமாறு நான் வலியுறுத்தியெழுதவேயில்லை .அவ்வாறு இருப்பது நம்பிக்கை என்பதனையே குறித்திருக்கின்றேன்.ஒரு சமய்ம் இருப்பதாக எழுதுகின்றோம் அதனைப் பின்பற்றுவதும் பின்பற்றாததும் அவரவர் விருப்பமாகும்.இது ஒரு வெறும் நம்பிக்கைத்தகவலே அன்றி 100 சதவீதமான உண்மையானதாக இருக்குமென்று குறிப்பிடவுமில்லை.இப்படிப்பார்த்தால் இலெமூரியா கூட ஒரு ஒரு நம்பிக்கை அடிப்படையில் எழுந்த கூற்றே சிவன் தலைச்சங்கத்தில் தலைமைப் பொறுப்பினை ஏற்று நடத்தியதாக இலக்கியச் சான்றுகள் கூறுவது எந்தளவிற்கு உண்மையோ யாருக்கும் தெரியாது.ஆனாலும் அத்தகைய காரணங்களினால் சிவன் என்ற பரவலாக அறியப்படுபவர் இருந்தாரா அல்ல கற்பனையா என்பது அவரவர் ஏற்றுக்கொள்ளும் விருப்பம்.எகிப்தியர்கள் மறு பிறப்பின் மீது கொண்ட நம்பிக்கை எவ்வளவோ அதே நம்பிக்கையில் இவ்வாஸ்து சாஸ்திரங்களும் எழுதப்பட்டிருக்கலாம்.--நிரோஜன் சக்திவேல் 16:52, 8 பெப்ரவரி 2007 (UTC)

Start a discussion about இலக்னத்திற்கேற்ப வீட்டு வாசல்

Start a discussion
Return to "இலக்னத்திற்கேற்ப வீட்டு வாசல்" page.