பேச்சு:இலங்கையின் புராதன குடிகள்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by HK Arun
எந்த அடிப்படையில் இந்த கட்டுரையை வேடுவர் எனும் கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை விளக்க வேண்டுகிறேன்.
விளக்கம்:
- ஒரு நாட்டின் பழங்குடி மக்கள் என்பது, அந்த நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழங்காலத்தில் வாழ்ந்த பழைய + குடி மக்களையே குறிக்கும். அவர்கள் எவரும் தற்போது உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் அவர்களின் பரம்பரை வழியினர் இருக்கலாம். அதனடிப்படையில் இலங்கையின் பழங்குடி மக்கள் என்போர் நாகர், இயக்கர் போன்றவர்களாவர். அவர்கள் தொடர்புடையதே இக்கட்டுரை.
- அதேவேளை இலங்கையில் வேடுவர் என்போர் தற்கால பண்பட்ட (நாகரீக) உலகுக்கு ஏற்றவாறு அல்லாமல் காடுகளில் வேட்டையாடி வாழும் வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் இன்றும் எம்முடன் வாழும் தற்கால மனிதர்கள். இவர்கள் இலங்கையின் பழங்குடி மக்கள் அல்ல. இலங்கையின் பழங்குடி மக்களின் மரபினராக இருக்கலாம் என்பது வேறுவிடயம். அந்த வகையில் "வேடுவர் கட்டுரைக்கும் இக்கட்டுரைக்கும் தொடர்பில்லை.--HK Arun (பேச்சு) 13:40, 26 சூன் 2012 (UTC)
- ஒரு நாட்டின் உரிமை தொடர்பில் அந்நாட்டின் பழங்குடி மக்கள் பற்றிய ஆய்வுகள் முதன்மையாகப் படுகின்கின்றன. அந்த வகையில் இலங்கையின் 'பழங்குடி மக்கள் பற்றிய ஆய்வுக்கு, தற்காலத்தில் வாழும் வேடுவர்கள் சான்றாக [1] இருக்கின்றனர் என்பதும் வேறுவிடயம். --HK Arun (பேச்சு) 13:52, 26 சூன் 2012 (UTC)